Monday, July 26, 2010

மலர்ந்தும் மலராத

அது என்ன பிஞ்சு குழந்தைகளை கொல்வது புதிய நாகரீகமா......?  பூவரசி, அப்துல் கபூர், அடுத்து யாரோ.....?  தன்னை திருமனம் செய்து கொள்ள மறுத்த அவனை பழி வாங்காமல் விடுத்து அந்த பிஞ்சு குழந்தை ஆதித்தியாவின் உயிரை கொடூரமான முறையில் பறித்தது எந்த விதத்தில் பழி தீர்த்தார் என்று தெரியவில்லை அனைத்தையும்  திட்டமிட்டே செய்துவிட்டு இப்போது புரியாமல் செய்து விட்டது போல் கண்ணீர் வேறு வடிக்கிறார் இது போன்று செய்பவர்கள் எல்லாம் மன நலம்  பாதிக்க பட்டவர்களே அதில் மாற்று கருத்து யாருக்கும் இருக்காது
அடுத்து கொடூரன் அப்துல் கபூர் இவனோ தன் கனவில் காளி வந்ததாகவும் தலைப் பிள்ளையை நரபலியிட்டு அதன் ரத்தத்தை குடித்து, உடலையும் தலையையும் தனிதனியாக கடற்கரை பகுதியில் புதைத்தால், யோகம் வரும் என கூறியதால், குழந்தையை கடத்தினேன். தூத்துக்குடி அருகே ஏரலில், கத்தியால் குழந்தை கழுத்தை அறுத்து கொலைசெய்து, வாளியில் ரத்தத்தை பிடித்து குடித்தேன். பின் தலையை, திருச்செந்தூர் அருகே கல்லாமொழி தர்கா அருகே கடற்கரை பகுதியில் புதைத்துவிட்டு, உடம்பை தூக்குச்சட்டியில் வைத்து, ராமநாதபுரம் ஏர்வாடி தர்கா கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்து புதைத்ததாக தெரிவித்துள்ளான் இவன் வாக்குமூலம் அனைவரையும் ஒரு நிமிடம் கதி கலங்க வைக்கிறது என்னை பொறுத்த வரை இவனும் ஒரு வகை மன நோயாளியே...............

கருப்பு ஜூலை அனுதாபிக்கும் நம் தமிழ் நெஞ்சங்கள் உயிரிழந்த அந்த குழந்தைகளுக்கும் சேர்த்து அனுதாபிக்கட்டும்

இன்னும் ஒரு செய்தி அது நடக்கும் முன் காக்க வேண்டியது தன்னார்வ தொண்டு நிறுவனமும் காவல் துறையும் தான் என்று நினைக்கிறேன் சிவகங்கை அருகே காளையார்கோவிலில், மனநலம் பாதித்த பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை, போதிய பாதுகாப்பு இன்றி உள்ளது. இங்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன், மன நலம் பாதித்த, 25 வயது பெண் வந்திருக்கிறார். நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு, பழக்கடை நடத்தி வரும் பாப்பாள் என்பவர்  அடைக்கலம் கொடுத்து  இரு மாதத்திற்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் கொடுத்து வருகிறார். குழந்தையை பார்க்க யாராவது வந்தால், அதை எடுத்து செல்ல வந்திருக்கிறார்கள் என அச்சத்தில் அங்கிருந்து சென்று விடுகிறார். தற்போது, செந்தமிழ் நகரை சேர்ந்த பொட்டு (70) என்ற ஏழை பெண், குழந்தையை கருணை உள்ளத்துடன் பராமரித்து வருகிறார். அப்பகுதியினர், குழந்தைக்கு காளீஸ்வரன் என பெயரிட்டுள்ளனர். மனநலம் பாதித்த பெண்ணுக்கு, அங்குள்ளவர்கள் உணவு கொடுக்கின்றனர்.
அரசு, தன்னார்வ நிறுவன இல்லத்தில் சேர்த்தால் மட்டுமே, குழந்தைக்கு நிரந்தர பாதுகாப்பு, கல்வி  கிடைக்கும். இதற்கு தன்னார்வ நிறுவனங்கள் முன்வர வேண்டும். விபரீதங்கள் நடப்பதற்க்கு முன் நட்வடிக்கைகள் எடுத்தால் நல்லது.....

ஹிதேந்திரன் தொடங்கி வைத்த அந்த உடல் உறுப்புகள் தானம் இன்று பல உயிர்கள் வாழ வழிவகை செய்கின்றது என்றே சொல்லலாம் நாட்டில் முதன் முறையாக, பிறந்து நான்கே நாட்களான குழந்தையின் கண் மற்றும் இதய வால்வுகள் தானம் செய்யப்பட்டுள்ளன. ஐதராபாத்தை சேர்ந்த ஹேமவதி மற்றும் கிஷார் குமார் தம்பதியருக்கு, ஜூ லை 8ம் தேதி ஒரு பெண் குழந்தை குறை பிரசவத்தில் பிறந்தது. பிறந்து இரண்டு நாட்கள் வரை குழந்தைக்கு எவ்விதப் பிரச்னையும் இல்லை. மூன்றாம் நாள் உறுப்புக்கள் ஒவ்வொன்றாக செயலிழக்கத் தொடங்கின.குழந்தை வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், ஜூலை 12ம் தேதி குழந்தைக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். குழந்தையின் பெற்றோர் அதிர்ந்தனர். இருப்பினும், குழந்தையின் மாமா, பெற்றோரிடம் குழந்தையின் உறுப்புக்களைத் தானம் செய்வது குறித்துப் பேசினார். அதன் மூலம் இன்னும் இரண்டு குழந்தைகள் வாழ வழியிருப்பதையும் அவர் எடுத்துக் கூறி, பெற்றோரின் சம்மதத்தைப் பெற்றார். அதன்பின் டாக்டர்கள், குழந்தையிடமிருந்து இதய வால்வுகள் மற்றும் கண்களை எடுத்துப் பாதுகாத்து வைத்தனர். இதயவால்வுகள் ஒரு குழந்தையிடமிருந்து கிடைப்பது மிக அரிதான செயலாக மருத்துவ உலகில் கருதப்படுகிறது.ந்த குழந்தை தானம் அளித்த இதய வால்வுகள் மூலம் பிழைத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் செயற்கை வால்வுகள் விலை அதிகமானவை என்பதோடு, இயற்கையான வால்வுகள் போல பொருந்திச் செயல்படும் வாய்ப்புகளும் குறைவு. இப்போது இக்குழந்தையின் தானத்தால் இரண்டு குழந்தைகளுக்கு இதய வால்வுகளும், கண்களும் கிடைத்து அவை புது வாழ்க்கையைத் தொடங்கும்' என்றார். நாட்டில், மிக மிக இளம் வயதில், தன் உறுப்புக்களைத் தானம் செய்தவர் என்ற பெருமையுடன், அந்த மலர்ந்தும் மலராத குழந்தை இம்மண்ணில் தன் தானம் மூலம் அழியாப் புகழையும் விட்டுச் சென்றுள்ளது.

0 comments: