உணவுத்தட்டுப்பாடு காரணமாக மொசாம்பிக் நாட்டில் நடந்த கலவரத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அந்தப் பின்னணியில் எப்ஏஓ கூட்டம் ரோம் நகரில் கடந்த மாதம் கூட்டப்பட்டது. அதில் உலக அளவில் உணவுப்பொருள்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்து வருவது பற்றி விவாதிக்கப்பட்டிருக்கிறது. இப்போதைய விலை உயர்வு இரண்டு முக்கியக் காரணங்களால் ஏற்பட்டுள்ளது என்றும் . ஒன்று, இயற்கைச் சமநிலைகளில் ஏற்பட்டுள்ள சீர்குலைவுகள். அதையும் விட முக்கியமான இன்னொரு காரணம், வர்த்தக உலகின் பங்குச்சந்தை சூதாட்டம் என்று அக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐ.நா. அமைப்பிற்கு உணவு நிலைமைகள் குறித்த ஒரு அறிக்கை இந்தச் சூதாட்டத்தின் பயங்கரத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. புதிய நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் உணவுச் சந்தையில் (ஊகபேர) நீர்க்குமிழிகள் உருவாகியதால் உணவு தானியங்களின் விலைகள் உயர்ந்தன என்றும், உணவுச் சரக்குகளின் இருப்பும் நிலையற்றதாக மாறியது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இணையத் தொடர்பு, வீடுகள் கட்டுமானம், பங்குச் சந்தை போன்ற இதர வளமான துறைகள் வறண்டுபோய்விட்டன. ஒவ்வொரு துறையிலும் நீர்க்குமிழி போன்றிருந்த பொருளாதார நிலைமை வெடிக்க வெடிக்க, இதுவரை உணவுத்துறையில் ஈடுபடாத முதலீட்டாளர்கள், இப்போது இதற்கு மாறுகிறார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாளித்துவ லாப வேட்டையில், குறிப்பாக இன்றைய உலகமயச் சூறையாடல் சூழலில் மனிதர்களின் உயிர் வாழ்வுக்கு முக்கியமான உணவு தானியங்கள், பன்னாட்டு வர்த்தகச் சூதாடிகளின் பகடைக்காய்களாக மாற்றப்பட்டிருப்பதையே இந்த அறிக்கை காட்டுகிறது.
உணவு தானியச் சந்தையில் ஊக பேர சூதாட்டம், ஆன்லைன் வர்த்தகம் போன்றவற்றை அனுமதித்தது, மக்களின் பசியோடு விளையாடவே வழிவகுத்திருக்கிறது என்பதை மத்திய அரசு இனியாவது புரிந்து கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் போனால் போகட்டும் போடா என்று இருந்துவிட்டால் மொசாம்பிக் போன்ற நிலைமைகள் ஒவ்வொரு நாட்டிலும் ஏற்படும். அதைத் தடுத்து நிறுத்துவதற்கான உருப்படியான முயற்சிகளில் ஈடுபடுவது அவசியம். அதற்கேற்ற கொள்கைகளை உடனடியாக வகுக்க வேண்டும்.
2 comments:
ஆதங்கம் உண்மை..!!
your rank is gradually moving. Best wishes
Post a Comment