ஐரம் சானு சர்மிளா கடந்த பத்து வருடங்களாக உண்ணாவிரதம், உலகில் யாரும் இது போல இருந்திருக்க முடியாது, இருக்கவும் முடியாது, தற்கொலை முயற்சி வழக்கு போட்டு மூக்கு வழியே திரவ உணவை செலுத்துகிறது காவல் துறை மணிப்பூர் மாநிலத்தில், ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள "ஆயுதப்படை சிறப்புச் சட்ட'த்தை திரும்பப்பெறக்கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்
இந்தியாவிற்கு அரசு முறை சுற்றுப்பயணம் வந்துள்ள அமெரிக்கா நாட்டு அதிபர் ஒபாமா காந்தி வாழ்ந்த நாடு என்று புகழ்ந்து கொண்டிருக்க ஆனால் இங்கோ அவர் அவர் வழியில் சத்தியாகிரகம் நடத்தி கொண்டிருக்கும் சகோதரி சர்மிளாவைத்தான் கண்டுகொள்ள ஆளில்லை.
மணிப்பூர் தலைநகரம் இம்பாலுக்கு அருகே மாலோம் என்ற இடத்தில், கடந்த 2000ம் ஆண்டு, நவம்பர் 3ம் தேதி பஸ்சுக்காக, காத்திருந்த அப்பாவி பொதுமக்கள் 10 பேரை, ராணுவம் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றது. இதில் ஒருவர் கர்ப்பிணி பெண் ஆவார் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தையடுத்து, ராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் போராட்டம் தீவிரமடைந்தது.
கடந்த பல ஆண்டுகளாக, சுயாட்சி உரிமை கோரி, நக்சலைட்களும், பயங்கரவாதிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கு கடந்த 1980ம் ஆண்டு முதல், பயங்கரவாதிகளையும், நக்சலைட்களையும் ஒடுக்குவதற்காக ராணுவத்திற்கு "ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்' வழங்கப்பட்டது
இந்த சிறப்புச் சட்டத்தின்படி, பொது இடத்தில் ஐந்து பேர் கூடி நின்றாலே அது பயங்கரவாத நடவடிக்கையாக கருதப்படும். ராணுவம் மற்றும் துணை ராணுவத்தைச் சேர்ந்த சாதாரண சிப்பாய்கள் கூட, தங்கள் மேலதிகாரியின் அனுமதியின்றி யாரையும் சுட்டுக்கொல்ல முடியும். அவர்கள் மீது எந்த நடவடிக்கையோ, விசாரணையோ நடத்தப்படாது. நீதிமன்றத்தின் அனுமதியின்றி, எங்கு, எப்போது வேண்டுமானாலும் சோதனை நடத்த முடியும். ராணுவத்தால் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் வேண்டியதில்லை. இந்த சட்டம் அங்கு அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்து, அங்கு மனிதஉரிமை மீறல்கள் நடந்து வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.

ராணுவத்தினரால், அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்படுவது, பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுவது என மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளன. கடந்த 20 ஆண்டுகளில், அங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்த ஆயுதபடை சிறப்பு சட்டமானது காங்கிரஸ் போராட்டத்தை கட்டுப்படுத்த ஆங்கிலேயர்களால் சுதந்திரத்திற்கு முன்பு உருவக்கப்பட்டது ஆனால் வேறு ஒரு வடிவில் இன்றும் தொடர்வது வேதனையானது இந்த சட்டத்தை எதிர்த்துதான் காஷ்மீரிலும் கலவரம் நடைபெற்றது. தீவிரவாதிகளை ஒடுக்குவதை விடவும் அதன் பின்னனியில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க முயன்றால் தான் இதற்கு ஒரு வழி கிடைக்கும் இதெல்லாம் கண் மூடி திறக்கும் போதே முடிந்து விடாது என்பது அனைவருக்கும் தெரியும், திடமான முடிவுகள் எடுக்கும் அரசுகள் வரும் வரை எத்தனை சர்மிளாக்கள் உண்ணா நோன்பு இருந்தாலும் அர்த்தமற்றதே
8 comments:
' திடமான முடிவுகள்
எடுக்கும் அரசுகள் வரும்
வரை எத்தனை சர்மிளாக்கள்
உண்ணா நோன்பு இருந்தாலும்
அர்த்தமற்றதே'
well said
மனதினை நெகிழ வைக்கும் பதிவு!!
தளத்தை பார்வையிட்டு கருத்துரையிட்டதற்கு நன்றி திரு. KICHA தொடர்ந்து தளத்தை பார்வையிடவும்
தளத்தை பார்வையிட்டு கருத்துரையிட்டதற்கு நன்றி திரு. ஆர்.ராமமூர்த்தி தொடர்ந்து தளத்தை பார்வையிடவும்
Your blog shows the other side of the coin which indian govt is not aware of. I don't have words to type as whole india is corrupted with politicians. Now a days politicians make people corrupted by giving money and freebies... so we cannot expect this stupid govt to take a stubborn stand and solve the issue like Naxals, Ulfa, Kashmir and Maoists
தளத்தை பார்வையிட்டு கருத்துரையிட்டதற்கு நன்றி திரு. Prasad தொடர்ந்து தளத்தை பார்வையிடவும்
'திடமான முடிவுகள்
எடுக்கும் அரசுகள் வரும்
வரை' மண்ணிக்கவும்.இது இந்தியாவில் என்றுமே நடக்காது நன்பர்களே.எல்லா ஊடகங்களும் அரசின் ஜால்ராக்களே.உண்மை உடனே வெளிவராது.
திடமான முடிவுகள் எடுக்கும் அரசுகள் வருவதற்கு தடையாக ஆட்சியை பிடிக்க மதத்தை உபயோகிக்கும் ஒரு சிறு கூட்டம் இருகிறதே
Post a Comment