Showing posts with label love. Show all posts
Showing posts with label love. Show all posts

Saturday, May 5, 2012

இது நன்றி சொல்லும் நேரம்


வீடு வீடாகப் பொருட்களை வினியோகிக்கும் அந்தச் சிறுவனுக்கு ரொம்பப் பசித்தது.
எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் அவனிடம் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிடக் கேட்கலாம் என நினைத்தான். கதவைத் தட்டினான்.
ஒரு பெண் கதவைத் திறந்தார்.
அவனுக்கோ சாப்பாடு கேட்க ரொம்பக் கூச்சம்.

`கொ... கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?'
தயக்கத்துடன் கேட்டான்.

அவர் சிறுவனின் கண்களில் இருந்த பசியைக் கவனித்தார்.

உம்ளே போய் ஒரு கப் பால் கொண்டு வந்து கொடுத்தார்.

பாலைக் குடித்துப் பசியாற்றிய சிறுவன் கேட்டான்,
`நான் எவ்வளவு கடன்பட்டிருக்கேன்?'

`கடனா? அப்படியொன்றுமில்லை.
அன்பான செயலுக்கு விலை இல்லை
என அம்மா சொல்லியிருக்கிறார்...',
அவர் சிரித்துக் கொண்டே சொன்னாம்.

`ரொம்ப ரொம்ப நன்றி...'
சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான்.

ஆண்டுகள் கழிந்தன.
அந்த சிறுவன் நகரிலேயே பெரிய டாக்டர் ஆனான்.
அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது.
அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனை வந்தது.
மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்தப் பெண்ணின் ஊரைப் படித்ததும் அவருக்கும் சின்ன மின்னல்.
விரைவாக அறைக்குப் போய் அந்தப் பெண்ணைப் பார்த்தார்.
அவளேதான்.
தனது பசியாற்றிய
நல்ல உள்ளம் படைத்தவர்.

அன்று முதல் தனது அத்தனை உழைப்பையும் செலுத்தி அவளுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தார்.
நீண்ட சிகிச்சைக்குப் பின் அவர் குணமானாம்.
பல லட்சங்கள் செலவானது.
மருத்துவமனை அந்தப் பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது.
இதை எப்படிக் கட்டப் போகிறேனோ எனும் பதற்றத்துடன்
அதைப் பிரித்த அவர் திகைத்துப் போனாம்.

அந்த பில்லின் கடைசியில் எழுதப்பட்டிருந்தது,
`ஒரு கப் பாலில் உங்கள் கடன் எல்லாம் தீர்க்கப்பட்டுவிட்டது.  
இது நன்றி சொல்லும் நேரம்.'
அவளுடைய கண்கள் கசிந்தன.

மனிதனுக்கு இருக்க வேண்டிய மகத்தான குணாதிசயங்களில்
ஒன்று நன்றி சொல்லுதல்.

அமெரிக்காவில் நீங்கள் காரில் போகிறீர்கள் என வைத்துக் கொம்ளுங்கள். ஒருவர் உங்களை முந்திச் செல்ல நீங்கள் அவருக்கு வழிவிட்டால்
அவர் உங்களுக்கு `நன்றி' சொல்லி விட்டுத்தான் போவார்.
சாலையில் ஒருவர் கடக்க நீங்கள் வண்டியை நிறுத்தினால்
அவர் `நன்றி' சொல்வார்.
கடையில் ஒரு பொரும் வாங்கும் போது கூட கடைக்காரருக்கு `நன்றி' சொல்வார்கள்.

நன்றி சொல்லும் வழக்கள் அவர்களிடம் ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. நல்லவற்றை எங்கிருந்து வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம், தப்பில்லை.

நன்றி என்பது ஒரு சின்ன வார்த்தைதான்.
ஆனால் அது மனதளவில் தரும் உற்சாகமும்,
மகிழ்ச்சியும் அளவிட முடியாதது.
அது ஒரு வார்த்தையாய் நின்று விடாமல் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஊற்றெடுக்க வேண்டும் என்பது மட்டுமே கவனிக்க வேண்டிய விஷயம்.

சின்னச் சின்ன விஷயங்களில் நன்றி சொல்லத் தெரியாதவர்களால்
பெரிய விஷயங்களிலும் நன்றி சொல்ல முடியாது
என்கிறது எஸ்தோனிய பழமொழி ஒன்று.

நன்றியைச் சொல்ல இந்த நவீன யுகத்தில் ஏகப்பட்ட வழிகள் உண்டு.
ஓர் எஸ்.எம்.எஸ், ஒரு சின்ன மின்னஞ்சல் வரி கூட உங்கள் நன்றியை எடுத்துச் செல்லலாம்.

எதிர்பாராத நேரத்தில்
ஒருவரை ஒரு `நன்றி' மூலம் மகிழச் செய்வது
அற்புதமான விஷயம்.
அந்த நபர் செய்த நல்ல பத்து விஷயங்களைப் பட்டியலிட்டு,
அதற்காக உங்களுடைய மனமார்ந்த நன்றியையோ,
பரிசையோ அளித்துப் பாருங்கள்.
அது அந்த நபருடைய வாழ்க்கையில்
ஒரு முக்கியமான தருணமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

நாம் செய்யும் மிகப்பெரிய தப்பு என்ன தெரியுமா?
கூட இருப்பவர்களுக்கு நன்றி சொல்லாமல் விடுவதுதான்.
கூடவே இருப்பதால் அவர்களுக்கெல்லாம் நன்றி சொல்லக் கூடாது
என நினைத்து விடுகிறோம்.
நன்றி என்பது அலுவல் சமாச்சாரங்களுக்கு மட்டுமானது
என தப்புக் கணக்கு போட்டு விடுகிறோம்.
கணவன், மனைவி,
அப்பா, அம்மா,
அக்கா, தங்கச்சி, தம்பி
என எல்லோருக்கும்
நன்றி சொல்வதே நல்ல பழக்கங்கள்.

`தினமும் எனக்கு நீங்க தானே காபி போட்டு தர்றீங்க,
இன்னிக்கு அதுக்கு ஒரு சின்ன நன்றியா,
நானே காபி போட்டு உங்களை எழுப்பறேம்மா'
என அம்மாவை ஒரு நாம் நெகிழச் செய்யுங்கள்.

அப்பாவுடைய
ஆடைகளை எல்லாம் இஸ்திரி போட்டு வைத்து
அப்பாவுக்கு ஒரு நாம் நன்றி சொல்லுங்கள்.
அதிகாலையில் எழுந்து வீட்டைப் பெருக்கி
மனைவிக்கு ஒரு நாம் நன்றி சொல்லுங்கள்.
இப்படி சின்னச் சின்ன அன்பின் செயல்களால்
நன்றி சொல்வது வார்த்தைகளால்
நன்றி சொல்வதை விட ரொம்ப வலிமையானது.

இன்னும் ஒரு படி மேலே போய் சிந்தியுங்கள்.
உங்கள் வீட்டில் வேலை செய்யும்
வேலைக்காரப் பெண்ணுக்கோ,
தோட்டக்காரருக்கோ,
காவல்காரருக்கோ
என்றைக்காவது
மனசார நன்றி சொல்லியிருக்கிறீர்களா?

ஒரு பாராட்டு,
ஒரு பரிசு,
ஒரு மனமார்ந்த நன்றி
என அவர்களுடைய வாழ்க்கையில்
ஒரு மகிழ்ச்சிப் பக்கத்தை எழுதியிருக்கிறீர்களா?
எல்லா மனிதரும் கடவுளின் பிம்பங்கள் என்கிறோம்,
அதில் பலவீனர்களை எப்போதுமே ஒதுக் கியே வைக்கிறோமே, தப்பில்லையா ?

சொல்லப்படாத நன்றி எப்படிப்பட்டது தெரியுமா?

`ஒருவருக்கு அழகான ஒரு பரிசுப் பொருளை வாங்கி,
அதை அருமையாக கிப்ட் கவரில் போட்டு
அப்படியே வீட்டில் வைத்திருப்பது போன்றது'
என்கிறார் வில்லியம் ஆர்தர் வேர்ட்.

யாராவது நமக்கு ஒரு கெடுதல் செய்தால்
நாம் கிழமை குறித்து மனசுக்கும் கல்வெட்டாய் வைப்பதும்,
அவர் நமக்குச் செய்த நன்மைகளை காற்றில் எழுதி காணாமல் செய்வதும் நமது பழக்கள்.
அதை அப்படியே உல்டாவாகப் பண்ணிப் பழக வேண்டும்.
தீயது செய்தால் காற்றில் எழுது,
நல்லதெனில் மனதில் எழுது.

வீட்டிலிருக்கும் குழந்தைகளுக்கும்
`நன்றி' சொல்லும் பழக்கத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
குழந்தைகள் நமது செயல்களைப் பார்த்து வளரும்.
எனவே நாம் நன்றியுடையவர்களாய் இருக்க வேண்டியது அடிப்படைத் தேவையாகி விடுகிறது.

நன்றி சொல்ல வேண்டும் எனும் மனம் இருந்தால்
உங்களுக்கு அதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கும். நல்லவற்றுக்கு மட்டுமல்லாமல்
சோதனைகள்,
பலவீனங்கள்,
தோல்விகள்
இவற்றுக்குக் கூட நீங்கள் நன்றி செலுத்தலாம்.

ஓர் அழகான ஆங்கிலப் பாடல் உண்டு.
அந்தப் பாடலின் சில வரிகளை
இப்படித் தமிழில் மொழிபெயர்க்கலாம்.

என்னிடம் இல்லாதவற்றுக்காய் நன்றி,
அவைதான் அவற்றை நோக்கி
என்னை பயணிக்க ஊக்குவிக்கின்றன.

என்னிடம் இருக்கும் குறைவான அறிவுக்காய் நன்றி,
அதுதான் என்னை கற்றுக்கொள்ள வைக்கிறது.

எனது கடினமான நேரங்களுக்காய் நன்றி,
அவைதான் என்னை
வலிமையானவனாய் மாற்றுகின்றன.

எனது குறைகளுக்காய் நன்றி,
அவைதான் எனக்கு நிறைவைத் தேடும் தாகத்தைத் தருகின்றன.

எனது பிழைகளுக்காய் நன்றி,
அவைதான் எனக்கு அனுபவப் பாடத்தை அம்ளித் தருகின்றன.

எனது சோர்வுக்காய் நன்றி,
அதுதான் எனது உழைப்பின் மேன்மையை எனக்கு உணர்த்துகிறது.

எனது சோதனைகளுக்காய் நன்றி,
அவைதான் சோதனைகளைச் சாதனையாய் மாற்றும் மனநிலையைத் தருகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஒரு ஹம்பேக் திமிங்கலம் வலையில் சிக்கிக் கொண்டது.
உடல் முழுதும் கயிறுகள் சிக்கிக் கொள்ள திமிங்கலத்தால் நீந்த முடியவில்லை.
அந்த 50 அடி நீள திமிங்கலத்தின் கட்டுகளை அறுக்க பாதுகாப்பாளர்கள் திட்டமிட்டார் கள்.

திமிங்கலம் மெல்ல வாலை அசைத்தாலே ஆம் காலியாகிவிடலாம். கட்டறுத்தபின் கோபத்தில் அது குதித்தாலும் காலி எனும் திகில் நிமிடங்களுடன் ஆட்கள் போராடினார்கள்.
கயிறுகளை அறுத்தார்கள்.
திமிங்கலம் கண்களை உருட்டி எல்லோரையும் உற்று உற்றுப் பார்த்தது. கட்டுகள் அவிழ்த்து முடித்ததும் ஆனந்தத்தில் கடலுக்கும் நீச்சலடித்தது.

பின் எல்லோரும் ஆச்சரியப்படும் ஒரு விஷயம் நடந்தது. அந்த பிரம்மண்டமான திமிங்கலம் திரும்ப வந்தது.
வந்து, கட்டுகளை அவிழ்த்த
ஒவ்வொரு நபர் முன்னாலும் சென்று
தன் முகத்தினால்
அவர்களை மெல்ல முட்டித் தம்ளி
தன் நன்றியைச் சொன்னது.
எல்லோரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

காலத்தால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது
எனும் வர்ளுவர் வரிகள்
திமிங்கலத்தின் செயலில் வெளிப்பட்டன.
நன்றி அறிவித்தல் திமிங்கலத்திடம் கூட இருக்கிறது
என்பதை அமெரிக்கப் பத்திரிகைகள்
அப்போது வியப்புடன் வெளியிட்டன.

பிடிவாதப் பார்ட்டிகளுக்காக,
நன்றி சொல்வதில் உள்ள மருத்துவத் தகவல்களையும் கையோடு சொல்லி விடுகிறேன்.

2007-ல் நடத்தப்பட்ட டாக்டர் எம்மோஸ் ஆய்வு ஒன்று, `நன்றியுடையவர்களாய் இருப்பவர்கள்
மன அழுத்தமற்றவர்களாகவும்,
நிம்மதியான தூக்கம் உடையவர்களாகவும் இருப்பார்கள்' என்றது.
இதனால் அவர்களுடைய உடலும் உள்ளமும் புத்துணர்ச்சியடைகிறது.

`நன்றி தெரிவிக்கும் தம்பதியரின் குடும்ப வாழ்க்கை நிலையாகவும், வலிமையாகவும் இருக்கும்'
என 2010-ல் நடத்தப்பட்ட இன்னொரு ஆய்வு தெரிவித்தது.

அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று,
`நன்றி தெரிவித்து வாழ்பவர்கள் ரொம்பவே ஆனந்தமாய் இருப்பார்கள்'
என தனது கண்டுபிடிப்பை வெளியிட்டது.

வாழ்க்கை ரொம்பவே அழகானது.
நமது ஐம்புலன்களும் நம்மை வினாடி தோறும் வியக்க வைத்துக் கொண்டே இருக்கின்றன.
எவ்வளவோ அழகான விஷயங்களை,
மனிதர்களைக் காண்கிறோம்.
பேச்சுகளை,
இசையைக் கேட்கிறோம்.
பலவற்றை உணர்கிறோம்.
சுவைகளை ரசிக்கிறோம்.
நமது புலன்களின் பரிசளிப்புக்கு நன்றி சொன்னதுண்டா?
இல்லாத விஷயம் கிடைக்கும்போதுதான்
நன்றி சொல்ல வேண்டுமென்பதில்லை.
இருக்கின்ற விஷயத்துக்காகவே நன்றி சொல்லலாம்.

விடைபெறுதல் என்பது முடிவுரையல்ல. இன்னோர் இடத்தில் சந்திப்போம் என்பதன் உத்தரவாதம்.

நன்றி சொன்னால் பேரழகு!
நன்றி செய்தால் பாரழகு !
எங்கோ படித்தது,
மனதில் பதிந்தது.

Sunday, April 29, 2012

இது தான் வாழ்க்கை



வாழ்வில் மகிழ்ச்சி கிடைக்க என்ன செய்ய வேண்டும் என குருவிடம் சீடன் கேட்டான்.குரு அவனை ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.

வித விதமான பட்டம் பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன.குரு சீடனை ஒரு பட்டாம் பூச்சியைப் பிடித்து வரச்சொன்னார்.எவ்வளவோ ஓடி முயன்றும் அவனால் ஒரு பட்டாம் பூச்சியைப் பிடிக்க முடிய வில்லை.

''பரவாயில்லை,நாம் இந்தத் தோட்டத்தின் அழகை ரசிக்கலாம்''எனக்கூறி குரு சீடனை தோட்டத்தின் மையப் பகுதிக்கு அழைத்துச் சென்றார்.இருவரும் தோட்டத்தின் அழகைக் கண் குளிரக் கண்டு களித்தனர்.

சிறிது நேரத்தில் அவர்களைச் சுற்றி பட்டாம் பூச்சிகள் பறக்கத் தொடங்கின.சீடன் துரத்திய பட்டாம் பூச்சி அவன் கைகளிலேயே இப்போது வந்து அமர்ந்தது.குரு சிரித்தார்.

''இது தான் வாழ்க்கை.மகிழ்ச்சியைத் தேடித் துரத்துவது வாழ்க்கை அல்ல. நாம் வாழ்வை அமைதியாக ரசிக்கும் போது மகிழ்ச்சி தானே கிடைக்கும்,''என்றார் குரு

Tuesday, April 24, 2012

எங்கோ படித்தது

அன்னை தெரசாவின் வீட்டுக்கு அருகே ஏழைக் குடும்பம் ஒன்று வசித்து வந்தது. அவர்கள் சாப்பிட்டே பல நாட்கள் ஆகியிருந்தன. இளகிய மனம் கொண்ட அன்னை தெரசா அவர்களுடைய வறுமையை அறிந்தபோது மனம் வருந்தினார். கொஞ்சம் அரிசியை எடுத்துக் கொண்டு அந்த வீட்டுக்கு விரைந்தார்.

அந்த வீட்டுப் பெண்மணியிடம் அரிசியைக் கொடுத்து பசியாற்றிக் கொள்ளச் சொன்னார். அந்தப் பெண்மணியின் கண்களில் ஆனந்த மின்னல். அடுத்த வினாடியே அந்த அரிசியில் பாதியை இன்னொரு பையில் அம்ளிக் கொண்டு வெளியே ஓடினார் அந்தப் பெண்மணி. சிறிது நேரம் கழித்து திரும்பி வந்த அந்தப் பெண்மணியிடம் தெரசா கேட்டார்.

`அத்தனை அவசரமாய் எங்கே போனீர்கள்?'

அந்தப் பெண்மணி மூச்சிரைத்துக் கொண்டே சொன்னார், `பக்கத்தில் இன்னொரு வீடு இருக்கிறது. அவர்களும் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. அவர்களும் சாப்பிடட்டுமே என்று அந்த அரிசியைக் கொண்டு போய் கொடுத்தேன்'.

அன்னை தெரசா நெகிழ்ந்தார், அந்தப் பெண்மணியின் இளகிய மனதைக் கண்டு வியந்தார்.

பகிர்தல் ஓர் அற்புதமான மனித நேயப் பண்பு. மனதில் ஒளிந்திருக்கும் அன்பின் வெளிப்பாடு பகிர்தலில் வெளிப்படும். ஆனால் அந்த பண்பை ஊட்டி வளர்ப்பதில் பெரும்பாலானவர்கள் அக்கறை காட்டுவதில்லை என்பதுதான் சோகம்.

`தனக்கு மிஞ்சியதுதான் தானம்', `ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்' என்றெல்லாம் உலவுகின்ற பழமொழிகள் உண்மையில் பகிர்தலின் அர்த்தத்தையே அழித்து விடுகின்றன. தனது தேவைக்கும் அதிகமாக, உபரியாய் இருப்பதை மட்டுமே பிறரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் எனும் ஒரு தவறான பாடத்தை இத்தகைய `கிழமொழிகள்' நமக்குச் சொல்லித் தருகின்றன.

முதலாவது, பகிர்தல் என்பது பொருள் சார்ந்த விஷயமே கிடையாது. அது நமது மனம் சார்ந்த விஷயம். பட்டினியின் விளிம்பில் கிடந்தாலும் பகிரும் மனப்பான்மையுடன் இருக்கலாம் அல்லது சுவிஸ் பேங்கில் பணத்தைப் போட்டும் சுயநலத்துடன் திரியலாம். எல்லாம் நமது மனதில்தான் இருக்கிறது.

அழிந்து வரும் உயிரினங்களைப் போல இன்றைக்கு பகிர்தலைப் பேணும் மனிதர்கள் அருகிவிட்டார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக காணக்கிடைக்கும் மனிதர்களைத் தவிர்த்துப் பார்த்தால் பலர் தங்களுக்காகவும், தங்கள் குடும்பம் அல்லது உறவுகளுக்காகவும் மட்டுமே வாழ்கிறார்கள். சொல்லப் போனால் பாதிப் பேர் தங்கள் குடும்பம் மற்றும் உறவுகளையே கூட கண்டுகொள்வதில்லை என்பது துயரத்தின் உச்சம்.

அதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. சிறு வயதில் தரப்படும் போதனைகள் அதில் ஒன்று. ஒரு குழந்தையின் மனதில் உருவாக்கப்படுகின்ற மதிப்பீடுகளுக்கு ரொம்பவே வலிமை அதிகம். பெரும்பாலும் நாம் பிம்ளைகளை டாக்டர் ஆக்க வேண்டும் என்றே ஆர்வம் காட்டுவோம். அந்த ஆர்வத்தில் ஆயிரத்தில் ஒரு பகுதியைக் கூட அவனை ஓர் இளகிய மனம் படைத்த மனிதனாக்க வேண்டும் என்பதில் காட்டுவதில்லை.

`சேச்சே.. நான் அப்படியில்லேப்பா!' என நினைக்கிறீர்களா? உங்களுக்கு ஒரு சின்ன சோதனை!

உங்கள் குழந்தையிடம் பத்து ரூபாய் கொடுத்து ஒரு பொரும் வாங்கி வரச் சொல்கிறீர்கள். போகும் வழியில் எதிர்ப்படும் ஏழைக்கு அந்த பத்து ரூபாயை அவன் கொடுக்கிறான் என வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனநிலை எப்படியிருக்கும்? அந்தக் குழந்தையின் ஈகைக் குணத்தைப் பாராட்டுவீர்களா? அல்லது இதெல்லாம் தப்பு என கண்டிப்பீர்களா?

முல்லைக்குத் தேர்கொடுக்கும் பாரியும், மயிலுக்கு போர்வை கொடுக்கும் பேகனும் நமக்கு வெறும் வரலாற்றுக் கதைகள் மட்டும்தானா? உங்கள் மகன் தன்னிடமிருக்கும் ஒரு விலையுயர்ந்த பொருளை நண்பனின் தேவைக்காய் கொடுத்தால் பாராட்டுவீர்களா? இப்போது சொல்லுங்கள்!

பகிர்தல் பதியம் போடப்பட வேண்டிய பருவம்- பால்யம்! சின்னச் சின்ன விளையாட்டுப் பொருட்களை பிறரோடு பகிர்ந்து கொள்வதிலேயே இது ஆரம்பிக்க வேண்டும். அவர்கள் எப்போதெல்லாம் பகிர்ந்து கொள்கிறார்களோ அப்போதெல்லாம் அவர்களை மனம் திறந்து பாராட்ட வேண்டும்.

குழந்தைகளுக்குக் கதை சொல்லும்போது ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் என்றெல்லாம் பேசுவதை விட, பகிர்தல், அன்பு, உறவுகள் போன்ற உயரிய கொள்கைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். டோராவும், பவர் ரேஞ்சர்களும் கொஞ்சம் ஒதுங்கியே இருக்கட்டும். சின்ன வயதில் விதைக்கும் பகிர்தல் விதை, முதுமை வயதில் கூட தழைத்து வளரும்.


கனடாவில் ஆலன்- வயலட் லார்ஜ் என்ற ஒரு முதிய தம்பதியர் வசிக்கிறார்கள். சமீபத்தில் அவர்களுக்கு ஜாக்பாட் அடித்தது! நிஜமாகவே ஜாக்பாட். லாட்டரியில் 11.2 மில்லியன் டாலர்கள். தோராயமாய் கணக்குப் போட்டுப் பார்த்தால் 55 கோடி ரூபாய் என்று வைத்துக் கொள்ளலாம். விஷயத்தைக் கேள்விப்பட்டபோது அவர்கள் சிலிர்த்தார்கள்.

ஆனால் அவர்களுடைய மனம் அந்த லாட்டரிப் பணத்தை விட வெகு விசாலமாய் இருந்தது. `இந்த பரிசுத் தொகையை முழுமையாய் ஏழைகளுக்கே அளிக்கிறோம்' என்று அவர்கள் அறிவித்தனர். உலகமே வியந்தது. மருத்துவமனைகள், புற்றுநோய் சிகிச்சை, காப்பகங்கள் என பல இடங்களுக்கு இந்தப் பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்பட்டது!

ஆனந்தம் என்பது தனக்காக வைத்துக் கொள்வதிலல்ல, பகிர்தலில் என்பதைப் புரிந்து கொண்டதுதான் அந்த தம்பதியரின் வெற்றி. அவர்களுடைய வாழ்க்கை நிச்சயம் ஆனந்தத்தின் வீதிகளில் இளைப்பாறும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.

பகிர்தல் எப்போதும் பொருளாதாரம் சார்ந்ததாய் இருக்க வேண்டுமென்பதில்லை. ஒரு நல்ல ஆலோசனை, ஓர் ஆறுதலான வார்த்தை என எதுவாகவும் இருக்கலாம். ரொம்ப சோர்வாக இருக்கும் உங்கள் நண்பருக்கு ஒரு சின்ன புன்னகையை அளிப்பதில் கூட பகிர்தலின் சுகம் இருக்கிறது.

பகிர்தல் என்பது பூமராங் போல! அதை நாம் செய்யச் செய்ய அது நம்மைத் தேடி வந்து கொண்டே இருக்கும். ஆனால் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி பகிர்தலை மனதுக்கும் எழுதிக் கொள்ள வேண்டும். பகிர்தல் அன்பின் வெளிப்படாக இருக்க வேண்டுமே தவிர அது ஒரு கட்டாய நிகழ்வாய் இருக்கக் கூடாது. பகிர்தலை பழகிக் கொண்டவர்கள் மன அழுத்தம் அடைவதில்லை என்கின்றனர் உளவியலாளர்கள்.

அமெரிக்காவின் ஆரிகன் பல்கலைக்கழகத்தில் ஓர் ஆராய்ச்சி நடத்தினார்கள். ஹார்வர்டு பேராசிரியர் மைக்கேன் நார்டன், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக எலிசபெத் டன் மற்றும் லாரா அக்கின் இதை நடத்தினார்கள். `பிறருக்குக் கொடுக்கும்போது நமது உடலில் ரசாயன மாற்றங்கள் நிகழ்கின்றன. மூளை சுறுசுறுப்பாகிறது. மனம் ஆனந்தமடைகிறது' என இந்த ஆராய்ச்சி முடிவு வெளியிட்டது.

வெல்லெஸ்லி பல்கலைக்கழக பால் விங்க் தனது ஆராய்ச்சியில் `பரந்த மனப்பான்மை உடையவர்கள் உடலளவிலும், மனதளவிலும் உற்சாகமாகவும், ஆனந்தமாகவும் இருப்பார்கள்' என்கிறார்.

இப்போது சொல்லுங்கள், கொடுப்பதால் பயன் பெறுவது கொடுப்பவர்களும்தானே?

பகிர வேண்டும் எனும் மனம் நமக்கும் இருக்கும் போது வாய்ப்புகள் எப்போதும் நமது கண்களுக்கு முன்னால் தெரியும். பேருந்தில் பயணம் செய்யும் போது உங்கள் இருக்கையை இன்னொருவருக்குக் கொடுப்பதில் ஆகலாம். உங்கள் வாகனத்தை இன்னொருவரின் தேவைக்கு பகிர்வதில் ஆகலாம். இப்படி, நீங்கள் வாய்ப்புகளைக் கண்டறிந்துப் பயன்படுத்தப் பயன்படுத்த உங்களுக்கும் பகிர்தல் இயல்பு வேர்விட்டு வளரும்.

அவ்வப்போது ஏதேனும் கசப்பான நிகழ்வுகள் நேரலாம். அதை ஒரு தடைக்கல்லாக வைத்துக் கொண்டு பகிர்தல் குணத்தை மூட்டை கட்டி மூலையில் போடாதீர்கள்.

வீண் செலவு செய்யும் ஓட்டைக் கை ஆசாமிகள் வீணாய் செலவிடும் பணத்தை நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்திப் பாருங்கள். கொடுப்பதில் கிடைக்கும் ஆனந்தம், சும்மா செலவிடுவதில் இல்லை என்பதை உணர்வீர்கள். அதிக பணம் கொடுத்து வாங்கி வீட்டில் சும்மா இருக்கும் ஒரு பொரும் உங்களை மன அழுத்தத்தில் தம்ளும். ஆனால் ஒருவருடைய தேவைக்கு அளிக்கும் பணம் எப்போதுமே மனதை உற்சாகப்படுத்தும்!

இளைஞர்கள் நாட்டின் குருதிக் குழாய்கள். உங்களிடையே பகிர்தல் வேகள் பரவுகையில் ஒரு தேசமே வளம் பெறும். உங்கள் பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரிடமும் பகிர்தல் சிந்தனையை உருவாக்க முயலுங்கள். சமூக மாற்றத்துக்கான உங்களுடைய பங்களிப்பாகவும் அது அமையும்.

ஒரே ஒரு தீக்குச்சியின் உரசலில் உருவாகும் நெருப்பு, ஒரு மெழுகுவர்த்திக்குத் தாவி, பின் இன்னொன்றுக்குத் தாவி, ஆயிரக்கணக்கான வெளிச்சப் பும்ளிகளுக்கு விதையாகும். நல்ல செயல்களும் அப்படியே! அவை நில்லாமல் நகர்ந்து கொண்டே இருக்கும்!

`உன்னால் நூறு பேருக்கு உணவு கொடுக்க முடியா விட்டால் பரவாயில்லை, ஒருவருக்குக் கொடு' என்கிறார் அன்னை தெரசா!

கொடுங்கள்! எவ்வளவு கொடுக்கிறோம் என்பதல்ல. எந்த மனநிலையில் கொடுக்கிறோம் என்பதே முக்கியம். ஒவ்வோர் பகிர்தலிலும் அடி நாதமாய் அன்பு இருக்க வேண்டும். நம்முடைய மகிழ்ச்சியை விட அடுத்தவருடைய மகிழ்ச்சி நமக்கு முக்கியமானதாய் தோன்றும்போது நமக்கும் பகிர்தல் பெருங்கடலாய் விரியும்.

பல நேரங்களில் நமக்கு அந்த மனநிலை வருவதில்லை. `இந்த நிலமைக்குக் காரணம் நீதான்', `அப்பவே சொன்னேன் நீதான் கேக்கல', `உனக்கு அந்தத் தகுதி இல்லை' இப்படி ஏதாவது ஒரு சாக்குப் போக்குக்குப் பின்னால் நம்முடைய கல் மனதை ஒளித்து வைக்கிறோம்! `அருகதையற்ற நபர்' என ஒருவரை நாம் எந்த சூழலிலும் தீர்ப்பிடவே கூடாது! பாத்திரம் அறிந்து பிச்சையிட வேண்டிய அவசியம் இல்லை. தேவை அறிந்து உதவினால் போதும்!

இருப்பதில் கொடுப்பது பகிர்தலின் துவக்கம்.. இருப்பதெல்லாம் கொடுப்பது பகிர்தலின் சிகரம். இல்லாததைக் கூட கொடுக்கலாம் என்பது பகிர்தலின் மகத்துவம்! பகிர்தலில் நாம் உலகிற்கு முன்னோடி! வயலில் விதைத்த விதை நெல்லையே பொறுக்கி வந்து, அடைக்கலமாய் வந்தவருக்கு உண்ணக் கொடுத்த பகிர்தலின் வரலாறு நமக்கு இருக்கிறது!

பகிர்வோம், வளர்வோம்!

அன்பே பகிர்தலின் அச்சாணி
அதுவே வாழ்வின் உச்சாணி!

நன்றி-தினத்தந்தி