20 ஆண்டுகளுக்கு மேலாக 15ஆயிரம் கோடி
மக்கள் வரி பணம் செலவிட்டு இறுதி கட்டத்துக்கு வந்து இந்தாண்டு கடைசியில் ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி தொடங்கும் அதில் பாதி தமிழகத்துக்கு கிடைக்கும் என்ற நிலையில் இந்த திருப்பம் ஏற்பட்டிருப்பது மாநிலத்தின் ஏனைய பகுதி மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கக்கூடும். மின்சார தட்டுப்பாடு காரணமாக வீட்டிலும் வெளியிலும் தமிழக மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகள் சொல்லி
தெரியவேண்டியதில்லை.
உலகில் 450க்கு மேற்பட்ட அணு மின் நிலையங்கள் செயல்படுகின்றன. சீனா போன்ற நாடுகள் 30க்கும் மேற்பட்ட அணு உலைகளை புதிதாக நிறுவிக் கொண்டிருக்கின்றன. ஜப்பானில் சுனாமியால் நேர்ந்த சோகத்துக்கு பிறகு அணு உலைகள் குறித்த அச்சம் அதிகரித்த போதிலும், பெரும்பாலான நாடுகள் அணு மின் உற்பத்தி திட்டங்களை
கைவிடவில்லை.
ஆபத்து இல்லாத இடம்தான் ஏது? பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவதில் அவை தீவிரம் காட்டுகின்றன.
இங்கேயும் நிலம் கையகப்படுத்திய நேரத்திலேயே பிரதிநிதிகள் என்று சுருக்காமல் ஊர்மக்களை அழைத்து
அனைத்து விவரங்களையும் வெளிப்படையாக பகிர்ந்து, சந்தேகங்களுக்கு நேர்மையான விளக்கம் அளித்து,
அவர்களின் நம்பிக்கையை பெற்றிருந்தால் இழுபறியை தவிர்த்திருக்கலாம். இருட்டுக்கு பழகிவிட்டால் வெளிச்சம்
தேவையில்லைதான்.
அடிப்படை கட்டமைப்பான மின்சார பற்றிய தொலை நோக்கு இல்லாமல் பன்னாட்டு நிறுவனகளுக்கு அழைப்பு விடுத்து அவர்களுக்கும் மின்சாரம் இல்லாமல், குடிமக்களையும் மின்சாரம் இல்லாமல்தவிக்க விட்டு மொத்ததில் குழம்பி நிற்கும் கையாளாகாத அரசுகளை என்ன செய்ய...?
ஏ....! மக்கள் நலனில் அக்கறை இல்லாத மத்திய மாநில அரசுகளே ஊழலில் திளைத்து கொண்டிருப்பதை விட்டு மக்களுக்கு
மின்சாரம் சீராக கிடைக்க செய்யுங்கள் ஏதாவது செய்யுங்கள்

3 comments:
//

இது அவர்கள் காதில் விழாது ..
அவர்களுக்கு ஊழல் செய்யவே நேரம் பத்தல ...
இன்று என் வலையில் ...
இது நியாயமா ? யாராவது பதில் சொல்லுங்கள்.
Post a Comment