Wednesday, March 30, 2011

மாத்தி யோசி

இந்தியாவிலேயே ஆச்சரியத்தைக் கொடுக்கும் திறன் ஒருவருக்கு உண்டென்றால், அவர், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி என உறுதியாகச் சொல்லலாம். அரசு நிர்வாகத்தின் அத்தனை மரபுகளையும் உடைத்தெறிவதில் முதலிடம். இழுத்தடிப்பு, பொறுப்பற்றத்தன்மை, சோம்பல், லஞ்சம் என, அரசு நிர்வாகத்தின் அவலட்சணமாக அறியப்பட்ட அனைத்தையும் தகர்த்து.இன்று, ஆசியாவிலேயே, 24 மணி நேரமும் தடையற்ற, தரமான மின்சாரம் வழங்கும் ஒரே மாநிலம் குஜராத் தான்.

மாநிலம் முழுவதும், 2,200 கிலோ மீட்டருக்கு எரிவாயுக் குழாய் இணைப்பு, தண்ணீர் பற்றாக்குறை கிடையாது.ஒவ்வொரு குக்கிராமத்திலும், அதிவேக இனணய தள இணைப்பு, ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ம் தேதி, மாநிலத்தில் உள்ள, 1.5 கோடி மாணவர்களுடன், தலைநகரில் இருந்தபடியே உரையாடுகிறார். முதல்வர் அலுவலகத்திலும் வீடியோ கான்பரன்சிங் வசதி உள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக, மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி இரட்டை இலக்கத்திலேயே உள்ளது. விவசாயத்தில் தொடர்ந்து 9.5 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது, தேசிய சராசரியை விட மூன்று மடங்கு அதிகம். வைர வர்த்தகத்தில் குஜராத் தான் முதலிடம். மாநிலத்தில் தொழில் தகராறுகள் இல்லை; தொழிலாளர்கள் பிரச்னை இல்லை இதனால், 10 ஆண்டுகளாக தொழில் துறை, 12 சதவீதம் வளர்ச்சி கண்டு வருகிறது மாநிலத்தின் மொத்த வருவாயில், 30 சதவீதம் தொழிற்சாலைகள், 30 சதவீதம் விவசாயம், 30 சதவீதம் சேவைத் துறைகள்,என்று கலக்குகுகிறார். மோடி முதல் முறை முதல்வராக பொறுப்பேற்றபோது, குஜராத் மாநிலம் தண்ணீர் பற்றாக்குறை மாநிலமாகத் திகழ்ந்தது. மின்சார பற்றாக்குறை நிலவியது. நிதிப் பற்றாக்குறையும் இருந்தது.

இன்று தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளது. மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு வினியோகிக்கிறார்கள். நிதி நிலைமையில் உபரி மாநிலமாக உயர்ந்துள்ளது.குஜராத் அரசு இதுவரை ஏகப்பட்ட விருதுகளைப் பெற்று இருக்கிறது. முதல்வர் அலுவலகத்துக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது முதல்வர் அலுவலகத்தின் வெளிப்படைத்தன்மை, பொறுப்பு, அணுகுமுறைக்காக இந்த விருது கிடைத்துள்ளது

இந்தியாவில் அதிகம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் குஜராத் மாநில அரசின் பங்கு, 78 சதவீதம். மொத்த இந்தியாவின் மற்ற அனைத்து மாநிலங்களும் சேர்ந்து, 22 சதவீதம் தான். இதற்கு முக்கிய காரணம், சிறு மற்றும் குறுந்தொழில்களில் அவர்கள் கவனம் செலுத்துவது தான்.

கடந்த 2009ல், உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி நிலவிய நேரத்தில்,12 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான வாக்குறுதிகளைக் கவர்ந்தது; 8,663 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இது போன்று நம் மாநிலத்துக்கு ஒரு முதல்வர் கிடைக்காதா, இந்த பாழாய் போன திராவிட கட்சிகளுக்கு வாக்களித்து வாக்களித்து அவர்கள் அடித்த கொள்ளைகள், சொல்லிமாளாது. இந்த திராவிட கட்சிகளுக்கு மாற்று என்ன.......? கொஞ்சம் மாத்தி யோசிப்போமே.

3 comments:

ராஜ நடராஜன் said...

//இன்று, ஆசியாவிலேயே, 24 மணி நேரமும் தடையற்ற, தரமான மின்சாரம் வழங்கும் ஒரே மாநிலம் குஜராத் தான்.//

அதற்கான காரணம் மின்சாரம் இலவசமில்லை.

எவ்வளவு வேணுமின்னாலும் உபயோகி.ஆனா காசு கொடு கோட்பாடு.

ராஜ நடராஜன் said...

பிரகாஷ் என்ற தி.மு.க சார்பான ஆனால் தான் தி.மு.க இல்லையென்று சொன்ன பின்னூட்டக்காரர், செங்கோவியின் பதிவில் குறிப்பிட்டிருந்தது கவனிக்க வேண்டிய ஒன்று.

பிரகாஷ் என்ன சொன்னார்ன்னா குஜராத்தியர்கள் வியாபாரங்களில் ஈடுபட்டவர்களாகவும்,மேற்கத்திய நாடுகளில் வசித்து முதலீடுகளை குஜராத்தில் செய்தவர்கள் என்பதால் குஜராத் வளர்ச்சிக்கு நரேந்திர மோடியோடு இவர்களும் காரணம்ங்கிற பொருள்பட சொல்லியிருந்ததில் உண்மை இருக்கிறதென்றே நினைக்கின்றேன்.

தமிழகத்தில் அதுமாதிரியான நிலை இல்லாவிட்டாலும் உற்பத்தியாளர்களால் உருவாக்கப்பட்ட சந்தை என்பதால் மின்சாரம் உற்பத்திப்பொருள் என்பதாலும்,சந்தை உபயோகிப்பாளர்களின் தேவை என்ற அடிப்படையிலேயே மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.

மீண்டும் தி.மு.கவே ஆட்சிக்கு வரும் நிலையேற்பட்டாலும் இலவசப் பொருளாதார கோட்பாட்டை விட்டு சந்தைப் பொருளாதாரத்திற்கு மாற முயற்சிப்பதும் பரிட்சித்துப் பார்ப்பதும் அவசியம் என்பேன்.

ஆயிரத்தில் ஒருவன் said...

இலவசம் தேவையில்லை, தேவை தரமான, தடையற்ற, சீறான மின் வினியோகம். இலவசம் என்றால் பிச்சை என்று கருதுபவன் நான் இந்த திராவிட கட்சிகள் நமக்கு நிறைய பிச்சைகள் போடுவதாய் தேர்தல் அறிக்கைகளில் கூறியுள்ளது