Saturday, July 31, 2010

தமிழா தமிழா

குழந்தை நரபலியை மிஞ்சும் பாதக செயல் செய்த காவல் துறை உயர் அதிகாரி  பற்றி http://www.savukku.net/ படிக்க நேர்ந்தது (இந்த 250 ரத்த உறைகளும், குண்டுக் காயம் பட்டு, குற்றுயிரும் குலையிருமாக ஈழத்து வீதிகளில் கிடக்கும் தமிழ் உயிர்களைக் காப்பதற்காக கொடுத்து அனுப்பப் பட்டவை. தமிழகம் வந்தால் பிடிபடும் அபாயம் உண்டு என்பதை அறிந்தும், ரத்த உறைகள் இந்த நெருக்கடியான நேரத்தில் அனுப்பப் படும் என்பதை நம்பி அனுப்பப் பட்டன.


ஜாபர் சேட் பொறுப்பாக உள்ள க்யூ பிரிவு காவல்துறையினர், இந்த 250 ரத்த உறைகள் எடுத்து வந்த நபரை இடைமறித்து, அவர் சாட்டிலைட் போனை ஈழத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றதாக கைது செய்து, ரத்த உறைகளை கணக்கில் காட்டாமல் குப்பையில் கொட்டி அழித்த செய்தியை தாங்கள் அறிவீர்களா ?

இந்த வழக்கு தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றம் வந்த க்யூ பிரிவு காவலர் ஒருவர், மனசாட்சி கேட்காமல் ஜாபர்சேட்டை காது கூசும் கெட்ட வார்த்தைகளால் திட்டி விட்டு சொன்ன தகவல் இது.

இது மட்டும் அல்ல… … …. இந்த ரத்த உறைகளை எடுத்து வந்த நபரிடமிருந்து 60 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப் பட்டதே, அது ஏன் வழக்கு ஆவணங்களில் பதிவு செய்யப் படவில்லை என்பதை உங்கள் ஜாபர் சேட்டிடம் கேளுங்கள் அய்யா … …. இந்த வழக்கு பற்றிய ஒரு தனிப் பதிவு விரைவில் வரும்.

அரசாங்கப் பணத்தை திருடுவது பத்தாது என்பதால், புலம் பெயர்ந்த தமிழர்களின் வியர்வையில் வந்த பணத்தையும் திருடி விட்டார் இந்த விஷக் கிருமி. இப்படியெல்லாம் திருடினால்தானே, திருவான்மியூரிலும், ஈஞ்சம்பாக்கத்திலும் வீட்டு மனைகள் வாங்க முடியும்.)  இந்த செய்தி உண்மையாக இருக்குமானால் ஒரு நாள் கண்டிப்பாக அவர் வீசி எரிந்த ரத்த உறைகள் ஒரு அவசர காலத்தில் அவருக்கோ அல்லது அவரை சேர்ந்தவருக்கோ கண்டிப்பாக கிடைக்காமல் போகும். இது ஒட்டு மொத்த தமிழர்கள் சார்பாகவும் ஈழத்தில் உயிர் நீத்த அத்தனை தோழரின் சார்பாக இடப்படும் சாபம். தமிழா தமிழா இனியாவது விழிப்புடன இருப்போம் வெளியிட்ட தோழர் சவுக்கு சங்கர் அவர்களுக்கு நன்றி

நன்றி சொல்ல

கடந்த 3 நாட்களாக ஓட்டு பட்டையை நிருவுகிறேன் என்று எனது வலை பூவை ஒரு வழி செய்து கடைசியில் முன்பு நிறுவியிருந்த ஓட்டு பட்டையும் காணாமல் போக செய்து விட்டேன் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை உதவிக்கு யாரை அழைக்கலாம் என்று யோசித்த பொழுது வெண்ணிற இரவுகள் கார்த்தி   ஜி டாக்ல் இருந்தார் வணக்கம் கார்த்தி என்றேன் பதில் இல்லை அலுவல் பணியில் இருந்திருப்பார் போல பதிலளிக்கவில்லை அடுத்து நினைவில் வந்தது வந்தேமாதரம் சசிக்குமார். அவரது வலைத்தளத்தில் இருந்த கைபேசி எண்ணை தொடர்பு கொண்டு என்னை அறிமுகம் செய்து  பிரச்சனையை கூறினேன் சில வழி முறைகள் கூறினார் செய்து பார்த்தேன் முடியவில்லை பிறகு அவரே  அச்.டி.எம்.எல் கோடை  எவ்வாறு நிறுவ வேண்டும் என்பதை விளக்கமாக மின்னஞ்சல் செய்தார் அதன்படி செய்தேன் அதிலும் தோல்வி மீண்டும் கைபேசியில் தொடர்பு கொண்டேன் வீடு சென்று கொண்டிருப்பதாக கூறினார். கடைசியில் சுமார் பத்து மணியளவில் ஏற்கனவே டெம்பிளேட்பதிவிறக்கம் செய்தது  ஞாபகம் வர அதை பதிவேற்றி பிரச்சனையை முடித்தேன். வலையுலகில் என்னையும் மதித்து எனக்கு உதவிகள் செய்து மின்னஞ்சல் அனுப்பிய நண்பர் வந்தே மாதரம் சசிக்குமார் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன். நன்றி நன்றி நன்றி

Wednesday, July 28, 2010

காகித ஓடம்

கடிதம் எழுதி,
தொலை நகல்,
தந்தி அனுப்பி,
மின்னஞ்சல் அனுப்பி,
புறாவை தூது விட்டு,
பாராளுமன்ற உறுப்பினர்களை டெல்லி அனுப்பி
பத்திரிக்கைகளில் செய்தி சொல்லி,
இப்படி இருக்கும் வழிகளில் எல்லாம் மத்திய அரசை கெஞ்சி கூத்தாடி ஒரு வழியாக இலங்கைக்கு சிறப்பு தூதரை அனுப்ப பெரும்பாடு பட்டுள்ளார் தன்மான
தமிழ் சிங்கம்,
தமிழ் காப்பாளன்
என்று பெருமை பேசி கொள்ளும்
தி.மு.க தலைவர்.
சிறப்பு தூதர் அனுப்பி இலங்கையில் உண்மையாக நடப்பது என்ன என்று கண்டறிய போகிறாராம் என்ன ஒரு நகைச்சுவை.
இலங்கையோ ஐ.நா. சபை தலைவரையே முடிந்தால் வந்து பார் என்கிறது இதில் இவர் அனுப்பும் சிறப்பு தூதர் மட்டும் எம்மாத்திரம் அதுவும் தமிழ் தெரியாத சிறப்பு தூதர்.......?
ஏன் இதற்க்கு முன்னர் மக்கள் வரிப்பனத்தில் உங்கள் தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு சுற்றுலா சென்றார்களே அப்பொழுது என்ன பார்த்து கிழித்து வந்தார்கள் அதனால் முள்வேலியில் இருக்கும் தமிழர்கள் அவர்கள் வசித்த பகுதிகளில் மீள்குடியமர்த்தப்பட்டார்களா என்ன......? உண்மையை சொல்ல போனால்  ராச பக்சே,  திருமா உட்பட அனைவரையும் மிரட்டியே திருப்பி அனுப்பினார்.
ஆனால் நீங்கள் வந்து வெற்றி வெற்றி என்றும்,
நாங்கள் சென்றதால் தமிழர்கள் முள் வேளியில் முகாமில் இருந்து விடுவிக்க பட்டதாக தம்பட்டம் அடித்துக்கொண்டீர்கள். இப்பொழுது வேறு ஒரு ஏற்பாடு செய்கிறீர்கள். ஒரே குழப்பமாக இருக்கிறது
ஒரு முறையாவது உங்கள் முதலமைச்சர் பதவி என்ற ஆயுதம்  வைத்து மத்திய அரசை மிரட்டி பாருங்கள் பார்ப்போம்.
உங்களுக்கு எங்கே அதற்கு எல்லாம் நேரம் இருக்க போகிறது
உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் கனிமொழி பட குறுந்தகடு வெளியிடவும் விழாவில் குடும்ப பிரச்சனைகளை பற்றியும் பேசவே நேரம் போதவில்லை  அப்படி இல்லை என்றால்
பெண்சிங்கம்,
பெண்கரடி,
பெண்குரங்கு, என்று
திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை எழுத போய்விடுவீர்கள்.
நாட்டில் தலைவிரித்தாடும் மின்பற்றாக்குறையை 2 வருடங்களுக்கு மேலாக சரிசெய்துகொண்டே இருக்கிறீர்கள்
இலவச வண்ண தொலைக்காட்சியுடன் இலவச எரிவாயு அடுப்பு,
மலிவு விலையில் மது கொடுத்துக்கொண்டே இருங்கள்.
மக்கள் பிரச்சனை தீர ஒரு வழியும் எடுத்தது போல் தெரியவில்லை.
அப்புறம் மீதி இருக்கும் நேரத்தில் ஜெ.வை கேவலமாக பேசியும் குடும்பம் இல்லாதவள் என்றும் தரம் தாழ்ந்து தூற்றியும் திரைப்பட கலைஞர்களுக்கு 100 ஏக்கரில் இடம் மற்றும் வீடுகளின் அறிவிப்பு தொடரச்செய்வீர்கள்
உங்கள் மகன் மட்டும் பாராளுமன்றத்தில் பதில் அளிக்க தமிழ்மொழி அங்கீகரிக்க படுகிறது
ஆனால் இங்கேயோ நீதி மன்றங்களில் தமிழில் வாதாட அனுமதி இல்லை. என்ன கொடுமை இது
நீங்கள்  தானே கூறுகிறீர்கள் தமிழா தமிழா நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமாய் நான் மாறுவேன் அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம்.
அது கட்டு மரம் அல்ல காகித ஓடம்.....
உங்கள் கதை வசனத்தில் வெளிவந்த படத்தில் வருமே அந்த பாடல் வரி........... காகித ஓடம் கடலலை மீது போவது போலே ...........
அது தான் தமிழனின் நிலை நீங்கள் ஓடமாய் மாறினாலும் தமிழனை கவிழ்த்துதான் விடுவீர்கள்
இரு திராவிட கட்சிகளின் முடிவில் தான் தமிழகமும், தமிழனும் கறையேறுவான் இது உறுதி அது வரை கடலில் தத்தளிக்கும் காகித ஓடம் தான் தமிழனின் நிலை.

வெற்றி மீது வெற்றி வந்து

கடின உழைப்பு, சரியான திட்டமிடல், தொலை நோக்கு பார்வை இவை இருந்தால் மட்டுமே ஒருவர் வாழ்விலும் சரி செய்யும் தொழிலிலும் சரி இரண்டிலுமே வெற்றியை பெற முடியும். அப்படி வெற்றி பெற்று சமூகத்தில் இன்று பலரும் வியந்து பார்க்கும் உயர்ந்த மனிதர் ஒருவரை பற்றிய பதிவே இது.  நான் முன்பு பணியாற்றிய நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரரான திரு. கிரி அவர்கள் தான் அந்த பாராட்டுக்குரியவர் . நான் பல நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறேன் ஆனால் அவரின் நிறுவனத்தில் பணியாற்றியது வாழ்வில் மறக்க முடியாதது நண்பர் ரமேஷின் பரிந்துரையின் பேரிலேயே அந்த வேலை எனக்கு வழங்கப்பட்டது.  வேலையில் இருந்த போது நான் பல முறை தவறு செய்து இருக்கிறேன் ஆனால் திரு. கிரி அவர்கள் ஒரு முறை கூட கடிந்து பேசியது இல்லை மாறாக அந்த தவறை திருத்தி கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனையே சொல்லுவார் நான் பார்த்த வரையில் நிறுவனத்தில் பணி புரியும் ஒருவரை கூட கடிந்து பேசி பார்த்தது இல்லை எப்பொழுதும் அவர் முகத்தை புன்னகையுடனேயே பார்க்கலாம் அதுவே அவரின் தொடர் வெற்றிக்கு முதல் படி என்று நினைக்கிறேன். அழியா புகழ் கொண்ட கவிஞர் கண்ணதாசன் தன் சுயசரிதை நூலான சினிமா சந்தையில் 30 ஆண்டுகள் என்ற புத்தகத்தில் இவ்வாறு கூறுகிறார் மனிதன் சிறந்து வாழ 3 வகையான புத்தி வேண்டுமாம் . பணம் சம்பாதிக்க ஒரு புத்தி, சம்பாதித்த பணத்தை சேர்த்து வைக்க ஒரு புத்தி, சேர்த்து வைத்த பணத்தை சிக்கனமாக செலவு செய்ய ஒரு புத்தி வேண்டுமாம். அவர் சொன்ன அந்த மூன்றும் திரு. கிரி அவர்களுக்கு பொருந்தும் திரு. கிரி அவர்கள் மிகுந்த தெய்வ பக்தி உடையவர் வருடம் தவறாமல் நடை பயணமாக திருப்பதி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். LION"S CLUB OF TEMPLE CITY  தலைவராக ஜூலை 29ல் பொறுப்பேற்க உள்ளார். உங்கள் பணி சிறக்க, உங்களின் கடின உழைப்பின் பலனாக வெற்றி  மீது வெற்றி வந்து உங்களை சேரும் என்று வாழ்த்தும் ஆயிரம் ஆயிரம் நெஞ்சங்களில் நானும் ஒருவன் இந்த ஆயிரத்தில் ஒருவன்

Tuesday, July 27, 2010

கடமை..... அது..... கடமை

சென்ற வாரம் குடும்ப நண்பர் ஒருவரின் வீட்டிற்க்கு செல்ல நேர்ந்தது, அவருக்கு மூன்று பெண் குழந்தைகள் மூன்றுமே படிப்பில் படு சுட்டிகள் மூத்த பெண் +2 முடித்து விமான ஓட்டுனர் பயிற்ச்சிக்காக காத்திருப்பதாக கூறினார். அடுத்தவர் +2 படித்து கொண்டிருப்பதாக கூறினார். அப்பெண் படிக்கும் பள்ளியில் கணித பாடம் எடுக்கும் ஆசிரியர் வகுப்பில் இரட்டை அர்த்த வசனகளுடன் மிகவும் ஆபாசமாகவும் பேசி வருவதாகவும்   பள்ளி முதல்வரிடம் புகார் செய்யும் பட்ச்த்தில் அவர்கள் நடவடிக்கை எடுக்காத நிலையில் புகார் அளித்த மாணவிகளை  அந்த ஆசிரியர் பழி வாங்கிவிட்டால்.....  கல்வி கேள்வி குறியாகிவிடும் என்றும் இது குறித்து புகார் செய்ய மாணவிகள் தயக்கம் காட்டுவதாகவும் கூறினார். அவர்களின் நிலையை உணர்ந்த நான் அவர்கள் பள்ளியின் மின்னஞ்சல் முகவரியை வாங்கி வந்தேன் பிறகு பின் வருமாறு மின்னஞ்சல் செய்தேன்.

தங்கள் பள்ளியில் +2 படிக்கும் ஒட்டு மொத்த மாணவர்கள் சார்பாக அனுப்பபடும் கண்ணீர் புகார் கடிதம் யாதெனில் +2 கணித ஆசிரியர் சீனிவாசன் அவர்கள் செய்யும் அசிங்க செயல்களை எழுத்தில் எழுதமுடியாது, வகுப்பில் அவர் பேசும் இரட்டை அர்த்த வசனங்களும் மாணவிகள் மீதான வக்கிர பேச்சுகளும் தொடர்ந்து கொண்டே போகிறது வகுப்பு நடத்துவதை தவிர்த்து அனைத்து தேவயற்ற வேலைகளையும் செய்கிறார். நாங்கள் கூறுவது பொய் புகார் எனும் பட்ச்சத்தில் அவரின் வகுப்பு நடவடிக்கைளை ரகசியமாக கண்கானித்து அதன் பிறகு ஒரு முடிவுக்கு வரலாம் இல்லை என்றாலும் கூட வகுப்பில் cctv பொருத்தினால் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம். நம் பள்ளி மீது வெளியிலிருந்து புகார் வரும் முன் நாமே அதை சரி செய்து கொள்வது நம் பள்ளிக்கு நல்லது. இதன் நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. தாங்கள் நேர்மையான நடவடிக்கை எடுக்க மறுக்கும் பட்சத்தில் பள்ளி கல்வி துறையில் புகார் அளிக்க தயங்க மாட்டோம் என்று கண்ணீருடன் கூறிக்கொள்கிறோம்.

மின்னஞ்சல் அனுப்பி இரண்டு நாட்கள் கழித்து அப்பெண் பள்ளி செல்லும் வழியில் என் வீட்டிற்க்கு வந்து அந்த கணித ஆசிரியரை பள்ளி நிர்வாகம் அந்த பள்ளியை விட்டே நீக்கிவிட்டதாகவும், மாணவிகள் அனைவரும் மகிழ்வுடன் இருப்பதாகவும் கூறினார். மின்னஞ்சல் பற்றி யாருக்கும் சொல்லவேண்டாம் என்று முன்பே கூறியிருந்தேன். அனைத்து மாணவிகள் சார்பாக எனக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். இதற்க்கு நன்றி எல்லாம் தேவையில்லை இது எனது கடமை என்று கூறி அனுப்பினேன். பெருமை பீற்றி கொள்ள இதை நான் இங்கு பதியவில்லை இது போன்று நம் கண் முன், அல்லது நம் கேட்கும் இது போன்ற தவறுகளை  தட்டி கேட்க தவறினால் நாமும் அதற்க்கு துணை போகிறோம் என்றே அர்த்தம் அநீதியை கண்டிப்பாக தட்டி கேட்க்க வேண்டும் ஏனேன்றால் அது கடமை..... அது..... கடமை நீங்கள் இது போல் ஏதாவது தட்டி கேட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம் அல்லது மின்னஞ்சலில் அனுப்பலாம்.

Monday, July 26, 2010

மலர்ந்தும் மலராத

அது என்ன பிஞ்சு குழந்தைகளை கொல்வது புதிய நாகரீகமா......?  பூவரசி, அப்துல் கபூர், அடுத்து யாரோ.....?  தன்னை திருமனம் செய்து கொள்ள மறுத்த அவனை பழி வாங்காமல் விடுத்து அந்த பிஞ்சு குழந்தை ஆதித்தியாவின் உயிரை கொடூரமான முறையில் பறித்தது எந்த விதத்தில் பழி தீர்த்தார் என்று தெரியவில்லை அனைத்தையும்  திட்டமிட்டே செய்துவிட்டு இப்போது புரியாமல் செய்து விட்டது போல் கண்ணீர் வேறு வடிக்கிறார் இது போன்று செய்பவர்கள் எல்லாம் மன நலம்  பாதிக்க பட்டவர்களே அதில் மாற்று கருத்து யாருக்கும் இருக்காது
அடுத்து கொடூரன் அப்துல் கபூர் இவனோ தன் கனவில் காளி வந்ததாகவும் தலைப் பிள்ளையை நரபலியிட்டு அதன் ரத்தத்தை குடித்து, உடலையும் தலையையும் தனிதனியாக கடற்கரை பகுதியில் புதைத்தால், யோகம் வரும் என கூறியதால், குழந்தையை கடத்தினேன். தூத்துக்குடி அருகே ஏரலில், கத்தியால் குழந்தை கழுத்தை அறுத்து கொலைசெய்து, வாளியில் ரத்தத்தை பிடித்து குடித்தேன். பின் தலையை, திருச்செந்தூர் அருகே கல்லாமொழி தர்கா அருகே கடற்கரை பகுதியில் புதைத்துவிட்டு, உடம்பை தூக்குச்சட்டியில் வைத்து, ராமநாதபுரம் ஏர்வாடி தர்கா கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்து புதைத்ததாக தெரிவித்துள்ளான் இவன் வாக்குமூலம் அனைவரையும் ஒரு நிமிடம் கதி கலங்க வைக்கிறது என்னை பொறுத்த வரை இவனும் ஒரு வகை மன நோயாளியே...............

கருப்பு ஜூலை அனுதாபிக்கும் நம் தமிழ் நெஞ்சங்கள் உயிரிழந்த அந்த குழந்தைகளுக்கும் சேர்த்து அனுதாபிக்கட்டும்

இன்னும் ஒரு செய்தி அது நடக்கும் முன் காக்க வேண்டியது தன்னார்வ தொண்டு நிறுவனமும் காவல் துறையும் தான் என்று நினைக்கிறேன் சிவகங்கை அருகே காளையார்கோவிலில், மனநலம் பாதித்த பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை, போதிய பாதுகாப்பு இன்றி உள்ளது. இங்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன், மன நலம் பாதித்த, 25 வயது பெண் வந்திருக்கிறார். நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு, பழக்கடை நடத்தி வரும் பாப்பாள் என்பவர்  அடைக்கலம் கொடுத்து  இரு மாதத்திற்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் கொடுத்து வருகிறார். குழந்தையை பார்க்க யாராவது வந்தால், அதை எடுத்து செல்ல வந்திருக்கிறார்கள் என அச்சத்தில் அங்கிருந்து சென்று விடுகிறார். தற்போது, செந்தமிழ் நகரை சேர்ந்த பொட்டு (70) என்ற ஏழை பெண், குழந்தையை கருணை உள்ளத்துடன் பராமரித்து வருகிறார். அப்பகுதியினர், குழந்தைக்கு காளீஸ்வரன் என பெயரிட்டுள்ளனர். மனநலம் பாதித்த பெண்ணுக்கு, அங்குள்ளவர்கள் உணவு கொடுக்கின்றனர்.
அரசு, தன்னார்வ நிறுவன இல்லத்தில் சேர்த்தால் மட்டுமே, குழந்தைக்கு நிரந்தர பாதுகாப்பு, கல்வி  கிடைக்கும். இதற்கு தன்னார்வ நிறுவனங்கள் முன்வர வேண்டும். விபரீதங்கள் நடப்பதற்க்கு முன் நட்வடிக்கைகள் எடுத்தால் நல்லது.....

ஹிதேந்திரன் தொடங்கி வைத்த அந்த உடல் உறுப்புகள் தானம் இன்று பல உயிர்கள் வாழ வழிவகை செய்கின்றது என்றே சொல்லலாம் நாட்டில் முதன் முறையாக, பிறந்து நான்கே நாட்களான குழந்தையின் கண் மற்றும் இதய வால்வுகள் தானம் செய்யப்பட்டுள்ளன. ஐதராபாத்தை சேர்ந்த ஹேமவதி மற்றும் கிஷார் குமார் தம்பதியருக்கு, ஜூ லை 8ம் தேதி ஒரு பெண் குழந்தை குறை பிரசவத்தில் பிறந்தது. பிறந்து இரண்டு நாட்கள் வரை குழந்தைக்கு எவ்விதப் பிரச்னையும் இல்லை. மூன்றாம் நாள் உறுப்புக்கள் ஒவ்வொன்றாக செயலிழக்கத் தொடங்கின.குழந்தை வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், ஜூலை 12ம் தேதி குழந்தைக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். குழந்தையின் பெற்றோர் அதிர்ந்தனர். இருப்பினும், குழந்தையின் மாமா, பெற்றோரிடம் குழந்தையின் உறுப்புக்களைத் தானம் செய்வது குறித்துப் பேசினார். அதன் மூலம் இன்னும் இரண்டு குழந்தைகள் வாழ வழியிருப்பதையும் அவர் எடுத்துக் கூறி, பெற்றோரின் சம்மதத்தைப் பெற்றார். அதன்பின் டாக்டர்கள், குழந்தையிடமிருந்து இதய வால்வுகள் மற்றும் கண்களை எடுத்துப் பாதுகாத்து வைத்தனர். இதயவால்வுகள் ஒரு குழந்தையிடமிருந்து கிடைப்பது மிக அரிதான செயலாக மருத்துவ உலகில் கருதப்படுகிறது.ந்த குழந்தை தானம் அளித்த இதய வால்வுகள் மூலம் பிழைத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் செயற்கை வால்வுகள் விலை அதிகமானவை என்பதோடு, இயற்கையான வால்வுகள் போல பொருந்திச் செயல்படும் வாய்ப்புகளும் குறைவு. இப்போது இக்குழந்தையின் தானத்தால் இரண்டு குழந்தைகளுக்கு இதய வால்வுகளும், கண்களும் கிடைத்து அவை புது வாழ்க்கையைத் தொடங்கும்' என்றார். நாட்டில், மிக மிக இளம் வயதில், தன் உறுப்புக்களைத் தானம் செய்தவர் என்ற பெருமையுடன், அந்த மலர்ந்தும் மலராத குழந்தை இம்மண்ணில் தன் தானம் மூலம் அழியாப் புகழையும் விட்டுச் சென்றுள்ளது.

Friday, July 23, 2010

தீப்பிடிக்க......தீப்பிடிக்க

   மதுரையில்  கடந்த சில நாட்களாக பல இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு உயிர் இழப்புகள் தொடர் கதையாகி வருகிறது தினமும் பல ஆயிரம் மக்கள் வந்து செல்லும் மத்திய பேருந்து நிலையத்தில் மட்டும் அடுத்தடுத்து இரண்டு முறை தீ விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது 

விபத்தில் 15 பேர் காயம் அடைந்துள்ளனர் ஒருவர் உயிரிழந்துள்ளார். . அடுத்தது அதிக நெரிசல் மிகுந்த குட்ஷெட் தெருவில் ஒரு நாலு மாடி வணிக வளாகத்தில் ஏற்ப்பட்ட தீ விபத்து இதில் உயிரிழப்பு இல்லை பொருட்சேதம் மட்டுமே, விபத்துகான காரணம் மின் கசிவு என்று கூறப்பட்டது 

அடுத்தது வாடிப்பட்டி அருகே நாலு வழி சாலையில் அரசு பேருந்தும் ஒரு மகிழுந்தும் நேருக்கு நேர் மோதியதில் மகிழுந்து தீ பற்றியது 
இதில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த மூவர் உடல் கருகி பலியாகினர் இது போல இன்னும் நிறைய உள்ளது. தீ விபத்து சில நொடி பொழுதுகளில் நிகழ்ந்து விடுகிறது அதனால் ஏற்படும் இழப்போ ஈடு செய்ய முடியாதது அதிலும் உயிரிழப்புகள் எதை கொண்டு ஈடு செய்வது மாண்டார் திரும்புவரோ.....? தீ விபத்து நாம் நாள்தோறும் செய்திகளில் பார்க்கும் தொடர்கதை போல் ஆகிவிட்டது. 

கும்பகோணம் பள்ளி தீ விபத்தாகட்டும், தர்மபுரி பேருந்து எரிப்பு சம்பவமாகட்டும், ராமநாதபுரம் மனநல காப்பகத்தில் ஏற்ப்பட்ட தீ விபத்தாகட்டும், கோத்ரா தொடர்வண்டி எரிப்பு சம்பவமாகட்டும், நாம் அனைத்தையும் படித்துவிட்டு, முடிந்தால் சிறிது நேரம் மௌன அஞ்சலி செலுத்தி விட்டு நம் வேலையை தொடருவோம் .........
ஏன் நம் வீட்டிலோ அல்லது நாம் பணிபுரியும் இடங்களிலோ இது போன்று நடக்க வாய்புகள் இல்லையா......? 
வீட்டில் சமையல் செய்யும் போதோ இல்லை மின் கசிவு ஏற்படடு விபத்து நடக்க வாய்ப்புகள் நிறைய இருக்கிறது.  

கும்பகோணம் பள்ளி விபத்து நடந்து எத்தனை வருடங்கள் ஆகின்றது நம்மில் யாராவது நமது பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் தீ தடுப்பு சாதனங்கள் இருக்கின்றனவா என்று பார்த்திருப்போமா........? இல்லை நம் ஊரில் இருக்கும் பேருந்து நிலையங்களில், தொடர் வண்டி நிலையங்களில் ஏன் நாம் பயணம் செய்யும் பேருந்துகளில் இருக்கிறதா என்று தான் பார்த்திருப்போமா......?  

இத்தனை விபத்துக்களிலிருந்து நாம் என்ன தான் அறிந்து கொண்டோம் 
ஒரு சின்ன தீ தடுப்பு சாதனம் இருந்திருந்தால் இத்தனை உயிர்களை 
நாம் இழந்திருக்க வேண்டியதில்லை கும்பகோணம் பள்ளியில் 
ஒரு தீ தடுப்பு சாதனம் இருந்திருக்குமேயானால் அந்த கோர 
நிகழ்வு நடந்திருக்காது  
தர்மபுரியில் எரிந்த பேருந்தில்  ஒரு தீ தடுப்பு  சாதனம் இருந்திருக்குமேயானால் விபத்தை தடுத்திருக்கலாம் 

வாடிப்பட்டி அருகே நடந்த விபத்தில் பேருந்திலோ அல்லது 
மகிழுந்திலோ இருந்திருந்தால் அந்த மூன்று உயிர் காப்பற்றபட்டிருக்கும் இனி மேல் இது போன்று விபத்துகள் நடக்காமலிருக்க 
இப்பொழுதே நம் வீட்டில் ஒரு தீ தடுப்பு சாதனம் முதலில் நிறுவுவோம் 
நம் வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த பொருட்களை எப்படி பிறரிடம் பெருமை பட கூறி மகிழ்வோமோ 
அது போல இதையும் காட்டி பிறரிடம் பெருமை கொள்வோம். 
அது ஒன்றும் பெரிய விலையில் இல்லையே நம் உயிரை நம் வீட்டை காக்கும் அந்த சாதனம் எத்தனை விலையில் இருந்தால் தான் என்ன....? 
உயிரின் மதிப்பை விட கம்மி தான்  

இந்த பதிவை படிக்கும் நீங்கள் நான் கூறியது சரி என்று நினைத்து 
ஒருவர் அந்த சாதனத்தை வாங்கி வைத்தால் கூட எனக்கு மகிழ்ச்சியே  

இலவச தொலைக்காட்சி, எரி வாயு அடுப்பு, 1 ருபாய்க்கு அரிசி, மலிவு விலையில் மது, தேர்தலில் வாக்களிக்க பணம் கொடுக்கும் அரசு வீட்டுக்கு வீடு ஒரு தீ தடுப்பு சாதனம் இலவசமாகவோ அல்லது சலுகைவிலையிலோ  கொடுத்தால் மிகுந்த மகிழ்ச்சி.......... வீட்டில் ஒரு தீ தடுப்பு சாதனம் இருந்தால்


 தீப்பிடிக்க......தீப்பிடிக்க பயயமில்லை தானே


பதிவு நன்றாக இருந்தால் பின்னூட்டம் அல்லது வக்களிக்கலாம்

Friday, July 16, 2010

அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே

16-07-2010 இன்று அகவை 56ல் அடியெடுத்து வைக்கும் என்னை பெற்ற அம்மாவிற்க்கு இந்த பதிவு சமர்ப்பனம். 
நாங்கள் குடியிருக்கும் பகுதியில் சுப்புலெட்சுமி என்றால் யாருக்கும் தெரியாது சுப்பக்கா என்றால் தான் நிறைய பேருக்கு தெரியும்.
 யாருடனாவது அம்மா பேசிக்கொண்டிருக்கும் போது நான் அழைப்பதை கவனிக்கவில்லை என்றால், சமயத்தில் நானும்,  உறக்க கூப்பிடுவது சுப்பக்கா.... என்றே...... அதில் ஒரு ஆனந்தம் 
பிறந்தநாள் பரிசாக அக்கா அம்மவிற்க்கு ஒரு புடவை வாங்கி தந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. நான் ஒன்றும் வாங்கி தரவில்லை, இத்தனை ஆண்டுகள் உழைத்து உழைத்து எங்கள் மூவரையும் நன்றாகவே வளர்த்தார், மற்ற இருவர் வாழ்வில் முன்னேறிவிட, நானோ இன்றும், அவருடனேயே வளர்ந்து ஆனால் முன்னேற முடியாமல் அதற்காக முயன்று கொண்டே இருக்கின்றேன் ஒரு வேளை அவர் சொல்படி கேட்டிருந்தால் நானும் வாழ்வில் முன்னேறியிருப்பேன். 
இன்றும் அவருக்கு தொல்லை கொடுத்துகொண்டே தான் இருக்கிறேன். காலையில் எழுவதிலிருந்து வேலைக்கு கிளம்பும் வரை, பிறகு வேலை முடித்து வீடு திரும்பி சாப்பிட்டு தூங்கும் வரை அவருடன் விவாதம் தான். 
என் தாத்தாவின் (அம்மாவின் தந்தை) படைப்புகளை http://www.kundumalai.blogspot.com/  என் தம்பி வெளியிட்டதில் அம்மவிற்க்கு மிகுந்த மகிழ்ச்சி எங்கள் வீட்டுக்கு உறவினர் யார் வந்தாலும் தாத்தாவின் படைப்புகளை கணினியில் காண்பிக்க சொல்லுவார் 
தினமும் தன் பெற்றோர் படத்திற்க்கு பூ வைத்து வணங்குவதை கடைப்பிடித்து வருகிறார். அவர் பிறந்த நாளில் அவரை நீடுழி வாழ வாழ்த்த வயதில்லை என்பதால் வணங்குகிறேன். 
இன்னொரு பிறவி எடுத்து வந்தாலும் உன் மகனாக பிறக்கின்ற வரம் வேண்டும் அது போதும். இந்த உலகில் 
முகமூடி அணியாத ஒரே உறவு,கலப்படமில்லா அன்பு கொண்ட அம்மா மட்டுமே அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே

Thursday, July 15, 2010

திராணி இல்லாத திராவிட கட்சிகள்

       கோவையில் நடைபெற்ற அ.தி.மு.க. கூட்டத்தில் பேசிய அம்மையார் தி.மு.க.வை ஜனநாயக முறைப்படி வீழ்த்த தயாராகும் படி கேட்டுக்கொண்டுள்ளார்

கூட்டணி சமாசாரங்களை தான் பார்த்து கொள்வதாகவும், கட்சியினர் எதிர்பார்க்கும் அந்த கூட்டணியே விரைவில் அமையும் என்று கூறியுள்ளார். ஆக, வெற்றி என்பது கூட்டணியை பொறுத்தே அமையும் என்று இவர்கள் எதிர்பார்ப்பு

இரண்டு திராவிட கட்சிகளும் ஆரம்பித்து இத்தனை ஆண்டுகளாகியும் இவர்கள் மாறி மாறி ஆட்சி செய்தும் இவர்கள் சவாரி செய்ய நினைப்பது கூட்டணி குதிரையில்.

இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்த இவர்கள் மக்களுக்கு பயன்பெறும் திட்டங்கள் என்று ஒன்றை கூட இவர்களால் மார்த்தட்டி கூறமுடியாது  செய்ததெல்லம் இவர்கள் குடும்பங்களுக்கும்  கட்சிகாரர்களுக்கும் தான். சென்ற வாரம் ஒரு நகைச்சுவை ஒன்றை மூதறிஞர் என்று கூறிக்கொள்ளும் முதல்வர் வெளியிட்டுள்ளார் வெளிநாட்டு பத்திரிக்கை ஒன்று நடத்திய ஆய்வில் அன்னிய முதலீடுகளை அதிகம் கவர்வதில் முதல் மூன்று மாநிலங்களில் தமிழகம் இருப்பதாக  கூறியுள்ளர்.

மேலும் சென்ற ஆட்சியில் இது போன்று செய்தி வெளியிடுவதற்காக ஜெ. ரூ.2.88 கோடி செலவிட்டுள்ளதாக கூறியுள்ளார் சரி
இவர் இந்த விளம்பரத்திற்காக எவ்வளவு செலவழித்தார் என்று நாளை ஜெ. வந்தால் வெளியிடுவார்.
இது போன்ற கூத்துகளை தினம் தினம்  பார்த்து சலித்து விட்டது தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கூட்டணிக்கு அச்சாரங்கள் போடும் வேலையில் இப்பொழுதே கழகங்கள் இறங்கி விட்டது தே.மு.தி.க தலைவர் முன்பு கூறியதை போல அனைத்து கட்சிகளும் தணித்து போட்டியிட வேண்டும்.

அதற்கு முன் வருமா கழகங்கள் எனக்கு தெரிந்து திராவிட கட்சிகள் தணித்து நின்று போட்டியிட்டதாக செய்தியில்லை இவர்கள் மக்களுக்கு ஏதாவது செய்தால் தானே இவர்கள் அதை பற்றி  யோசிக்க.

மீனவர் பிரச்சனை ஆகட்டும், இலங்கை பிரச்சனை ஆகட்டும் அனைத்திற்கும் கடிதம் எழுதியே தீர்வு கான்பார். இவரை விட ஜெ. பரவாயில்லை கடிதமும் எழுதுவதில்லை மத்திய அரசுக்கு தெரியப்படுத்துவதும் இல்லை ஒரே ஒரு முறை மட்டும் சென்னை மெரினா கடற்கரையில் காவேரி பிரச்சனைகாக உண்ணாவிரதம் இருந்தார்.

அப்புறம் கவர்னர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறினார். 100 தடவைக்கு மேல் அமைச்சரவையை மாற்றி அமைத்திருப்பார். இவர் செய்த ஒரே ஒரு சாதனை லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை ஒரே நாளில் பணி நீக்கம் செய்தது தான் இத்தனை சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்டால் நடக்குமா,

இல்லை இவர்கள் தணித்து போட்டியிட பரிட்சார்த்த முறையில்  யோசிக்க கூட மாட்டார்கள்
ஏன் என்றால் இவர்கள்

திராணி இல்லாத திராவிட கட்சிகள்.   

Monday, July 12, 2010

இறையாண்மையாவது மயி.......வது

சென்ற வாரம் வேதாரண்யம் செல்லப்பன் என்ற மீனவனின் உயிர் பறிக்கப்பட்டது இன்றோ கச்சதீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 50 ராமேஸ்வர மீனவர்களின் வலைகளை அறுத்தும்  வைத்திருந்த மீன்பிடி சாதனங்களையும், படகுகளையும் சேதப்படுத்தி, அடித்து துன்புறுத்தி விரட்டியுள்ளனர் 

தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி கொண்டிருக்கும் சிங்கள கடற்படை. தொடர்ந்து கடிதம் எழுதி எழுதி தவறாமல் மத்திய அரசுக்கு தெரியப்படுத்தும் முதல்வர். அதை செய்தியாக வெளியிடும் ஊடகங்கள், 
அறிக்கை மேல்அறிக்கை விட்டு கொண்டிருக்கும் எதிர், புதிர் கட்சிகள். 
அதிலும் மிக மிக கேவலமான அறிக்கைகள் நமது தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் போல் எந்த மாநிலத்திலும் தரம் தாழ்ந்து அறிக்கை விடுவதில்லை. 
நீ ஆட்சியில் இருந்த பொழுது படையெடுத்தாயா, 
பல் விலக்கினாயா, 
சரக்கு அடித்தாயா, 
நீ ஊத்திகொடுத்தாயா இப்படி இவர்கள் தான் அறிக்கை போர் நடத்துவார்கள். 
மீனவர் பிரச்சனை தான் தீர்ந்தபாடில்லை
இது வரை 500 மேற்ப்பட்டவர்களை இலங்கை கடற்படை கொன்று குவித்தாலும் மத்திய அரசு இது வரை வாய் திறக்க மறுத்து வருகிறது 
ஏன் என்றால் உயிர் இழந்தவன் தமிழன் தானே  தவிர இந்தியன் இல்லையே, 
இந்தியன் உயிர் இழந்தால் மட்டுமே சோனியா அரசு வாய் திறக்கும். 

சரி இந்த தாக்குதல் நிலவரங்களை இந்திய கடற்படை மத்திய அரசுக்கு தெரிவிக்கிறதா இல்லை மறைத்து விடுகிறதா 
இல்லை இவர்கள் தான் அடிக்க சொல்கிறார்களா .......? 
ஏன் என்றால் இது வரை எல்லை தாண்டி வந்த ஒரு சிங்கள மீனவனை கூட இந்திய கடற்படை அடித்து விரட்டியோ, கைது செய்ததாகவோ செய்தி இல்லை 
அப்படி இருக்க இவ்வாறுதான் நினைக்க தோன்றுகிறது 
இதே ஒரு கேரள மீனவனுக்கோ, 
ஆந்திர மீனவனுக்கோ, நடந்திருந்தால் 
நடப்பதே வேறு, 
சீமான் விடுத்த அறிக்கைக்கு நானும் உடன்படுகிறேன் ஒரு முறை திரும்ப அடித்து தான் பார்க்க வேண்டும். 
நாடுகளுக்கும் மீனவனுக்கும் வேண்டுமானால் எல்லை கோடு போடலாம் மீனுக்கு என்ன செய்வார்கள் 
இதற்கு ஒரே வழி கட்ச்சத்தீவை மீட்பது தான் 
அப்பொழுதுதான் தமிழக மீனவர்களின் பிரச்சனை ஒரளவேனும் குறையும். 
தவிர தமிழகத்தை ஆளும் கட்சிகளும் தமிழ் இன உணர்வோடு இருந்தால் தான் இதற்கு ஒரு முடிவு கிடைக்கப்பெறும் 
மத்திய அரசை நம்புவது என்னவோ வீண். 
செம்மொழி மாநாடு நடத்தி தமிழ் காப்பாளன் என்று பெருமை பீற்றி கொள்ளும் தன்மான சிங்கம் மூதறிஞர் வழக்கம் போல 3 லட்சம் இழப்பீடாக தருவார் 
முரசொலியில் கவிதை எழுதுவார். 
கேட்டால் வேறென்ன செய்ய முடியும் என்பார் 
அவரால் அதை தான் செய்ய முடியும். 
பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போல என்பார். 
ஆனால் துண்டை தூக்கி எறிய மனம் வராது. 
ஆந்திர மாநில தண்ணீர் பிரச்சனைக்காக இறையாண்மை பற்றி முதல்வராக இருந்து கொண்டு இவர் பேசலாம் 
அதையே சீமான் பேசினால் சிறை மீனவர்கள் பிரச்சனை தீர்க்க மத்திய அரசு முன் வரவில்லை என்றால்  
இறையாண்மையாவது மயி.......வது 

Sunday, July 4, 2010

திரைப்பட துறையினர் மீதான உங்கள் பார்வையை மாற்றி கொள்ளுங்கள்

இந்த பதிவை எழுத வேண்டாம் என்று தான் நினைத்தேன்
ஆனால், இருப்பு கொள்ளவில்லை. நான் யாரையும் விமர்சனம் செய்வது கிடையாது (அரசியல்வாதிகள் மட்டும் விதி வலக்கு).
இந்த உலகத்தில் யாரும் யாரையும் விமர்சனம் செய்வது தவறு என்பதே என் கருத்து.
தொடர்ந்து ஒரு பதிவர் (இரவை வெண்மையாக மாற்றி அதை தூங்காமல் ரசிக்கும் கவிஞர்)
தன்னுடைய பதிவில் எல்லை மீறி மற்றவர்களை பற்றி மிகவும் தரம் தாழ்ந்து எழுதுகிறார்
அதை கண்டித்தே ஆக வேண்டும். பதிவுலகத்தில் நான் பார்த்த முதல் பக்கமே அவருடயது தான்
இன்னும் சொல்ல போனால் இப்படியெல்லம் எழுதலாம் என்று தெரிந்ததே அவரின் தளத்தை பார்த்துதான் தெரிந்து கொண்டேன்
பதிவரின் நண்பர் எனக்கு நண்பர் அவர் தான் எனக்கு முதன் முதலில் அந்த தளத்தை காண்பித்தார் எனக்கோ ஆச்சர்யம்,
அப்பொழுது தான் இணைய தள வடிவமைப்பாளராக பணி ஆரம்பித்த நேரம் அவரின் எழுத்தில் கம்யுனிச கருத்துக்கள் நிறைந்து காணப்பட்டது.
நானும் கம்யுனிச கருத்து உடையவன் என்பதால் தொடர்ந்து படித்தேன். பதிவர் அடிக்கடி திரைப்படங்களை விமர்சிப்பார் நான் அவற்றை தவிர்த்துவிடுவேன் திரைப்படங்கள் நான் அதிகம் பார்ப்பதில்லை அப்படியே பார்த்தாலும் அதை விமர்சனம் செய்வது கிடையாது
திரைபடத்தை நமது வாழ்ககையோடு தொடர்புபடுத்தி பார்ப்பதில்லை ஏன் என்றால் அது வெறும் மாய உலகம் அதில் பணியாற்றுபவர்கள் உத்தமர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை சொல்லப்போனால் இந்த உலகில் யாருமே உத்தமர்கள் கிடையாது என்பதே என் கருத்து.
ஆனால், அந்த பதிவர்  தொடர்ந்து திரைப்பட துறையில் பணிபுரிபவர்களை வசை பாடுவதிலே குறியாக இருக்கிறார் அவர் மட்டும் அல்ல, பதிவுலகில் 90% அப்படித்தான் எழுதுகின்றனர். 
என் கேள்வி என்னவென்றால் நீங்கள் ஏன் அவர்களை பின்பற்றுகிறீர்கள் உங்களுக்கு என்று சொந்த கருத்து கிடையாதா,
அவர் பெப்சி குடித்தால் உங்களுக்கென்ன.....?
சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் நடித்தால் உங்களுக்கென்ன ....?
நடிகர்கள் 100 கொடுத்தால் நான் வாழ்க என்று சொல்வர்
200 கொடுத்தால் என் குலம் வாழ்க என்று சொல்வார்கள்
அது அவர்களின் தொழில் அதை ஏன் கேவலமாக எழுதுகிறீகள்
பதிவர் வேலை செய்வதோ மென்பொருள் துறையில் அதை அவரால் விமர்சனம் செய்ய முடியுமா.....
அப்படி விமர்சனம் செய்து கொண்டு அந்த பணியில் இருந்து விட முடியுமா..... அவர் அந்த வேலையினால்  அனுபவித்து வரும் சுகங்களை விட்டு வர மனம் இருக்குமா....
பேருக்கு வேண்டுமானால் சொல்லலாம் ஆனால் உள்மனம் என்ன சொல்லும். திரைப்பட துறையினர் அவர்கள் ஈட்டும் வருவாய் தமிழகத்திலோ அல்லது இந்தியாவிலே முதலீடாக, சொத்தாக மாறுகிறது.
ஆனால் நீங்கள் யாருக்காக உழைக்கிறீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா உங்கள் நிறுவன வருமானம் எந்த நாட்டுக்கு செல்கிறது என்றாவது தெரியுமா.......
நீங்கள் எல்லாம் அறிவாளிகள் என்று பிதற்றிக்கொள்ளவும் மெத்த படித்தவர் என்று காட்டிக்கொள்ளவும், நானும் ஒரு படைப்பாளி என்று ஒரு விளம்பரம் தேடவே இது போன்று எழுதுகிறீர்கள்,
எங்கே திரை உலகை தொடாமல் ஒரு பத்து பதிவுகள் எழுதுங்கள் பார்ப்போம். உங்களால் எழுத முடியாது என்றே சொல்கிறேன்.
உங்கள் பதிவுகளை ஆரம்பத்தில் படிக்கும் போது ஆச்சர்யமாகத்தான் இருந்தது, பின்பு பதிவுலகில் உள்ளே சென்று பார்த்த பின்பு தான் உண்மை புரிந்தது உங்கள் பதிவு எதுவுமே உங்கள் சொந்த கருத்து இல்லை என்று, அப்படியும் 100 பதிவுக்கு மேல் எழுதிவிட்டீர்கள் பாராட்டத்தான் வேண்டும். உங்களை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது அந்த வகையில் உங்களுக்கு வெற்றிதான்.
உங்களை தவறாக சொல்லவில்லை திரைப்பட துறையினர் மீதான உங்கள் பார்வையை மாற்றி கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறேன்.
மணிரத்னம் எந்த சாதியில் இருந்தால் உங்களுக்கென்ன....... 
விஷமத்தை கக்கும் வினவு தளத்தில் இருக்கும் எழுத்துக்களை அப்படியே எழுதும் உங்களிடம்
வினவு தளத்தில் பின்னூட்டம் போடுபவர்களின் மனநிலையே கண்டிப்பாக இருக்கும்.
கம்யுனிசம் பேசுவதற்க்கு உங்களுக்கு அருகதையே இல்லை என்பதே என் தாழ்வான கருத்து. நீங்கள் சாதி உணர்வை தாண்டி இன்னும் வரவில்லை அப்படி இல்லை என்றால் நீங்கள் அனைவரும் சமம் என்றே நினைத்திருப்பீர்கள் உங்கள் எழுத்துக்கள் அவ்வாறாக இல்லையே,
நீங்கள் எல்லாம் ஏன் லெனின் பற்றி பேசுகிறீர்கள்.....?
நகைசுவையாக இருக்கிறது.  பதிவர் நரசிம்மை நீங்கள் கண்டித்து எழுதுகிறீர்கள் அவருக்கும் உங்களுக்கும் பெரிய  வித்தியாசமில்லை. 
நீங்கள் கூறுவது போல் திரைப்படம் பார்த்துதான் சமூகம் சீரழிகிறது என்பது நகைசுவையான ஒன்று திரைப்படங்கள் வருவதற்க்கு முன் சமூகம் யாரை பார்த்து கெட்டது திரைப்படம் பார்த்துதான் சுதந்திர போரட்டம் நடைபெற்றதா.......
அப்படி என்றால் திரை அரங்குகளே இல்லாத ஆப்கானிஸ்தானை என்ன சொல்வீர்கள்....... அங்கே சமூகம் நல்ல படியாக உள்ளதா உங்களுக்கு தெரிந்ததெல்லாம் ப்ளாச்சிமடா, தண்டகாரண்யா, பார்பனீயம் அதுவும் வினவு தளத்திலிருந்து இறக்குமதி.........
மணிரத்தினத்தை வசை வசை பாடும் நீங்கள் யாரின் படைப்புகளைத்தான் பாரட்டுவீர்கள்......
ஒரு வேளை வினவு தளத்தில் யாரையாவது பாரட்டினால் நீங்களும் வழிமொழிவீர்கள் இல்லையா............. 
சொந்த கருத்துக்களை எழுத பழகுங்கள் அதுவே எழுத்துலகில் உங்களுக்கென்று ஒரு தனி இடம் கிடைக்கும்
உங்களுக்கும் உங்கள் எழுத்தின் மீது ஒரு காதல் உணர்வை வளர்க்கும் ............ எல்லோரும் யாரையாவது பின்பற்றித்தான் வந்திருப்பார்கள் ஒரு கட்டத்தில் தனக்கென்ற ஒரு வழி ஏற்படுத்திக்கொள்வதே  நல்லது............