Tuesday, July 27, 2010

கடமை..... அது..... கடமை

சென்ற வாரம் குடும்ப நண்பர் ஒருவரின் வீட்டிற்க்கு செல்ல நேர்ந்தது, அவருக்கு மூன்று பெண் குழந்தைகள் மூன்றுமே படிப்பில் படு சுட்டிகள் மூத்த பெண் +2 முடித்து விமான ஓட்டுனர் பயிற்ச்சிக்காக காத்திருப்பதாக கூறினார். அடுத்தவர் +2 படித்து கொண்டிருப்பதாக கூறினார். அப்பெண் படிக்கும் பள்ளியில் கணித பாடம் எடுக்கும் ஆசிரியர் வகுப்பில் இரட்டை அர்த்த வசனகளுடன் மிகவும் ஆபாசமாகவும் பேசி வருவதாகவும்   பள்ளி முதல்வரிடம் புகார் செய்யும் பட்ச்த்தில் அவர்கள் நடவடிக்கை எடுக்காத நிலையில் புகார் அளித்த மாணவிகளை  அந்த ஆசிரியர் பழி வாங்கிவிட்டால்.....  கல்வி கேள்வி குறியாகிவிடும் என்றும் இது குறித்து புகார் செய்ய மாணவிகள் தயக்கம் காட்டுவதாகவும் கூறினார். அவர்களின் நிலையை உணர்ந்த நான் அவர்கள் பள்ளியின் மின்னஞ்சல் முகவரியை வாங்கி வந்தேன் பிறகு பின் வருமாறு மின்னஞ்சல் செய்தேன்.

தங்கள் பள்ளியில் +2 படிக்கும் ஒட்டு மொத்த மாணவர்கள் சார்பாக அனுப்பபடும் கண்ணீர் புகார் கடிதம் யாதெனில் +2 கணித ஆசிரியர் சீனிவாசன் அவர்கள் செய்யும் அசிங்க செயல்களை எழுத்தில் எழுதமுடியாது, வகுப்பில் அவர் பேசும் இரட்டை அர்த்த வசனங்களும் மாணவிகள் மீதான வக்கிர பேச்சுகளும் தொடர்ந்து கொண்டே போகிறது வகுப்பு நடத்துவதை தவிர்த்து அனைத்து தேவயற்ற வேலைகளையும் செய்கிறார். நாங்கள் கூறுவது பொய் புகார் எனும் பட்ச்சத்தில் அவரின் வகுப்பு நடவடிக்கைளை ரகசியமாக கண்கானித்து அதன் பிறகு ஒரு முடிவுக்கு வரலாம் இல்லை என்றாலும் கூட வகுப்பில் cctv பொருத்தினால் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம். நம் பள்ளி மீது வெளியிலிருந்து புகார் வரும் முன் நாமே அதை சரி செய்து கொள்வது நம் பள்ளிக்கு நல்லது. இதன் நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. தாங்கள் நேர்மையான நடவடிக்கை எடுக்க மறுக்கும் பட்சத்தில் பள்ளி கல்வி துறையில் புகார் அளிக்க தயங்க மாட்டோம் என்று கண்ணீருடன் கூறிக்கொள்கிறோம்.

மின்னஞ்சல் அனுப்பி இரண்டு நாட்கள் கழித்து அப்பெண் பள்ளி செல்லும் வழியில் என் வீட்டிற்க்கு வந்து அந்த கணித ஆசிரியரை பள்ளி நிர்வாகம் அந்த பள்ளியை விட்டே நீக்கிவிட்டதாகவும், மாணவிகள் அனைவரும் மகிழ்வுடன் இருப்பதாகவும் கூறினார். மின்னஞ்சல் பற்றி யாருக்கும் சொல்லவேண்டாம் என்று முன்பே கூறியிருந்தேன். அனைத்து மாணவிகள் சார்பாக எனக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். இதற்க்கு நன்றி எல்லாம் தேவையில்லை இது எனது கடமை என்று கூறி அனுப்பினேன். பெருமை பீற்றி கொள்ள இதை நான் இங்கு பதியவில்லை இது போன்று நம் கண் முன், அல்லது நம் கேட்கும் இது போன்ற தவறுகளை  தட்டி கேட்க தவறினால் நாமும் அதற்க்கு துணை போகிறோம் என்றே அர்த்தம் அநீதியை கண்டிப்பாக தட்டி கேட்க்க வேண்டும் ஏனேன்றால் அது கடமை..... அது..... கடமை நீங்கள் இது போல் ஏதாவது தட்டி கேட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம் அல்லது மின்னஞ்சலில் அனுப்பலாம்.

0 comments: