Thursday, August 12, 2010

ஏன் பெண் என்று பிறந்தாய்

செய்தி-1
கணவரின் வீட்டை விட்டு வெளியேறிய குற்றத்துக்காக, இளம் பெண் ஒருவரின் மூக்கு மற்றும் காது, தலிபான்களால் துண்டிக்கப்பட்ட கொடூரம் ஆப்கனில் நிகழ்ந்துள்ளது.

அந்த இளம்பெண்ணின் பெயர் பீபி ஆயிஷா. தற்போது அவருக்கு 18 வயதாகிறது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். பத்து வயதாகும்போதே, தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து, ஆயிஷாவை பணத்துக்காக விற்பனை செய்து விட்டார்,

அவரது தந்தை. அதற்கு பின், இரண்டு ஆண்டுகளுக்கு நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு கொடுமைகளை சந்தித்தார்,
ஆயிஷா. கணவரின் தந்தை, சகோதரர்கள் உள்ளிட்டோர் ஆயிஷாவை தினமும் கொடுமைப் படுத்தி வந்தனர். ஒரு கட்டத்தில், இங்கிருந்து எப்படியாவது வெளியேறி விடவேண்டும் என்று முடிவெடுத்து. அங்கிருந்து தப்பிச் சென்றார்.

ஆனால், இந்த நிம்மதி அவருக்கு நீண்ட நாள் நீடிக்கவில்லை. கடந்தாண்டு அவரது கணவர், ஆயிஷாவை கண்டு பிடித்து விட்டார். ஒருஜ்கான் என்ற இடத்தில் செயல்பட்டு வந்த தலிபான் கோர்ட் முன், ஆயிஷா நிறுத்தப்பட்டார். வீட்டை விட்டு ஓடிப்போன குற்றத்துக்காக ஆயிஷாவின் மூக்கையும், காதையும் அறுக்கும்படி தலிபான் கோர்ட், கடுமையான தண்டனை விதித்தது.

உயரமான மலைப் பகுதிக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். ஆயிஷாவின் கணவரின் சகோதரரும், மற்றவர்களும் அவரை கீழே படுக்க வைத்து, அசையவிடாமல் பிடித்துக் கொண்டனர். பின், அவரது கணவர் கத்தியுடன் வந் தார். முதலில் ஆயிஷாவின் காதை கத்தியால் வெட்டினார்.

இதன்பின், அவரது மூக்கையும் துண்டித்தார். வலியால் கதறித் துடித்தார், ஆயிஷா. இறந்து விடுவார் என, நினைத்து அவரை மலைப் பகுதியிலேயே விட்டு, விட்டு போய்விட்டனர்.
இதன்பின், எப்படியோ அங்கிருந்து தப்பிச் சென்றார்.
காபூலில் பெண்களுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் அகதிகள் முகாமில், ஆயிஷா தஞ்சம் அடைந்தார்.
அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால் சேதமான உறுப்புகளுடன் தற்போது உயிர் வாழ்கிறார். கடந்த சில மாதங்களாக அங்கு தான் அவர் தங்கியுள்ளார்.

அகதிகள் முகாமுக்கு ஏராளமான மீடியாக்காரர்கள் வந்து சென்றனர். அவர்களுக்கு, ஆயிஷாவின் பரிதாப நிலை குறித்து தெரியவந்தது. இதற்கு பின், அமெரிக்காவின் "டைம்' பத்திரிகையில், சிதைந்த முகத்துடன் ஆயிஷா விரக்தியுடன் காட்சி தரும் புகைப்படங்கள் வெளியாயின. இந்த பரிதாப காட்சியை பார்த்த மக்கள், அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.

இதுகுறித்த தகவல், அமெரிக்காவில் உள்ள பல்வேறு அமைப்புகளுக்கும் தெரியவந்தது. நல்ல உள்ளம் கொண்ட சிலர், ஆயிஷாவின் சிதைந்த மூக்கு மற்றும் காதை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்ய முன்வந்தனர். இதற்கு ஆயிஷாவும் சம்மதித்தார். இதற்காக அவர் விரைவில் அமெரிக்காவுக்கு செல்லவுள்ளார்

செய்தி-2
ராமேஸ்வரத்தில் தி.மு.க.,நகராட்சி தலைவர் சொந்தமான கட்டடத்தில் "கேங் ரேப்பிங் ' கில் ஈடுபட்ட நகராட்சி தலைவர் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை ஜெயிலில் அடைக்கும்படி கோர்ட் உத்தரவிட்டது.இதற்கிடையே, மருத்துவ சோதனைக்காக அழைத்து செல்லப்பட்ட இவர்கள், ராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் "அட்மிஷன்' போட்டு, அங்கேயே தங்கி உள்ளனர்.

இதற்கு முன் பல்வேறு குற்ற வழக்குகளில் போலீசாரிடம் பிடிபடாமல் தப்பிய ஜலீலை, கற்பழிப்பு சம்பவத்தில் தப்பக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக செயல்பட்ட போலீசார் , ராமேஸ்வரம் டி.ஸ்.பி., கமலாபாய்க்கே தெரியாமல், இந்த "ஆபரேசனை' முடித்துள்ளனர்.

வழக்கமாக குற்றச்சம்பவங்களில் ஜலீல் ஈடுபட்ட போதெல்லாம் அவரை தப்பவைக்க ,ராமேஸ்வரம் டி.எஸ்.பி., உறுதுணையாக இருந்துள்ளதாக, ஏற்கனவே உயர் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் புகார் உள்ளது. ஜலீலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் எதிர் கட்சியினர் பல்வேறு சம்பவங்களில், புகார் செய்வது, ஆர்ப்பாட்டம் நடத்துவது போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன.

இந்நிலையில், கும்பலால் நிர்வாணப்படம் எடுத்து மிரட்டி, கற்பழிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட யாஷ்மின்பானு, தகுந்த ஆதாரங்களுடன் ராமநாதபுரம் எஸ்.பி.,பிரதீப்குமாரிடம் புகார் கொடுக்கவே, இவரது புகாரின் படி நடவடிக்கை எடுக்க ராமேஸ்வரம் இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிட்டார்.

"கேங் ரேப்பில்' ஈடுபட்டவர்களை கைது செய்யும் வரை, வேறு யாருக்கும் தெரியக்கூடாது என்றும், முக்கியமாக ராமேஸ்வரம் டி.எஸ்.பி., க்கு தெரியக்கூடாது என்ற உத்தரவும் மேலிடத்தில் இருந்து வந்துள்ளது.
 இதனிடையே ஜலீலை கைது செய்ய தமிழக முதல்வரிடமும் அனுமதி கேட்கப்பட்டு, "கிரீன் சிக்னல்' கிடைத்தவுடன்தான் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம்,சேசு ஆகியோர் நள்ளிரவு 11 மணிக்கு ஜலீல் உள்ளிட்டஆறு பேரை கைது செய்துள்ளனர். மறுநாள் காலை ஐந்து மணிக்குத்தான் டி.எஸ்.பி.,உள்ளிட்ட சக போலீசாருக்கு இது தெரியவந்துள்ளது.

செய்வதறியாது திகைத்த தி.மு.க.,பிரமுகர்களும் அமைச்சர், எம்.பி.,என பலதரப்பினரின் சிபாரிசையும் எதிர்பார்த்தனர்.
ஆனால், அது நடக்காது என தெரிந்தபின், சிறைக்கு செல்வதையாவது தள்ளிப்போடுவோம் என இரண்டு நாட்களாக மருத்துவமனையில் நாட்களை கடத்திவருகின்றனர். சில நாட்களுக்கு முன் நடந்த "ஹம்லா ஆபரேசனில்' கோட்டைவிட்டதில் துவண்டுபோன ராமேஸ்வரம் போலீசாரோ, நகராட்சி தலைவர் ஆபரேசனை(கைது) சாதித்துவிட்டோம் என்ற சந்தோஷத்தில் உள்ளனர்.

இந்த வெறி பிடித்த மிருகத்தை பிடிக்க முதல்வரிடம் அனுமதி கேட்டு பிறகு அவர் அனுமதித்த பிறகே கைது படலம் நடந்தேறியுள்ளது.
இது போன்ற கேவலமான நிகழ்வுக்கெல்லாம் முதல்வர் தலையீடு இருக்குமென்றால், என்ன கொடுமை இது
மிருகங்கள் போல கூட்டமாக இதில் ஈடுபட்ட அனைவரையும் தூக்கில் போட வேண்டும்.இரண்டு செய்திகளிலிலும் பெண்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்தியுள்ளனர்.

நான் பதிவுலகில் சமீபமாக தான் எழுதி வருகிறேன் எனக்கு தெரிந்து பெண்கள் ஒரு சிலரே பதிவு எழுதி வருகின்றனர் அவர்களும் சமையல் குறிப்பு, பிளாகர் ஆலோசனை, அழகு குறிப்பு, கவிதை, கட்டுரை சிறு கதை இது போன்ற தலைப்புகளிலே தான் எழுதி வருகின்றனர்.
பெண்ணடிமை குறித்து எவரும் எழுதுவதில்லை இது போன்ற செய்திகளை படித்தும் கூட கண்டித்து ஒரு பதிவு கூட எழுதுவதில்லை பதிவுலகில் பெண்கள் நிறைய வரவேண்டும் என்பதே என் ஆசை
எல்லா துறைகளிலும் இன்று ஆண்களுக்கு இணையாக நிற்கும் பெண்கள் ஏன் பதிவுலகில் முத்திரை பதிக்கவில்லை
இந்த பதிவை படித்து ஒரு பெண் புதிதாக பதிவெழுத வந்தால் கூட எனக்கு  மகிழ்ச்சியே  
ஏன் பெண் என்று பிறந்தாய்
என்று வருந்திய காலம் மலையேறி விட்டது பெண் பிள்ளை இருந்தால் போதும் என்ற காலம் வந்துவிட்டது. 

7 comments:

ராசராசசோழன் said...

மிக கொடுமையான விஷயம்...மனித வடிவில் மிருகங்கள்....

Speed Raheem said...
This comment has been removed by the author.
Speed Raheem said...
This comment has been removed by the author.
ஆயிரத்தில் ஒருவன் said...

என் பதிவுகளை ஒரு போதும் நீங்கள் படித்ததில்லை போலும், http://aayiraththilloruvan.blogspot.in/2010/09/30-60.html இது கூட முஸ்லிம் இந்து ஒற்றுமை பற்றி எழுதியது தான் அதை ஏன் நீங்கள் படிக்கவில்லை சாதிகளின் மீதும் மதங்களின் மீதும் நம்பிக்கை இல்லாதவன் நான். எனக்கு இந்து நண்பர்களை விட இஸ்லாம் மத நண்பர்களே அதிகம், எமது நிறுவனத்தில் 10 இஸ்லாம் சகோதரர்கள் பணிபுரிகிறார்கள் அவர்களுடன் எந்த வித கோபமோ காழ்ப்புணர்ச்சியோ கிடையாது. குற்றவாளிகளை கூண்டில் ஏற்றினால் உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம். இந்த பதிவில் எழுதப்பட்டுள்ள இரண்டு சகோதரிகளுமே முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் என்பது உங்களுக்கு ஏன் புரியவில்லை.

bala said...


Speed Raheem:

See this url

http://www.dailymail.co.uk/news/article-1319804/Afghan-girl-Bibi-Aisha-nose-ears-hacked-Taliban-rule-gets-new-face.html

What he told is not a fake..

ஆயிரத்தில் ஒருவன் said...

மிகுந்த நன்றி திரு.பாலா

Speed Raheem said...

ஆயிரத்தில் ஒருவன் சாரி அண்ணா மன்னித்துக்கொளுங்கள் உங்களுடைய மற்ற பதிவுகளையும் படித்தேன் நீங்கள் நடுநிலையாளர் என்பதை புரிந்து கொண்டேன் மிக்க மகிழ்சி உங்கள் http://aayiraththilloruvan.blogspot பிளாக்கை என் நண்பர்களுக்கு பரிந்துரை செய்தேன் நன்றி