Sunday, June 13, 2010

என்னத்த கொடுத்து என்னத்த செய்ய


ஆண்டர்சனை ஒப்படைக்க இந்தியா மறு முறை கோரிக்கை வைத்தால் அதை பரீசிலிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது சரி அப்படியே ஒரு வேளை இந்தியாவிடம் ஒப்படைத்தால் என்ன நடக்கும். அவரை விசாரிக்க ஒரு சிறப்பு நீதி மன்றம் அமைக்கப்படும் ஆதற்கு ஒரு நீதிபதி, அரசு சார்பாக ஒரு வழக்கறிஞர், குற்றவாளிக்கு தனி சிறை, பாதுக்கப்புக்கு காவல் துறை, குற்றவாளி சார்பாக ஒரு வழக்கறிஞர் நியமிக்கபடுவார், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கங்கே போராட்டம், கல்வீச்சு சம்பவம், பால்தாக்கரே போன்ற ஒரு அரசியல்வாதி இதை கையில் எடுத்துக்கொண்டு போராடுவார், அதை ஊடகங்கள் பரபரப்பாக எழுதும், தொலைகாட்சிகள் மாறி மாறி ஒளிபரப்பும், அங்கங்கே சூடான விவாதங்கள் நடைபெறும், இணையத்தில் இதை வைத்து நிறைய பதிவுகள் வரும், ஒரு வழியாக விசாரணை தொடங்கி 2 அல்லது 3 ஆண்டுகள் கழித்து 200 அல்லது 300 பக்க தீர்ப்பு வாசிக்கப்படும். வழக்கம் போல குற்றவாளி மீது குற்றம் இல்லை என்று தீர்ப்பு வரும். தீர்ப்பு பாதிக்கபட்ட மக்களுக்கு சாதகமாக வந்தால் மட்டும் என்ன செய்ய போகிறார்கள் இழப்பீடு கொடுப்பார்கள் தலா 1 லட்சம் அல்லது 2 லட்சம் அதை வைத்து பாதிக்கபட்டவர்கள் என்ன செய்ய முடியும் ஏற்கனவே 26 வருடங்கள் கடந்து விட்டது இதிலே ஒரு தலைமுறை முடிந்துவிட்டது மிச்சம் இருப்பவர்களுக்கு இழப்பீடு கொடுத்து எதை சமன் செய்வார்கள். குற்றம் சாட்டப்பட்ட ஆண்டர்சன்னுக்கோ இப்பொழுது வயது 85, தீர்ப்பு வரும் வேளையில் எப்படியும் 90 வயது ஆகி இருக்கும். அந்த வயதில் அவருக்கு சிறை தண்டனை கொடுத்து என்ன செய்ய, பாதிக்கபட்டவர்களின் வாழ்க்கை தொலைந்ததே மிச்சம்.இனி இது போன்று ஒரு சம்பவம் நடைபெறாமல் தடுக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வது அரசின் கடமை.

0 comments: