முடிந்தவரை செய்வது இல்லை.
முடியும் வரை செய்வது'!
உங்களால் முடியும்.
முடியும் வரை அதை விடாமல் செய்யுங்கள்
இன்று பல்வேறு சூழ்நிலைகளால் மனிதர்கள்
துக்கம்,
வலி,
வேதனை நிறைந்த வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவைகளில் இருந்து விம்மிப்புடைத்து வெளியே வர முயற்சிக்காமல் இருந்தால்,
`இந்த வலிதான் வாழ்க்கை'
என்று ஏற்றுக்கொண்டு வாழ்ந்து,
அப்படியே வாழ்க்கை முடிந்துபோய்விடும்.
ஒரு சிறுவனிடம் ஒரு மீன் தொட்டி இருந்தது.
தொட்டியின் நடுவில் ஒரு கண்ணாடியை வைத்து அதை அவன் இரண்டாக பிரித்தான்.
நடுவில் தடையாக இருந்த கண்ணாடி `டிரான்ஸ்பிரன்ட்' ஆக இருந்ததால்
அது ஒரு தடுப்புபோல் தெரியவில்லை.
அந்த தடுப்பின் ஒரு பக்கம் ஒரு மீன் இருந்தது.
மறுபக்கத்தில் அந்த சிறுவன் உணவை போட்டு கொண்டிருந்தான்.
உணவை பார்த்த மீன் சாப்பிடுவதற்கு பசியுடன் வருகிறது.
ஆனால் உணவு அந்த தடுப்பின் மறுபக்கம் இருந்ததால்,
மீன் அந்த கண்ணாடி தடுப்பில் மீது மோதியது. இப்படியே சில முறை நடந்தது.
பின்பு அந்த சிறுவன், அந்த டிரான்ஸ்பரன்ட் கண்ணாடி தடுப்பை எடுத்துவிட்டு,
மீனுக்கு உணவு போட்டான்.
அந்த மீனோ அருகில் உணவு கிடந்தபோதும்,
தனக்கு அபார பசி இருந்தபோதும்,
கண்ணாடி தடுப்பு நினைவிலே இருந்துகொண்டு,
`நம்மால் அந்த உணவை எடுக்க முடியாது'
என்ற `நம்பிக்கை'யில், உணவை எடுப்பதற்கான முயற்சியையே எடுக்கவில்லை.
உணவு மிக அருகில் இருந்தும் அதை எடுக்காமல்,
உண்ணாமல் அந்த மீன் இறந்தே போகிறது.
அந்த மீனைப்போல் நாமும் இருக்கவேண்டாம்.
கண்ணாடி தடுப்புபோன்ற தடைகள் நம் வாழ்க்கையில் இருக்கத்தான் செய்யும்.
அதை நினைத்து நமது சிந்தனையை, செயலை முடக்கி போட்டுவிடக்கூடாது.
தொடர்ந்து முயற்சிக்கவேண்டும். முயற்சித்தால்,
கண்ணுக்கு தெரியாத தடைகள் விலகி,
நமக்கு தெரியாமலே
அது நமக்கு புதிய வழிகளை உருவாக்கித்தரும்.
1 comments:
நல்ல பல கருத்துக்கள்... பாராட்டுக்கள்...
நன்றி...
Post a Comment