சமீபத்தில் வெளிநாட்டு ஆய்வு நிறுவனத்தால் வெளியிடபட்ட ஓர் அறிக்கையில் இந்தியாவை பற்றி குறிப்பிட்டிருக்கிற விவரங்கள். இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 2.6 கோடி குழந்தைகள் பிறக்கின்றன. இவற் றுள் 18.3 லட்சம் குழந்தைகள் 5 வயதை எட்டு வதற்கு முன்பே இறந்து விடுகின்றன. உலகில் குழந்தை இறப்பை கட்டுப்படுத்துவதில் மிகவும் மந்தமாக உள்ள நாடுகளின் வரிசையில் தான் இந்தியா முதல் இடம் பெற்றுள்ளதாம். உலகிலேயே 5 வயதிற்குள் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் தான் அதிகம் என்கிறது.
ஊட்டச்சத்தின்மை, வாந்தி பேதி, தொற்று நோய்கள், நிமோனியா, சின்னம்மை, மலேரியா போன்ற நோய்களே குழந்தைகள் இறப்பில் பெரும் பங்கு வகிக்கின்றன. இவற்றுக்கெல்லாம் அடிப்படை என்ன? மருத்துவ வசதி எந்த அளவிற்கு உள்ளது. அதை ஏழைகள் எளிதில் பெற முடிகிறதா? மருத்துவச் செலவு ஏழைகளுக்கு கட்டுப்படியாகும் வகை யில் உள்ளதா? ஏழைகளுக்கு கிடைக்கும் மருந்தின் தரம் எப்படி உள்ளது? கருவுற்ற தாய்மார் களுக்கும் பிறந்த குழந்தைகளுக்கும் ஊட்டச் சத்து எந்த அளவிற்கு கிடைக்கிறது? கல்வி, பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர், சுகாதாரம், குடி யிருப்பு எந்த அளவிற்கு ஏழைகளுக்கு உறுதி செய்யப்பட்டது?
கலாச்சார ரீதியாக மக்களி டையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை அகற்ற விழிப் புணர்வு எந்த அளவு ஊட்டப்படுகிறது? எல்லா வற்றிற்கும் மேலாக இவற்றிற்காக அரசு எந்த அளவு பொது முதலீடு செய்கிறது? இப்படி பல கேள்விகளுக்கும் குழந்தை இறப்பு வீதத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை இந்த அறிக்கை படம் பிடித்து காட்டுவதுடன் நச்சென்று சொல்கிறது; “ஒவ்வொரு தாய்மார்கள் மற்றும் குழந்தை களின் நலனை பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்கிற அரசியல் உறுதியில்லாமல் இலக்கை அடையமுடியாது. உலக நாடுகள் இந்தியாவை வளரும் நாடு என்று சொல்லுகிறது இதற்கு பெயர் தான் வளரும் நாடா..?
0 comments:
Post a Comment