ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல், கிரிகெட் ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி ஊழல் போன்றவற்றால் நாறிப்போயிருக்கும் மத்திய கூட்டணி அரசு போல் கர்நாடகாவில் உள்ள எடியூரப்பா தலைமையிலான பிஜேபி அரசும் பல ஊழலில் சிக்கி நாறி வருகிறது.
ஊழல், முறைகேடுகளில் காங்கிரஸ் கட்சிக்கு சளைத்தவர்கள் நாங்கள் அல்ல என்பதை பாஜகவினரும் நிரூபித்திருக் கிறார்கள். ஏற்கெனவே குதிரைபேரத்தால் பல கோடி ரூபாய் விலை கொடுத்து மாற்று கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை ஓட்டிக் கொண்டிருக்கும் எடியூரப்பா அரசுக்கு புதிய தலை வலியாக உருவாகியுள்ளது இந்த நில ஊழல்.
பெங்களூரு மற்றும் மாநிலத்தின் முக்கிய மான நகரங்களில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தனது மகனுக்கும் மாநில பிஜேபி தலைவர் ஈஸ்வரப்பாவுக்கும் மற்றும் தனக்கு வேண்டப்பட்ட சிலருக்கும் விதிமுறைகளை மீறி வாரி வழங்கியுள்ளார். பெங்களூரில் தனது மகனுக்கு சொந்தமாக வீடு இருந்தபோதிலும் அவருக்கு நிலமோ, வீடோ இல்லை என்ற பொய்யான தகவல்கள் அடிப்படையில் பெங்களூரு வளர்ச்சிக் குழுமத்தை ஏமாற்றி நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவும் பெங்களூருவில் மிகவும் முக்கியமான இடத்தில் அந்த நிலம் அமைந்துள்ளது.
இந்தியாவில் உலகமயம், தாராளமய பொருளா தாரக் கொள்கைகள் அமலுக்கு வந்த பின்னர், கடந்த பல ஆண்டுகளாகவே நிலத்தின் மதிப்பு செயற்கையாகவே பல மடங்கு உயர்த்தப்பட்டது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலத்தை தாரை வார்க்கும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடக அரசுகளால் நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் தேவைக்கு அதிகமாக நிலங்களை வளைத்துள்ளன. இந்தியாவில் கொள்ளை லாபம் கொழிக்கும் தொழில், ரியல்எஸ்டேட் என்பதால் இந்த தொழிலில் பல நிறுவனங்கள் நுழைந்துள்ளன.
ஆட்சி அதிகாரத்தில் அமர ஒரு முறை வாய்ப்புத் தாருங்கள், கர்நாடகாவின் முகவரியை மாற்றிக்காட்டுகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிஜேபி என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகி வருகிறது. மற்ற கட்சிகளை விட வித்தியாசமான கட்சி பிஜேபி என்று அக்கட்சியினர் சொல்வதற்கு இதுதான் அர்த்தம் போல ஆக மொத்தம் எல்லோருமே திருடங்க தான்

8 comments:
//எல்லோருமே திருடங்க தான்//
சரி தான்..
எல்லரும் திருடங்க இல்லை ... ஆதாரம்/சாட்சி கிடைக்கிறமதிரி வச்சு தப்பா தொழில் தெரியாம திருடினவன்.. திருடில் மாட்டிகிட்டவன், அதிலும் செல்வாக்கு பலம் இல்லாம மாட்டின தப்பிக்க தெரியாம இல்ல முடியாம மட்டிக்கிட்டவ்ன் மட்டும் தர்ன் திருடன்.
பல அரசியல் பிரபலஙகளின் சொத்து எப்படி 1 , 2 பதவி காலதுதுல 1000 மடங்கு ஆகுது ? .. பசிக்கு பைப் தண்ணிய குடுச்சவங்க எப்படி பல தொழில் அதிபரகுறஙக ? .. அவங்களை திருடன்னு சொல்லுறங்களா ? தலைவர் . அது இது என்னென்னமொ சொல்லுராஙக...
அதனால எல்லரும் திருடன் இல்ல.. பலர் தலைவர்களும் இருக்கங்க..
Hi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....
www.ellameytamil.com
ஹ ஹ...சரியான தலைப்பு ஆ.ஒ !! நெத்தியடி...)))
எல்லோர் பொழப்பும் நாறிப்போச்சு
திருடுவதர்க்கே நாட்டில் கட்சி ஆரபிக்க படுகிறது... காங்கிரசின் தலிவி சோனியாவின் இன்றைய சொத்து மதிப்பு சுவிஸ் வங்கியில் மட்டும் ஒருலட்சம் கோடியை தாண்டி விட்டது , எல்லாம் விதி என்று விட்டு விட முடியாது,

Post a Comment