Monday, June 7, 2010

என்றைக்கு அந்த விடிவு காலம்

சுமார் 15,000 பேர் உயிரிழப்பிற்க்கு காரணமான போபால் விஷ வாயு வழக்கில் 24 ஆண்டு கழித்து கேலிக்கூத்தான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது வேதனையான விடயம் என்னவென்றால் முக்கிய குற்றவாளி ஆண்டர்சன் இது வரை சிக்கவில்லை வழக்கில் தொடர்புடைய 8 குற்றவாளிகளுக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 1 லட்சம் அபராதம். விஷ வாயு கசிந்து இத்தனை உயிர் இழப்பிற்க்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கோ 5 லட்சம் அபராதம்.குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தீர்ப்பு வழங்கிய சில நிமிடங்களிலே 25 ஆயிரம் சொந்த பினையில் வெளியே விடப்பட்டனர் மேல் முறையீடு செய்யவும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.தீர்ப்பை கேட்க கூடியிருந்த பாதிக்கபட்ட மக்கள் தீர்ப்பை கேட்டவுடன் குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனை வழங்குமாறு ஆவேச குரலிட்டனர்.ஆனால் கேட்க்கத்தான் அரசும் நீதித்துறையும் தயாராய் இல்லை.

அது சரி பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு..........? 24 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வந்து என்ன செய்ய..... நிவாரணம் யாரிடம் கேட்பது யாரை குறை சொல்வது. ஓர் உயிர் பலிக்கு பல லட்சம் தமிழர்களின் உயிர் பலி கேட்ட இந்திய நாட்டு மருமகள் சோனியா என்ன சொல்ல போகிறார். அமெரிக்கா மீது போர் தொடுப்பாரா இல்லை சர்வதேச நாடுகளிடம் முறையிடுவாரா இல்லை இந்தியன் தானே பாதிக்க பட்டுள்ளான் என்று தமிழர்கள் பிரச்சனைகளில் செயல் பட்டது போல் இருப்பாரா......? நிச்சியம் அவரின் இத்தாலிய மனம் இந்தியருக்காக இறங்கி வரவே வராது. அதை எதிர்பார்ப்பதும் தவறு அவர் இந்தியராய் இருந்தால் தானே...

இதே போன்று நம் இந்தியர் யாரேனும் ஒருவர் வெளிநாட்டில் இது போன்று செய்திருந்தால் ஆண்டர்சன் போல் எளிதாக தப்பி இருக்க முடியுமா.....? கண்டிப்பாக முடியவே முடியாது ஏன் என்றால் நம் நாட்டு சட்டங்கள் போல் இல்லை அங்கே எல்லாம் தப்ப முடியாத படி சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அவ்வளவு ஏன் ....? நம் அருகிலேயே இருக்கும் சீனாவை எடுத்து கொள்வோம் எந்த நாட்டவரும் எளிதில் அங்கே தொழில் தொடங்கலாம். ஆனால் விதி முறை மீறல் முடியாது. நீங்கள் தொழில் தொடங்க வேண்டும் என்றால் திட்டமதிப்பீட்டில் 2 மடங்கு அரசுக்கு வைப்பு தொகையாக செலுத்த வேண்டும் தொழிற்சாலை அமைய உள்ள இடம் உங்கள் பெயரில் வாங்க முடியாது அரசின் கட்டுப்பாட்டிலே அந்த இடம் இருக்கும் தொழிலாளர் சட்டம் மிக கடுமையாக பின்பற்ற பட வேண்டும் உங்கள் நிறுவன வருமானத்தில் 25% வரியாக செலுத்த வேண்டும். இது போக நீங்கள் தொடங்கும் தொழிலானது சுற்றுச்சூழலை மாசு படுத்தாமல் இருக்க வேண்டும் முழுக்க முழுக்க அந்நாட்டவரே தொழிற்ச்சாலையில் பணியாற்ற வேண்டும் நிர்வாகத்திலும் இதே விதி முறை தான். சிலர் நினைக்க தோன்றும் கம்யூனிச நாட்டில் இது ஒன்றும் பெரிது இல்லை என்று உண்மை அதுவல்ல என் நாடு என் மக்கள் என்று ஆள்பவர்கள் நினைப்பதே இதற்க்கு காரணம். அது தான் உண்மையான மக்களாட்சி உலகிலேயே இந்தியா தான் ஜனநாயக நாடு என்று தம்பட்டம் அடித்து கொள்கிறது. இங்கே நடந்தது என்ன.......? நடப்பது என்ன.....?

நம் நாட்டில் பதவிக்கு வருபவர்கள் மன நிலை எப்படி இருக்கிறது.....? வந்த வரை லாபம் என்று கொள்ளை அடித்து போனது தான் மிச்சம் அந்த மிச்சம் இருப்பதையும் அம்பானி சகோதரர்கள் போன்றவர்கள் பிரித்து எடுத்து கொள்கின்றனர். பிறகு மக்களின் நிலை......? பரிதாப நிலை தான். அந்த கோரச்சம்பவம் நமக்கு ஒரு பாடம் தான் அதிலிருந்து கற்றுக்கொண்டவை ஏராளம். நீதித்துறை மட்டுமே அனைத்தையும் சரி செய்து விட முடியாது. ஆள்பவர்களின் மனநிலையும் மாற வேண்டும். என் நாடு, என் மக்கள் என்று நினைக்க வேண்டும். நினைப்பவர் யாரோ....? என்றைக்கு அந்த விடிவு காலம்.

0 comments: