முன்பு 80 போலிஸ்காரர்களை சுட்டு கொன்ற போதே அரசுகள் விழித்திருக்க வேண்டும். ரயில் கவிழ்ப்புக்கு பிறகாவது தீவிரவாதிகள் மீதான தாக்குதல்களை துரித படுத்தியிருக்க வேண்டும். எதுவும் செய்யாமல் விட்டுவிட்டு இப்போது பேச்சுவார்தைக்கு தயார் என்று அறிவித்துள்ளது பீகார் அரசு. நாட்டில் பயங்கரவாதம் அதிகரிக்க மத்திய, மாநில அரசுகளும், தீவிரவாதிகளும் தான் காரணம். பிணைக் கைதியாக பிடித்துச் சென்ற 4 போலீஸ்காரர்களில் ஒருவரை நக்சலைட்கள் கொடூரமாக கொன்றிருக்கிறார்கள் நடந்த சம்பவம் மிகவும் வருத்தபட வேண்டியது. இந்தப் படுகொலையை யாரும் ஆதரிக்க மாட்டார்கள். பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக மாவோயிஸ்டுகள் பல முறை அறிவித்தும். அவற்றை எல்லாம் அரசுகள் காதில் வாங்கி கொள்ளவில்லை போலீசார் மற்றும் துணை ராணுவப் படையில் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் தான், நக்சலைட்களின் தாக்குதலுக்கு இரையாகின்றனர். தீவிரவாதிகள் தயவு காட்டினால் தான், போலீசார் வாழ முடியும் என்ற சூழ்நிலையை மத்திய, மாநில அரசுகள் உருவாக்கிவிட்டன. இதுபோன்ற படுகொலைகள் தொடர்வது தடுக்கப்பட வேண்டுமென்றால், நக்சலைட்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அரசு தொடர்ந்து அமைதியாக இருந்தால், சாதாரண மக்கள் தான் பாதிக்கப்படுவர். ஒருவேளை பேச்சு வார்த்தை தொடங்கி பேசுகிறேன்... பேசுகிறேன் என்று இழுத்து அடிக்காமல் ஒரு முடிவை ஏற்படுத்த வேண்டும். இல்லை என்றால் தக்குதல்களை தீவிரபடுத்தி அவர்களை ஒடுக்க வேண்டும்.
3 comments:
thanks. i think the government will talk and take steps to stop such killings. good post. thanks for sharing.
தளத்தை பார்வையிட்டு கருத்துரையிட்டதற்கு நன்றி மதுரை சரவணன் தொடர்ந்து தளத்தை பார்வையிடவும்
அப்பாவிகள் பலிகடா ஆக்கப்படுவது தொடரும் நிதர்சனம்...
Post a Comment