சதுரங்க உலகின் சக்கரவர்த்தி,
மூன்று வடிவங்களிலும் தொடர்ந்து உலக சாம்பியன்
பத்மபூஷன் விருது பெற்ற முதல் விளையாட்டு வீரன்
ஆனால் தமிழனாய் பிறந்த ஒரு காரணத்தினால்
"இந்தியனா" அல்லது "அந்நியனா"
என்று சந்தேகம் கிளப்பி நோகடித்துள்ளது மத்திய மனித வள மேம்பாட்டு துறை. டாக்டர் பட்டம் வழங்க ஹைதராபாத் பல்கலைகழகம் தீர்மானித்து மத்திய அரசு ஒப்புதலுக்காக காத்திருந்த போது இந்த சர்சையை அவிழ்த்து விட்டு சதுரங்க உலகின் சக்கரவர்த்தி ஆனந்தை கேவலப்படுத்தியுள்ளது
சர்வதேச போட்டிகளில் விளையாட ஏதுவாக ஸ்பெயினில் குடியிருந்து வருவதால் அவர் இந்தியன் இல்லை என்பதா.....? கவுரவ பட்டத்திற்க்கும் குடியுரிமைக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறப்படுகிறது பிறகு ஏன் இந்த விஷமத்தனம்

அட மத்திய அரசு தான் தமிழனை புறக்கணிக்கிறது என்றால்
அருகில் இருக்கும் கேரளாவுமா.....?
கலைக்கு மொழி வேறுபாடுகள் கிடையாது என்று கூறப்படுகிறது ஆனால் அதற்கும் உண்டு என்று நிருபித்துள்ளது கேரள திரை உலகம்.
பல மொழிகளில் நடித்து இன்று சிறந்த நடிகன் என்று கூறப்படும் நடிகர் கமல்ஹாசனை பாராட்டி கேரள அரசு எடுத்த விழாவை புறக்கணித்து தமிழனுக்கு கேரள மண்ணில் பாராட்டு விழாவா......?
என்று ஒட்டு மொத்த திரை உலகும் புறக்கணித்து கலைக்கும் மொழிக்கும் வேறுபாடு உண்டு என்று பதிவு செய்துள்ளது.
நாம் இந்திய நாடு என் நாடு இந்தியன் என்பது என் பேரு
என்று பாடி கொண்டு திரிகிறோம்
ஆனால் தொடர்ந்து
தமிழன் என்பதால் பல வழிகளில் புறக்கணிக்க படுகிறான் என்பதே உண்மை.
0 comments:
Post a Comment