Tuesday, August 24, 2010

இது வரை

திரைப்படதுறை மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்காக சென்னை அருகே பையனூரில் 15 ஆயிரம் வீடுகள் அரசு சார்பாக கட்டிதர ஏற்பாடு செய்யப்படுகிறது. அதற்கு கலைஞர் நகர் என்று பெயரிடப்பட்டுள்ளது வீடு கட்ட அடிக்கல் நாட்டும் விழா சென்னையில் நடைபெற்றது.

15 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்க்கு மகிழ்ச்சி தான் திரை உலகில் நீங்கள் 60 ஆண்டுகள் பணியாற்றி உள்ளீர்கள் அதற்காக இந்த கைமாறு சரி தான் படப்பிடிப்புக்கு கட்டணம் குறைப்பு, தமிழ் நாட்டில் தமிழ் பேசும் மக்களுக்காக தயாரிக்கபடும் தமிழ் படங்களுக்கு தமிழிலேயே பெயர் வைத்தால் வரிச்சலுகை, தமிழ் பெயரிட்டால் கேளிக்கை வரி இல்லவே இல்லை என்ற கேலிகூத்தான அறிவிப்பு 23ம் புலிகேசி போல் அறிவித்தீர்கள்.

வாரிசு அரசியல் பற்றி பேசியுள்ளீர்கள் கபூர் குடும்பத்தினர், நேரு குடும்பத்தினர், இன்னும் பல குடும்பங்களை பற்றி பேசியுளீர்கள்  உங்கள் சந்ததியினர் திரைதுறையில்  வருவதை யாரும் எதிர்க்கவில்லை வரவேற்க தான் செய்கிறார்கள். திரை உலகும் அரசியல் உலகும் உங்கள் இரு கண்கள் என்று தமிழ்நாட்டில் அனைவருக்கும் தெரியும் இருந்தாலும்,
தொடர்ந்து திரைதுறையினருக்கு அள்ளி அள்ளி கொடுப்பது
மக்களிடையே சிறிது அதிருப்தி ஏற்ப்பட்டுத்தியுள்ளது

ஒட்டு மொத்த மக்கள் வரிபணத்தை இப்படி வாரி கொடுத்து
ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டும் பயனடைய செய்வது உண்மையில் எந்த வகையில் நியாயம், தமிழ் நாட்டில் வீடில்லாதவர்கள் எத்தனை லட்சம் பேர் இருக்க திரைபடதுறையினருக்கு மட்டும் ஏன் இந்த சலுகை ....... ?

திரை படதுறை பாதாளத்தில் வீழ்ந்து கிடந்தால் இந்த சலுகை சரி தான் ஆனால் நடப்பது என்ன ......... ?,  தங்கள் பேரங்களால் இந்தியாவிலேயே அதிகமான பொருட்செலவில் தயாரிக்கபடும் திரைப்படம் என்று கூறப்பட்டு  மலேசியாவில் அதன் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
அதற்கு கூட நீங்கள் வாழ்த்து சொன்னீர்களே இங்கு சமீபத்தில் எடுக்கப் படும் திரைபடங்கள் அனைத்தும் பல கோடிகள் செலவழித்து எடுக்க படும் திரைபடங்கள் என்று தங்களுக்கு தெரியாதா....? 
தங்கள் பேரன்களால்   எடுக்கும் படங்கள் அனைத்தும் கோடிகணக்கில் செலவழித்து பல கோடிகள் லாபத்துடனேயே விற்கபடுகிறது. 

இப்படி பல கோடிகள் லாபம் ஈட்டும் தொழிலாக இன்று வளர்ந்து நிற்கிறது திரை உலகம், எத்தனை நடிகர்கள் கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்கள் என்று தங்களுக்கு தெரியாதா ...... ?

ஏன் அவர்கள் எல்லாம் இதில் பங்கெடுத்து கொள்ள கூடாது
இந்த சின்ன சின்ன கலைஞர்களை வைத்து தானே இவர்கள் இன்று கோடிகளில் புரள்கிறார்கள் அவர்கள் அனைவரும் சிறு சிறு பண உதவிகளை ஏன் செய்யவில்லை நீங்கள் ஏன் அதை முன் வைக்கவில்லை......?
 முழுக்க முழுக்க அரசு வரிபணத்தை கொண்டே செயல் படுத்தினால் தான் நடக்குமா ......... ?
 நீங்கள் சொன்னால் ரஜினி, கமல், சரத்குமார், ராதிகா, சூர்யா, படத்தயாரிப்பில் ஈடுபடும் உங்கள் பேரன்கள்,சன் குழுமத்தினர்,தயாரிப்பளர்கள் இசை அமைப்பளர்கள் ரகுமான், இளையராஜா இப்படி பல பேர் செழிப்புடனே இருக்க மக்கள் வரிபணத்தை ஏன் இப்படி வீணாக்குகிறீர்கள் ............. ?

 திரை உலகு மிகுந்த செழிப்புடன் தான் செயல்படுகிறது உங்களை யாரும் திரைதுறையினரிடமிருந்து பிரிக்க முற்படவில்லை
நீங்கள் கவலையும் கொள்ள தேவையில்லை அப்படி கவலை படுவதென்றால் நாட்டு ஏழை எளிய மக்களை பற்றி கவலை படுங்கள்,

மின்பற்றாகுறையை பற்றி கவலை படுங்கள், சென்னை தவிர்த்து எந்த ஊரிலாவது உருப்படியான சாலை இருக்கிறதா அதை பற்றி கவலை படுங்கள் சமுதாயத்தில் யாருக்கு கேடு வரினும் அவற்றில் என்னையும் இணைத்து கொண்டு அதை நீக்குவதிலே முதல் ஆளாக இருப்பேன் என்று கூறியுள்ளீர்கள் வரும் தேர்தலிலே உங்கள் கண்ணுக்கு கண்ணான திரைதுறை கண்மணிகள்  எத்தனை பேர் அ.தி.மு.க பக்கம் சாய்கிறார்கள் என்று அனைவரும் பார்க்கதான் போகிறோம். இது வரை நீங்கள் அள்ளி கொடுத்தது போதும் ஓட்டு போட்ட மக்களுக்கு ஏதாவது பயனுள்ள வகையில் செய்ய முற்படுங்கள்
ஐயா ....

3 comments:

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

திரைப்பட துறையில் அடிமட்ட தொழிலாளர்கள் செழிப்புடன் இருப்பதாக யார் தங்களுக்கு சொன்னார்கள்?

ஆயிரத்தில் ஒருவன் said...

திரைதுறையில் இன்று பல பேர் உயர்ந்திருக்கிறார்கள் என்று தான் கூறியிருக்கிறேனே தவிர ஒட்டு மொத்தமாக சொல்லவில்லை அடி மட்ட தொழிலாள்ர்களுக்காக அந்த குடியிருப்பு கட்ட நான் ஒன்றும் எதிர்க்க வில்லை வளர்ந்தவர்கள் பயன் அடைந்தவர்கள் நிதி உதவி அளிக்கலாமே என்று தான் கூறியிருக்கிறேன் (தளத்தை பார்வையிட்டு கருத்துரையிட்டதற்க்கு நன்றி தொடர்ந்து தளத்தை பார்வையிடவும்)

ராசராசசோழன் said...

உங்கள் கருத்துகள் மிக மிக யோசிக்க வேண்டிய விஷயங்கள்...ஆளுபவர்கள் நல்லது செய்வதே பெரிய விஷயம்...