Monday, April 2, 2012

எனக்கு புத்தி சொன்னால் பிடிக்காது

மின் பற்றாக்குறையை தீர்க்க சில யோசனைகள்.

வியாபார நிறுவனங்கள், ஜவுளி கடைகள், நகைகடைகள், ஷோ ரூம்கள், உயர் ரக உணவு விடுதிகள், ஸ்டார் ஹோட்டல்கள், மின்சாரத்தை அதிக அளவில் பயன் படுத்தும் வசதி படைத்தவர்கள் என தனி தனியே கண்டறிந்து அவர்கள் பயன் படுத்தும் மின்சாரத்திற்க்கு அதிக கட்டணம் வசூலிக்கலாம். அல்லது சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்த சொல்லி ஊக்குவிக்கலாம்.

அரசு அலுவலகங்களில் சூரிய ஒளி திட்டத்தை செயல்படுத்தி முன் மாதிரியாக செயல் படுத்தலாம். தமிழ் நாட்டில் ஐந்தாயிரத்திற்க்கு மேற்பட்ட செல் போன் கொபுரங்கள் இருப்பதாக  புள்ளி விவரம் தெரிவிக்கிறது, அவைகளில் சூரிய ஒளி மின் திட்டத்தை செயல் படுத்த ஊக்குவிக்கலாம் மின் பற்றாகுறையால் அவர்கள் டீசலை பயன்படுத்தி டீசல் தேவையையும் அதிகரிக்கின்றனர். பெட்ரோல் விலை உயர இதுவும் ஒரு காரணமாகும்.

மின் விநியோகத்தைச் சீரமைக்க வேண்டும். தமிழகத்தில் ஒவ்வொரு துறைக்கும் வேறு வேறு தேவைகள் இருக்கின்றன. இந்தத் துறைகளில் அதிக மின்சாரம் தேவைப்படுவது தொழில் துறைக்கும், விவசாயத்துக்கும்தான்.

தொழில் துறையை எடுத்துக் கொண்டால், ஒரு ஷிப்ட், இரண்டு ஷிப்ட், மூன்று ஷிப்ட் மற்றும் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக இயங்கக் கூடிய தொழிற்சாலைகள் என்று நான்கு வகையாகப் பிரிக்கலாம். இவற்றில் சுமார் 70 சதவிகித தொழிற்சாலைகள் ஒரே ஷிப்ட்டில் இயங்குபவைதான். ஆனால், மூன்று ஷிப்ட்டில் இயங்குபவையாகக் கணக்கு காட்டுகின்றன. இதை முதலில் அரசு கெடுபிடியுடன் ஆராய்ந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டாலே பாதி பிரச்னைகள் குறையுமாம்.

மின் விநியோகம் தேவைப்படுகிற தொழிற்சாலைகள், வீடுகள், மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் ஒரே வரிசையில்தான் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதைத் தவிர்க்கலாம். 24 மணி நேரமும் மின்சாரம் தேவைப்படுகிற வீடுகள், மருத்துவமனைகள் போன்றவற்றை ஒரே வரிசையிலும், மற்ற துறைகளுக்கு தேவைப்படும் நேரத்தில் மட்டும் மின்சாரம் வழங்குகிற வகையிலும் வரிசைப்படுத்தி வைக்கலாம்.

'தேவையின் அடிப்படையில் ஆற்றல் மேலாண்மை' என்ற கருத்தின்படி நாம் செயல்பட ஆரம்பிக்க வேண்டும். இன்றைக்கு இருக்கும் விநியோக நடைமுறை என்பது 'ஆர்பிட்ரரி ரேஷனிங்' எனும் மனம்போன போக்கில் விநியோகிக்கப்படுவதாகத்தான் இருக்கிறது. இந்தத் துறைக்கு இவ்வளவு, அந்தத் துறைக்கு இவ்வளவு என்று சொல்லி தேவையைப் பார்த்து மின் விநியோகம் செயல்படுத்தப்படுவதில்லை. கேட்கும் நிறுவனங்களுக்கு எல்லாம் இஷ்டத்துக்கு மின்சாரம் வழங்கப்படுகின்றன என்பதுதான் இன்றைய நிலைமை.


மானியங்களை நிறுத்த வேண்டும். அல்லது, அதைக் குறைக்க வேண்டும். இதுதான் இன்று தமிழக மின்சார வாரியத்தையே குழிதோண்டிப் புதைத்திருக்கிறது. இலவச மின்சாரம், குறைந்த விலையில் மின்சாரம் என்பது எல்லாம் யாருக்காகக் கொடுக்கப்பட்டது? விவசாயிகளுக்கும் ஏழை மக்களுக்கும் தான் ஆனால், இந்த மானியங்களைப் பெரு நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன!

எந்தெந்த துறைக்கு எத்தனை சதவிகித மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்று கணக்கிடப்படவில்லை.

பரவலான முறையில் மின் உற்பத்தி செய்தல். அதாவது, மின்சாரத்தை உற்பத்தி செய்ய நீர், அனல் என்ற மரபுசார்ந்த வழிகளை மட்டும் யோசிக்காமல், சூரிய சக்தி, காற்றாலை போன்ற மரபுசாரா மாற்று எரிசக்தி மூலம் மின் உற்பத்தியைப் பெருக்குவதையும் சிந்திக்க வேண்டும்.

விநியோகம் மற்றும் இறுதிப் பயனாளியான நுகர்வோர்க்கு மின் வழங்குதல் என்பதில்தான் பிரச்னை இருக்கிறது. அதைச் சரிசெய்யவும் இன்று தொழில்நுட்பங்கள் இருக்கின்றன.

அனைத்து வீடுகளிலும் குண்டு பல்பு பயன்படுத்த தடை விதித்து சி.ஃப்.எல். பயன் படுத்த அறிவுருத்தலாம். தெரு விளக்குகளுகாக நாம் அதிக அளவில் மின்சாரத்தை செலவழிக்கின்றோம் அதை மாற்றி அதிலும் சூரிய ஒளி மின் திட்டத்தை பயன் படுத்தலாம், குறைந்த பட்சம் கிராமங்களிலுள்ள தெரு விளக்குகளையாவது எறிய செய்யலாம்.

இந்தப் பொருள் மின்சாரத்தைக் குறைவாகப் பயன்படுத்தும்' என்று குறிப்பிடும் 'Energy Efficiency Labelling' முறை கட்டாயமாகச் செயல்படுத்தப்பட வேண்டும். அத்தகைய பொருட்களைப் பயன்படுத்த மக்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

இந்தப் விஷயங்களைச் செய்தால் இப்போதிருக்கும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரலாம். இப்போதைக்கு குறைந்த பட்சம் போக்குவரத்து சிக்லனிலாவது சூரிய  ஒளி மின் திட்டத்தை  பயன் படுத்தலாம்.தமிழக அரசு இது போன்ற செயல்களில் உடனடியாக இறங்க வேண்டும். இதையும் மீறி எனக்கு புத்தி சொன்னால் புடிக்காது என்று அரசு கூறினால் தமிழகம் இருளில் மூழ்குவது நிச்சயம்.

7 comments:

ப.கந்தசாமி said...

நல்ல யோசனைகள். ஆனால் கேட்பதற்குத்தான் ஆளில்லை!

கோவை நேரம் said...

அப்படியே...அம்மாவுக்கு மெயில் போடுங்க...

இராஜராஜேஸ்வரி said...

.தமிழக அரசு இது போன்ற செயல்களில் உடனடியாக இறங்க வேண்டும். இதையும் மீறி எனக்கு புத்தி சொன்னால் புடிக்காது என்று அரசு கூறினால் தமிழகம் இருளில் மூழ்குவது நிச்சயம்.

சிறப்பான யோசனைகள்..

Lakshmana Perumal said...

I have also written an article about Tamilnadu electricity tarriff hike. I have attached the below link for further details.
http://lakshmanaperumal.com/2012/04/02/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a3-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81/

கூடல் பாலா said...

நல்ல யோசனைகள் ...ம்ம்ம்ம்ம் ...பெருமூச்சுதான் விட முடிகிறது....

J.P Josephine Baba said...

நல்ல யோசனை!

ஆத்மா said...

நல்ல யோசனை நீங்க மினிஸ்டர் ஆகலாம்...