மதுரையில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு உயிர் இழப்புகள் தொடர் கதையாகி வருகிறது தினமும் பல ஆயிரம் மக்கள் வந்து செல்லும் மத்திய பேருந்து நிலையத்தில் மட்டும் அடுத்தடுத்து இரண்டு முறை தீ விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது
விபத்தில் 15 பேர் காயம் அடைந்துள்ளனர் ஒருவர் உயிரிழந்துள்ளார். . அடுத்தது அதிக நெரிசல் மிகுந்த குட்ஷெட் தெருவில் ஒரு நாலு மாடி வணிக வளாகத்தில் ஏற்ப்பட்ட தீ விபத்து இதில் உயிரிழப்பு இல்லை பொருட்சேதம் மட்டுமே, விபத்துகான காரணம் மின் கசிவு என்று கூறப்பட்டது
அடுத்தது வாடிப்பட்டி அருகே நாலு வழி சாலையில் அரசு பேருந்தும் ஒரு மகிழுந்தும் நேருக்கு நேர் மோதியதில் மகிழுந்து தீ பற்றியது
இதில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த மூவர் உடல் கருகி பலியாகினர் இது போல இன்னும் நிறைய உள்ளது. தீ விபத்து சில நொடி பொழுதுகளில் நிகழ்ந்து விடுகிறது அதனால் ஏற்படும் இழப்போ ஈடு செய்ய முடியாதது அதிலும் உயிரிழப்புகள் எதை கொண்டு ஈடு செய்வது மாண்டார் திரும்புவரோ.....? தீ விபத்து நாம் நாள்தோறும் செய்திகளில் பார்க்கும் தொடர்கதை போல் ஆகிவிட்டது.
கும்பகோணம் பள்ளி தீ விபத்தாகட்டும், தர்மபுரி பேருந்து எரிப்பு சம்பவமாகட்டும், ராமநாதபுரம் மனநல காப்பகத்தில் ஏற்ப்பட்ட தீ விபத்தாகட்டும், கோத்ரா தொடர்வண்டி எரிப்பு சம்பவமாகட்டும், நாம் அனைத்தையும் படித்துவிட்டு, முடிந்தால் சிறிது நேரம் மௌன அஞ்சலி செலுத்தி விட்டு நம் வேலையை தொடருவோம் .........
ஏன் நம் வீட்டிலோ அல்லது நாம் பணிபுரியும் இடங்களிலோ இது போன்று நடக்க வாய்புகள் இல்லையா......?
வீட்டில் சமையல் செய்யும் போதோ இல்லை மின் கசிவு ஏற்படடு விபத்து நடக்க வாய்ப்புகள் நிறைய இருக்கிறது.
கும்பகோணம் பள்ளி விபத்து நடந்து எத்தனை வருடங்கள் ஆகின்றது நம்மில் யாராவது நமது பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் தீ தடுப்பு சாதனங்கள் இருக்கின்றனவா என்று பார்த்திருப்போமா........? இல்லை நம் ஊரில் இருக்கும் பேருந்து நிலையங்களில், தொடர் வண்டி நிலையங்களில் ஏன் நாம் பயணம் செய்யும் பேருந்துகளில் இருக்கிறதா என்று தான் பார்த்திருப்போமா......?
இத்தனை விபத்துக்களிலிருந்து நாம் என்ன தான் அறிந்து கொண்டோம்
ஒரு சின்ன தீ தடுப்பு சாதனம் இருந்திருந்தால் இத்தனை உயிர்களை
நாம் இழந்திருக்க வேண்டியதில்லை கும்பகோணம் பள்ளியில்
ஒரு தீ தடுப்பு சாதனம் இருந்திருக்குமேயானால் அந்த கோர
நிகழ்வு நடந்திருக்காது
தர்மபுரியில் எரிந்த பேருந்தில் ஒரு தீ தடுப்பு சாதனம் இருந்திருக்குமேயானால் விபத்தை தடுத்திருக்கலாம்
வாடிப்பட்டி அருகே நடந்த விபத்தில் பேருந்திலோ அல்லது
மகிழுந்திலோ இருந்திருந்தால் அந்த மூன்று உயிர் காப்பற்றபட்டிருக்கும் இனி மேல் இது போன்று விபத்துகள் நடக்காமலிருக்க
இப்பொழுதே நம் வீட்டில் ஒரு தீ தடுப்பு சாதனம் முதலில் நிறுவுவோம்
நம் வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த பொருட்களை எப்படி பிறரிடம் பெருமை பட கூறி மகிழ்வோமோ
அது போல இதையும் காட்டி பிறரிடம் பெருமை கொள்வோம்.
அது ஒன்றும் பெரிய விலையில் இல்லையே நம் உயிரை நம் வீட்டை காக்கும் அந்த சாதனம் எத்தனை விலையில் இருந்தால் தான் என்ன....?
உயிரின் மதிப்பை விட கம்மி தான்
இந்த பதிவை படிக்கும் நீங்கள் நான் கூறியது சரி என்று நினைத்து
ஒருவர் அந்த சாதனத்தை வாங்கி வைத்தால் கூட எனக்கு மகிழ்ச்சியே
இலவச தொலைக்காட்சி, எரி வாயு அடுப்பு, 1 ருபாய்க்கு அரிசி, மலிவு விலையில் மது, தேர்தலில் வாக்களிக்க பணம் கொடுக்கும் அரசு வீட்டுக்கு வீடு ஒரு தீ தடுப்பு சாதனம் இலவசமாகவோ அல்லது சலுகைவிலையிலோ கொடுத்தால் மிகுந்த மகிழ்ச்சி.......... வீட்டில் ஒரு தீ தடுப்பு சாதனம் இருந்தால்
தீப்பிடிக்க......தீப்பிடிக்க பயயமில்லை தானே
பதிவு நன்றாக இருந்தால் பின்னூட்டம் அல்லது வக்களிக்கலாம்
3 comments:
விமர்சனங்கள் வரவேற்க்கப்படுகின்றன
nice post, we can buy and have, its not expensive or can have sand bucket
அருமை பாஸ்
Post a Comment