ஐ.பி.எல். போட்டிக்கு தொலைகாட்சி ஒளிபரப்பு உரிமம் ஸ்போர்ட்ஸ் குரூப் (டபிள்யூ. எஸ்.ஜி.) நிறுவனத்துக்கு 10 ஆண்டுக்கு டெலிவிஷன் உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வழங்கப்பட்டதில் ரூ.425 கோடிக்கு ஊழல் நடந்ததாகவும் இதில் மோடிக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. வருமான வரி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இந்த பணத்தில் ரூ.80 கோடிக்கு ஜெட் விமானம் வாங்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர். ஐ.பி.எல். நிதி முறைகேடு தொடர்பாக அதன் தலைவர் பதவியில் இருந்து லலித்மோடி நீக்கபட்டார். இது தொடர்பாக அவர் மீது கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை அவர் சார்பில் வழக்கறிஞர், லலித்மோடி வெளிநாட்டில் தங்கி இருப்பதாகவும். அவருக்கு மும்பை தாதாக்களால் மிரட்டல் இருப்பதாக கூறி அவர் விசாரணைக்கு வர இயலாது என்று கூறியுள்ளாராம் இப்பொழுது வாரியம் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாம். ஏன் இத்தனை நாள் இந்தியாவுல தான் இருந்தாரு அப்ப எல்லாம் மும்பை தாதாக்கள் மிரட்டல் இல்லையாம், இப்ப ஊழல் வெளிச்சத்துக்கு வந்ததும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிட்டாரு, அவர் மீது குற்றசாட்டு, விசாரணை இருக்கும் போது இவர் எப்படி வெளிநாடு போகலாம் இது போன்ற அரசியல்வாதிகள் கோடி கோடியா கொள்ளை அடித்துவிட்டு வெளிநாடு செல்லலாம் ஆனால் ஒரு சாதாரண குடி மகன் ஒரு சின்ன வழக்கில் கைதானால் கூட வெளியூருக்கு செல்ல கூடாது என அறிவுறுத்தபடுகிறது, இனி அடுத்து வெளிநாடு செல்ல இருக்கிறார்கள் காமன் வெல்த் போட்டி அமைப்பாளர்கள் அதில் சம்பத்தபட்ட அமைச்சர், அடிகாரிகள் அனைவரும் வெளிநாடு செல்ல தயாராகி வருகின்றனர். இந்திய முன்னாள் மருத்துவ கவுன்சில் தலைவர் கேத்தான் தேசாய் மட்டும் விதிவிலக்காக மாட்டி கொண்டார் அவர் அரசியல்வாதி இல்லை அதனால் தான் கைதாகி உள்ளார். லலித் மோடி, சசிதரூர், கேத்தான் தேசாய், ஆ.ராசா ...... அடுத்து யாரோ இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இந்த லட்சணாத்தில் சுவிஸ் வங்கிகளில் இருக்கும் கருப்பு பணத்தை கொண்டு வர ஏற்பாடு செய்பவர்களாம் எல்லாம் கொடுமையிலும் கொடுமை, இவர்கள் செய்த ஊழல்கள் ஒன்றா இரண்டா.... எல்லாம் சொல்லவே வாழ் நாள் போதுமா.....
1 comments:
// இனி அடுத்து வெளிநாடு செல்ல இருக்கிறார்கள் காமன் வெல்த் போட்டி அமைப்பாளர்கள் அதில் சம்பத்தபட்ட அமைச்சர், அடிகாரிகள் அனைவரும் வெளிநாடு செல்ல தயாராகி வருகின்றனர்//
பிளைட் டிக்கெட்டாவது அவங்க சொந்த செலவுலயாமா?..., இல்லை அதுவும் இந்த அரசு செய்யுமா?..
Post a Comment