Monday, September 27, 2010

எங்கே....? எங்கே...?

தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழா கோலாகலமாக நடந்து முடிந்தது.  நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக வருகை தந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வர் பெரிய கோவிலுக்குள் பிரதான நுழைவு வாயில் வழியாக வருவாரா அல்லது பக்கவாட்டு வாயில் வழியாக வருவாரா என்பது பெரும் கேள்விக்குறியதாக இருந்தது.
பெரிய கோவிலின் பிரதான நுழைவு வழியாக நுழைந்தால் ஆகாது என்ற மூட நம்பிக்கை பல காலமாக நிலவி வருகிறது. பிரதான நுழைவு வாயில் வழியாக நுழைந்த இந்திரா காந்தி பின்னர் சில காலத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதேபோல எம்.ஜி.ஆர். பிரதான நுழைவு வாயில் வழியாக நுழைந்த சில மாதங்களிலேயே உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். எனவே முக்கியப் புள்ளிகள் குறிப்பாக அரசியல் பிரமுகர்கள் இந்தப் பாதை வழியாக நுழைவதே இல்லை.

பெரியாரின் முதல் தீவிர சீடன் என்று கூறிக்கொள்ளும் முதல்வர் இந்த மூட நம்பிக்கையைப் புறக்கணித்து பிரதான நுழைவு வாயில் வழியாக நுழைவாரா என்ற எதிர்பார்ப்பு பலமாக இருந்தது. ஆனால் தீவிர நாத்திகன் என்று கூறிக்கொள்ளும் முதல்வர் பிரதான நுழைவு வாயில் வழியாக நேற்று வரவில்லை. மாறாக அருகில் உள்ள பாதை வழியாக கோவிலுக்குள் நுழைந்து அந்த மூட நம்பிக்கைக்கு உரமேற்றியிருக்கிறார். மேடைக்கு மேடை தன்னை பகுத்தறிவு பகலவன், பெரியாரின் சீடன், என்று முழங்கிய பகுத்தறிவாளர் எங்கே....? எங்கே...? தேடினாலும் கிடைக்க மாட்டார்.

3 comments:

gvsivam said...

இந்த உண்மையை தைரியமாக சொன்ன நீங்கள் உண்மையிலேயே ஆயிரத்தில் ஒருவன்தான்.

நண்பர்கள் உலகம் said...

கலைஞரை இன்னும் இவ்வாறு நினைத்துக்கொண்டிருந்த நீங்கள்தான் ஒரு முதல்தர ஏமாளி!

சரவணன்.D said...

நெத்தியடி அடிச்சீங்க!!!
நீங்கள்தான் 1000-இல் ஒருவன்...
நன்றி நண்பரே!!!