Thursday, August 5, 2010

1...2...3...4...

பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை நம்மை பாடாய் படுத்தி எடுப்பது சாதி
பள்ளி சேர்வதில் தொடங்கி வேலை வாய்ப்பு,
சமூகத்தில் ஏற்ற தாழ்வு,
ஏன் வீடு வாடகைக்கு கேட்டால் கூட சாதி தேவைப்படுகிறது,
இன்றைய அரசியல் கட்சிகள்  சாதிகளை வைத்து தான் அரசியலில் காலம் தள்ளி கொண்டிருக்கிறது.

அத்தனை அரசியல் கட்சிகளும் பாரபட்சமின்றி இந்த சாதி உணர்வுகளை கொண்ட கட்சிகளே இதில் திராவிட கட்சிகள் என்று பிதற்றிக்கொள்ளும் இரு கட்சிகள் தொகுதிக்கு தொகுதி ஒவ்வொரு நிலைப்பாடு கொண்டவை
ராமதாசு, திருமா, கிருஷ்ணசாமி, சேதுராமன், பெயர்கள் முழுவதும் சொல்ல இடம் போதாது பெயர் குறிப்பிட்ட இந்த நால்வரில் மூவர் மருத்துவர்கள் அது தான் மிக கொடுமையானது

இவர்கள் முன்னர் மருத்துவம் பார்திருக்கும் போது எந்த நோக்கோடு பார்த்தார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
சாதிகள் இல்லையடி பாப்பா என்றார் மகா கவி.
அடுத்து வந்த தந்தை பெரியார் சொல்லாத கருத்துக்களா அவர் வழி வந்ததாக கூறி கொள்ளும் மஞ்சள் துண்டு தலைவர் பெரியார் சொன்ன வார்தைகளில் ஒன்றை கூட பின்பற்றியதாக தெரியவில்லை
மாறாக சாதி தீயை கொளுந்து விட்டு எறிய செய்திருக்கிறார் என்பதே நிதர்சனமான உண்மை.

சமீபத்தில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கொடுக்கவில்லை என்றால் ராஜஸ்தானில் நடைபெற்ற போராட்டங்கள் போல் இங்கேயும் நடைபெறும் என்று கூறியிருக்கிறார்.
ஆக இவர்கள் வன்னியருக்கு மட்டுமே சலுகை பெற்றுத்தர கட்சி நடத்துபவர்கள் இப்படி ஒவ்வொரு சாதியை வைத்து  தனித்தனியே பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகள் சாதித்தது என்ன....?
 மக்கள் அடைந்த பலன் தான் என்ன.......?
ஒரு மயி....ம் இல்லை சரி சாதியை தாண்டி அரசியல் செய்து அனைத்து தரப்பினரையும் முன்னேற்ற ஒரு வழி உள்ளது
இது சாதியை தாண்டி வருபவர்கள்,

சாதியை வேரோடு ஒழிக்க நினைக்கும் முற்போக்கு கருத்துக்கள் கொண்டவர்கள்  மட்டுமே ஏற்றுக்கொள்ளகூடியதாக இருக்கும்.
நம் அரசு ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு பெயர் வைத்து அதை வைத்தே சலுகைகள், இடஒதுக்கீடு என அனைத்தையும் செய்கிறது
அதற்கு பதிலாக, பெயரை நீக்கிவிட்டு 1...2...3...4... என எண்கள் கொடுத்து அதே சலுகைகளை தொடரலாம்.

சமூகத்தில் இந்த சாதி பெயரை சொல்லி திட்டுதல், சாதிக்கொடுமை போன்ற பிரச்சனைகள் இருக்காது சமூக ஏற்ற தாழ்வும் சாதியை வைத்து பார்க்கபடாது காலப்போக்கில் இந்த எண்களே பிரதானமாகி போகும்
பிறகு, அதுவும் காணாமல் போகும். இதை நடைமுறை படுத்துவது அவ்வளவு சுலபம் அல்ல என்பதை மறுக்க முடியாது

ஆனால் இதை விடுத்து ஒரு வழி இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. நீங்கள் எளிதில் மதம் மாற முடியும் ஆனால் நீங்கள் சாதி மாற முடியுமா.....? சாதி பிரச்சனை தீர ஒரே வழி 1...2...3...4...

4 comments:

a.chandarsingh said...

;;;அதற்க்கு பதிலாக பெயரை நீக்கிவிட்டு 1...2...3...4... என எண்கள் கொடுத்து அதே சலுகைகளை தொடரலாம். சமூகத்தில் இந்த சாதி பெயரை சொல்லி திட்டுதல், சாதிக்கொடுமை போன்ற பிரச்சனைகள் இருக்காது சமூக ஏற்ற தாழ்வும் சாதியை வைத்து பார்க்கபடாது காலப்போக்கில் இந்த எண்களே பிரதானமாகி போகும் பிறகு அதுவும் காணாமல் போகும். இதை நடைமுறை படுத்துவது அவ்வளவு சுலபம் அல்ல என்பதை மறுக்க முடியாது ஆனால் இதை விடுத்து ஒரு வழி இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. நீங்கள் எளிதில் மதம் மாற முடியும் ஆனால் நீங்கள் சாதி மாற முடியுமா.....? சாதி பிரச்சனை தீர ஒரே வழி 1...2...3...4...;;;;;;;;

migavum oru arumaiyaana idea.

this is possible

ஆயிரத்தில் ஒருவன் said...

எனது தளத்தை பார்வையிட்டு கருத்து சொன்னதற்க்கு மிகவும் நன்றி தொடர்ந்து தளத்தை பார்வையிடவும்

Hussain Muthalif said...

இதை ஏற்கனவே முதல்வன் படத்தில் ஷங்கர் சொல்லிட்டாரு...
அர்ஜுன் டயலாக்-ல .... எல்லா சாதியையும்...FC...BC...MBC..SC..னு...நாலு பேர்ல..மட்டும் குறிப்பிடனும்....நாளை...நாலு ரெண்டாகும்...ரெண்டு....ஒன்னாகும்..னு..
இருந்தாலும்...//"இவர்கள் மருத்துவம் பார்த்தபோது என்ன எண்ணத்துல பார்தான்களோ"// பதிவு நன்றாக உள்ளது

ஆயிரத்தில் ஒருவன் said...

எனது தளத்தை பார்வையிட்டு கருத்து சொன்னதற்க்கு மிகவும் நன்றி Hussain Muthalif FC...BC...MBC..SC..னு பிரிச்சாலும் சாதி வித்தியாசம் பார்ப்பது மறையாது என்பதே என் தாழ்வான கருத்து அதற்க்கு ஒரே வழி 1...2...3...4...