16-07-2010 இன்று அகவை 56ல் அடியெடுத்து வைக்கும் என்னை பெற்ற அம்மாவிற்க்கு இந்த பதிவு சமர்ப்பனம்.
நாங்கள் குடியிருக்கும் பகுதியில் சுப்புலெட்சுமி என்றால் யாருக்கும் தெரியாது சுப்பக்கா என்றால் தான் நிறைய பேருக்கு தெரியும்.
யாருடனாவது அம்மா பேசிக்கொண்டிருக்கும் போது நான் அழைப்பதை கவனிக்கவில்லை என்றால், சமயத்தில் நானும், உறக்க கூப்பிடுவது சுப்பக்கா.... என்றே...... அதில் ஒரு ஆனந்தம்
பிறந்தநாள் பரிசாக அக்கா அம்மவிற்க்கு ஒரு புடவை வாங்கி தந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. நான் ஒன்றும் வாங்கி தரவில்லை, இத்தனை ஆண்டுகள் உழைத்து உழைத்து எங்கள் மூவரையும் நன்றாகவே வளர்த்தார், மற்ற இருவர் வாழ்வில் முன்னேறிவிட, நானோ இன்றும், அவருடனேயே வளர்ந்து ஆனால் முன்னேற முடியாமல் அதற்காக முயன்று கொண்டே இருக்கின்றேன் ஒரு வேளை அவர் சொல்படி கேட்டிருந்தால் நானும் வாழ்வில் முன்னேறியிருப்பேன்.
இன்றும் அவருக்கு தொல்லை கொடுத்துகொண்டே தான் இருக்கிறேன். காலையில் எழுவதிலிருந்து வேலைக்கு கிளம்பும் வரை, பிறகு வேலை முடித்து வீடு திரும்பி சாப்பிட்டு தூங்கும் வரை அவருடன் விவாதம் தான்.
என் தாத்தாவின் (அம்மாவின் தந்தை) படைப்புகளை http://www.kundumalai.blogspot.com/ என் தம்பி வெளியிட்டதில் அம்மவிற்க்கு மிகுந்த மகிழ்ச்சி எங்கள் வீட்டுக்கு உறவினர் யார் வந்தாலும் தாத்தாவின் படைப்புகளை கணினியில் காண்பிக்க சொல்லுவார்
தினமும் தன் பெற்றோர் படத்திற்க்கு பூ வைத்து வணங்குவதை கடைப்பிடித்து வருகிறார். அவர் பிறந்த நாளில் அவரை நீடுழி வாழ வாழ்த்த வயதில்லை என்பதால் வணங்குகிறேன்.
இன்னொரு பிறவி எடுத்து வந்தாலும் உன் மகனாக பிறக்கின்ற வரம் வேண்டும் அது போதும். இந்த உலகில்
முகமூடி அணியாத ஒரே உறவு,கலப்படமில்லா அன்பு கொண்ட அம்மா மட்டுமே அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே
0 comments:
Post a Comment