இந்தியாவின் தலை என்று வர்ணிக்கப்படும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றுவதால் ராணுவ தளபதிக்கு விசா வழங்க மறுத்து சீனா இந்திய அரசின் மூக்கை உடைத்துள்ளது.
இது முதல் முறை அல்ல, இது போன்று பல வகைகளில் சீனா நம்மை சீண்டி பார்க்கிறது. ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளையும், அருணாசல பிரதேசத்தின் சில பகுதிகளையும் சீன அரசு உரிமை கொண்டாடுகிறது
அவர்கள் தங்கள் எல்லையை நகர்த்தி கொண்டே நமது இந்திய எல்லையை தாண்டி உள்ளே வந்துவிட்டதாகவும் பல ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. உயர் கோபுரங்கள், தொடர் வண்டி நிலையங்கள், இருப்பு பாதைகள் இன்னும் பலவற்றை சீன அரசு அமைத்துவிட்டது இருப்பினும் இந்திய அரசு அதை பெரிதாக கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் உண்டு
கூகிளும் தன் பங்கிற்க்கு இந்திய வரை பட எல்லையை மாற்றி காட்டி சீனா துணையுடன் இந்தியாவை சீண்டுகிறது முன்பு பாகிஸ்தான் மட்டுமே ஜம்மு காஷ்மீர் பகுதியை சொந்தம் கொண்டாடியது, இப்போழுது சீனாவும் கைகோர்த்துள்ளது எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கோட்டில் சீனாவும் பாகிஸ்தானும் இணைந்துள்ளது
நமது அரசும் வழக்கம் போல இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் நல்லுறவு நல்லுறவு என்று பல்லிளித்து கொண்டிருக்கிறது. சீனா நமது அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் தமது தளங்களை பகிரங்கமாக அமைத்து வருகிறது இலங்கைக்கு புனரமைப்பு நிதி என்கிற பேரில் பெரிய துறைமுகமே இலவசமாக அமைத்து தருகிறது, இதன் மூலம் இந்தியாவிற்கு எதிராக கடல் வழி தாக்குதலுக்கும் தயார் செய்வதாக சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன இதை எல்லாம் தூக்கி போடும் செய்தியாக அருணாசல பிரதேச மக்கள் யாராவது சீனாவிற்கு செல்ல சீன தூதரகத்தில் விசா அனுமதி கேட்டால் நகைப்பாக நமது நாட்டிற்குள் எதற்கு விசா என்று பதில் வருகிறதாம். என்ன ஒரு திமிர், அருணாசல பிரதேசம் நமது இந்திய பகுதியா அல்லது சீனவின் பிரதேசமா ஆட்சியாளர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். ஒரு வேளை அதையும் விற்றுவிட்டர்களோ என்னவோ......? சீனாவின் அனைத்து நடவடிக்கைகளையும் இப்போழுதே கண்டிக்க வேண்டும் இல்லை என்றால் எல்லாம் முடிந்த பிறகு சட்டி சுட்டதடா கை விட்டதடா என்று பாடுவதில் பலன் ஒன்றும் இருக்காது.

1 comments:
கை விட்டதடா :)
Post a Comment