Wednesday, July 28, 2010

வெற்றி மீது வெற்றி வந்து

கடின உழைப்பு, சரியான திட்டமிடல், தொலை நோக்கு பார்வை இவை இருந்தால் மட்டுமே ஒருவர் வாழ்விலும் சரி செய்யும் தொழிலிலும் சரி இரண்டிலுமே வெற்றியை பெற முடியும். அப்படி வெற்றி பெற்று சமூகத்தில் இன்று பலரும் வியந்து பார்க்கும் உயர்ந்த மனிதர் ஒருவரை பற்றிய பதிவே இது.  நான் முன்பு பணியாற்றிய நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரரான திரு. கிரி அவர்கள் தான் அந்த பாராட்டுக்குரியவர் . நான் பல நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறேன் ஆனால் அவரின் நிறுவனத்தில் பணியாற்றியது வாழ்வில் மறக்க முடியாதது நண்பர் ரமேஷின் பரிந்துரையின் பேரிலேயே அந்த வேலை எனக்கு வழங்கப்பட்டது.  வேலையில் இருந்த போது நான் பல முறை தவறு செய்து இருக்கிறேன் ஆனால் திரு. கிரி அவர்கள் ஒரு முறை கூட கடிந்து பேசியது இல்லை மாறாக அந்த தவறை திருத்தி கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனையே சொல்லுவார் நான் பார்த்த வரையில் நிறுவனத்தில் பணி புரியும் ஒருவரை கூட கடிந்து பேசி பார்த்தது இல்லை எப்பொழுதும் அவர் முகத்தை புன்னகையுடனேயே பார்க்கலாம் அதுவே அவரின் தொடர் வெற்றிக்கு முதல் படி என்று நினைக்கிறேன். அழியா புகழ் கொண்ட கவிஞர் கண்ணதாசன் தன் சுயசரிதை நூலான சினிமா சந்தையில் 30 ஆண்டுகள் என்ற புத்தகத்தில் இவ்வாறு கூறுகிறார் மனிதன் சிறந்து வாழ 3 வகையான புத்தி வேண்டுமாம் . பணம் சம்பாதிக்க ஒரு புத்தி, சம்பாதித்த பணத்தை சேர்த்து வைக்க ஒரு புத்தி, சேர்த்து வைத்த பணத்தை சிக்கனமாக செலவு செய்ய ஒரு புத்தி வேண்டுமாம். அவர் சொன்ன அந்த மூன்றும் திரு. கிரி அவர்களுக்கு பொருந்தும் திரு. கிரி அவர்கள் மிகுந்த தெய்வ பக்தி உடையவர் வருடம் தவறாமல் நடை பயணமாக திருப்பதி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். LION"S CLUB OF TEMPLE CITY  தலைவராக ஜூலை 29ல் பொறுப்பேற்க உள்ளார். உங்கள் பணி சிறக்க, உங்களின் கடின உழைப்பின் பலனாக வெற்றி  மீது வெற்றி வந்து உங்களை சேரும் என்று வாழ்த்தும் ஆயிரம் ஆயிரம் நெஞ்சங்களில் நானும் ஒருவன் இந்த ஆயிரத்தில் ஒருவன்

0 comments: