Wednesday, July 28, 2010

காகித ஓடம்

கடிதம் எழுதி,
தொலை நகல்,
தந்தி அனுப்பி,
மின்னஞ்சல் அனுப்பி,
புறாவை தூது விட்டு,
பாராளுமன்ற உறுப்பினர்களை டெல்லி அனுப்பி
பத்திரிக்கைகளில் செய்தி சொல்லி,
இப்படி இருக்கும் வழிகளில் எல்லாம் மத்திய அரசை கெஞ்சி கூத்தாடி ஒரு வழியாக இலங்கைக்கு சிறப்பு தூதரை அனுப்ப பெரும்பாடு பட்டுள்ளார் தன்மான
தமிழ் சிங்கம்,
தமிழ் காப்பாளன்
என்று பெருமை பேசி கொள்ளும்
தி.மு.க தலைவர்.
சிறப்பு தூதர் அனுப்பி இலங்கையில் உண்மையாக நடப்பது என்ன என்று கண்டறிய போகிறாராம் என்ன ஒரு நகைச்சுவை.
இலங்கையோ ஐ.நா. சபை தலைவரையே முடிந்தால் வந்து பார் என்கிறது இதில் இவர் அனுப்பும் சிறப்பு தூதர் மட்டும் எம்மாத்திரம் அதுவும் தமிழ் தெரியாத சிறப்பு தூதர்.......?
ஏன் இதற்க்கு முன்னர் மக்கள் வரிப்பனத்தில் உங்கள் தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு சுற்றுலா சென்றார்களே அப்பொழுது என்ன பார்த்து கிழித்து வந்தார்கள் அதனால் முள்வேலியில் இருக்கும் தமிழர்கள் அவர்கள் வசித்த பகுதிகளில் மீள்குடியமர்த்தப்பட்டார்களா என்ன......? உண்மையை சொல்ல போனால்  ராச பக்சே,  திருமா உட்பட அனைவரையும் மிரட்டியே திருப்பி அனுப்பினார்.
ஆனால் நீங்கள் வந்து வெற்றி வெற்றி என்றும்,
நாங்கள் சென்றதால் தமிழர்கள் முள் வேளியில் முகாமில் இருந்து விடுவிக்க பட்டதாக தம்பட்டம் அடித்துக்கொண்டீர்கள். இப்பொழுது வேறு ஒரு ஏற்பாடு செய்கிறீர்கள். ஒரே குழப்பமாக இருக்கிறது
ஒரு முறையாவது உங்கள் முதலமைச்சர் பதவி என்ற ஆயுதம்  வைத்து மத்திய அரசை மிரட்டி பாருங்கள் பார்ப்போம்.
உங்களுக்கு எங்கே அதற்கு எல்லாம் நேரம் இருக்க போகிறது
உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் கனிமொழி பட குறுந்தகடு வெளியிடவும் விழாவில் குடும்ப பிரச்சனைகளை பற்றியும் பேசவே நேரம் போதவில்லை  அப்படி இல்லை என்றால்
பெண்சிங்கம்,
பெண்கரடி,
பெண்குரங்கு, என்று
திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை எழுத போய்விடுவீர்கள்.
நாட்டில் தலைவிரித்தாடும் மின்பற்றாக்குறையை 2 வருடங்களுக்கு மேலாக சரிசெய்துகொண்டே இருக்கிறீர்கள்
இலவச வண்ண தொலைக்காட்சியுடன் இலவச எரிவாயு அடுப்பு,
மலிவு விலையில் மது கொடுத்துக்கொண்டே இருங்கள்.
மக்கள் பிரச்சனை தீர ஒரு வழியும் எடுத்தது போல் தெரியவில்லை.
அப்புறம் மீதி இருக்கும் நேரத்தில் ஜெ.வை கேவலமாக பேசியும் குடும்பம் இல்லாதவள் என்றும் தரம் தாழ்ந்து தூற்றியும் திரைப்பட கலைஞர்களுக்கு 100 ஏக்கரில் இடம் மற்றும் வீடுகளின் அறிவிப்பு தொடரச்செய்வீர்கள்
உங்கள் மகன் மட்டும் பாராளுமன்றத்தில் பதில் அளிக்க தமிழ்மொழி அங்கீகரிக்க படுகிறது
ஆனால் இங்கேயோ நீதி மன்றங்களில் தமிழில் வாதாட அனுமதி இல்லை. என்ன கொடுமை இது
நீங்கள்  தானே கூறுகிறீர்கள் தமிழா தமிழா நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமாய் நான் மாறுவேன் அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம்.
அது கட்டு மரம் அல்ல காகித ஓடம்.....
உங்கள் கதை வசனத்தில் வெளிவந்த படத்தில் வருமே அந்த பாடல் வரி........... காகித ஓடம் கடலலை மீது போவது போலே ...........
அது தான் தமிழனின் நிலை நீங்கள் ஓடமாய் மாறினாலும் தமிழனை கவிழ்த்துதான் விடுவீர்கள்
இரு திராவிட கட்சிகளின் முடிவில் தான் தமிழகமும், தமிழனும் கறையேறுவான் இது உறுதி அது வரை கடலில் தத்தளிக்கும் காகித ஓடம் தான் தமிழனின் நிலை.

0 comments: