Saturday, November 13, 2010

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்

முதல்வர் கலைஞர் கருணாநிதி கோபாலபுரத்தில் தான் வசித்து வரும் வீட்டைத் தன் காலத்துக்கும் தன் மனைவி தயாளு அம்மாள் காலத்துக்கும் பிறகு பொது மருத்துவமனையாக  ஆக்குவதற்கு நன்கொடையாக அளித்ததை உலக மகா தர்மமாக அவர் கட்சியினரும் துதிபாடிகளும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அதே நேரத்தில் உலகத்தில் ஏற்பட்ட கணிணிப் புரட்சியில் பெரும் உந்து சக்தியாக இருந்த மைக்ரோசாஃப்ட்  நிறுவனத்தை உருவாக்கிய அதே பில் கேட்ஸ்தான். இன்று உலகத்தின் மிகப் பெரும் பணக்காரர்களின் முதல் வரிசைப் பட்டியலில் இருப்பவர்.


 தானும் தன் மனைவி மெலிண்டாவும் உயிரோடு இருக்கும்போதே தங்கள் சொத்தில் பெரும் பகுதியை பொதுக் காரியங்களுக்கு நன்கொடையாகக் கொடுத்துவிடப் போவதாக பில் கேட்ஸ் அறிவித்துள்ளார்

பில் கேட்ஸின் மொத்த சொத்து மதிப்பு 53 பில்லியன் டாலர்கள். ஏற்கனவே இதில் 23 மில்லியன் டாலர் சொத்துகளை நன்கொடையாகக் கொடுத்தும் விட்டார் ! பில் கேட்ஸைப் போலவே இன்னொரு பெரும் பணக்கார தொழிலதிபர் வாரன் பஃபெட். இவரது சொத்து மதிப்பு 47 பில்லியன் டாலர்கள். இதில் ஒரே ஒரு சதவிகிதத்தை மட்டுமே தனக்கென்று வைத்துக் கொள்ளப் போவதாக அறிவித்த பஃபெட், மீதி 99 சதவிகிதமும் தான் இறப்பதற்கு முன்னால்  நன்கொடையாகக் கொடுக்கப்பட்டுவிடும் என்று தெரிவித்திருக்கிறார்.

இன்னொரு அமெரிக்கப் பணக்காரர் ஜார்ஜ் லூக்காஸ். இவருக்கும் கருணாநிதி குடும்பத்துக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இருவரும் சினிமாகாரர்கள். ஸ்டார் வார்ஸ் படங்களை உருவாக்கியவர் லூக்காஸ். இவர் தன் மூன்று பில்லியன் டாலர் சொத்தில் பெரும் பகுதியைக் கல்வித்துறைக்குத் தான் வாழும்போதே கொடுப்பதாக அறிவித்திருக்கிறார்.

பில் கேட்ஸும் வாரன் பஃபெட்டும் தங்கள் சொத்துகளை தானம் செய்வதோடு நிற்கவில்லை. அமெரிக்காவில் இருக்கும் இதர பெரும் பணக்காரர்களை அழைத்து நீங்களும் சம்பாதித்ததை இந்த சமூகத்துக்குத் திருப்பிக் கொடுங்கள் என்று பிரசாரம் செய்தார்கள்.  “ தருவதாகவாக்குறுதி அளித்தல்” ( கிவிங் ப்ளெட்ஜ்) என்ற இந்த இயக்கத்தில் இணைய, இதுவரை 40 பெரும் பணக்காரர்கள்  முன்வந்திருக்கிறார்கள்.

பதினெட்டு பில்லியன் டாலர் சொத்துள்ள புளூம்பர்க், 11 பில்லியன் சொத்துக்காரர் ரொனால்ட் பெரெல்மன், உலகத்தின் ஆறாவது பெரும் பணக்காரரும் 28 பில்லியன் டாலர் சொத்துக்காரருமான லாரி எல்லிசன் ஆகியோர் முன்வந்துள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு அமைப்புகளுக்குக் கொஞ்சம் கொஞ்சம் நன்கொடை கொடுப்பதற்கு பதில், உடனடியாக பெரிய திட்டங்களுக்கு ஆராய்ச்சிகளுக்கு பெரும் தொகைகளை இப்போதே கொடுத்து விரைவில் நல்ல விளைவுகளும் மாற்றமும் ஏற்படச் செய்யவேண்டும் என்பது பில் கேட்ஸின் கொள்கை. இப்போதே ஆப்ரிக்காவில் கொசு எதிர்ப்பு மருந்து பூசிய கொசு வலைகளைப் பெருமளவு விநியோகித்து மலேரியா ஏற்படுவதைக் கட்டுப்படுத்தியிருக்கிறது.

இதே போல பிரிட்டனிலும் தொழிலதிபர்கள் நன்கொடை வாக்குறுதி இயக்கம் தொடங்கியிருக்கிறார்கள். ஆல்பர்ட் குபே என்பவர் சூப்பர் மார்க்கெட்கள் அதிபர். சொத்து மதிப்பு 480 மில்லியன் பவுண்டுகள்.. இதில் வெறும் 10 மில்லியன் பவுண்டை மட்டும் தனக்கு வைத்துக் கொண்டு மீதியை தரப்போவதாக அறிவித்துவிட்டார். சைன்ஸ்பரி பிரபு என்பவர்  ஏற்கனவே 275 மில்லியன் பவுண்டுகளை தானம் வழங்கியிருக்கிறார்.

சாதாரண மனிதர்களாகத் தொடங்கினோம். இந்த சமூகம் இதுவரை நமக்குக்  கொடுத்தது. இனி நாம் நம் தேவைக்கு போக மீதியை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பது இவர்கள் பார்வை.

இப்படி எல்லாம் உலக பணக்காரர்களின் மனநிலை இப்படி இருக்க இங்கே ஒரு வீட்டை தானமாக அதுவும் தன் குடும்ப உறுப்பினர்களை டிரஸ்ட் உறுப்பினர்களாக கொண்டு அமைக்கப்பட்டு அதை உலகம் முழுக்க தம்பட்டம் அடித்து கொண்டு திரியும் மனிதர்களை என்ன வென்று சொல்வது .....? அதை விட கொடுமை கழக கண்மணிகள் கொடுத்ததெல்லாம் கொடுத்தான் என்று பாடல் பாடி ஊர் முழுக்க திரிவது வெட்க்ககேடு

4 comments:

vignaani said...

நல்ல பதிவு.
உலமகமயமாகல் துவங்கியபின் கடந்த பதினைந்து ஆண்டுகளில் பணக்காரன்-ஏழை இடையே உயர்வு-தாழ்வு மிக அதிகம் ஆகியுள்ளது. முகேஷ் அம்பானி சமீபத்தில் கட்டியுள்ள ஆயிரம் கோடியோ என்னமோ வீடு இதற்கு சான்றாக எழுந்துள்ளது. பில் கேட்ஸ் போல இந்தியாவிலும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஒங்க வேண்டும்.,
தமிழ் குடிகளின் தலை மகன் தானம் செய்ததை அடக்கி வாசிக்க வேண்டும் தான்

RatZ said...

nanparay um kaddurayai naan enathu muga puthagathil pathivu seithullayn marupu ethum irunthaal koorungal..........akartivida........

ஹரிஸ் Harish said...

நல்ல பதிவு நண்பா..கடைசி பேரா சொம்புதூக்கிகளுக்கு சாட்டையடி...

Unknown said...

யொவ் அவர்களேல்லாம் மனிதர்கள்.அவர்கள் உழைத்து சம்பாரித்து அதனால் உழைப்பவர்களுக்கு கொடுப்பார்கள்.இவர்கள் திருடர்கள் எப்படி கொடுப்பார்கள்.கொடுக்க இவர்கள் ராபின் ஹுட் அல்ல