காமன்வெல்த் போட்டிகளில் ஊழல் எனச் செய்திகள் குவிகின்றன. ஆனால், சுரேஷ் கல்மாடியும் அரசு அதிகாரிகளும், அசருவதாகத் தெரியவில்லை. சுகாதாரம், சுத்தமின்மை, பயங்கரவாத அச்சுறுத்தல், படுக்கை அறையில் தெரு நாய், குளியலறையில் குரங்குத் தொல்லை எனக் காரணம் காட்டி, சில நாடுகள் மூட்டை கட்டிச் சென்று விட்டன முடிவில் விளையாடப் போவது, இந்தியாவும், இந்தியாவின் நட்பை நாடும் ஓரிரு நாடுகள் மட்டுமே இதனால், இந்தியர்கள் அதிக அளவில் பதக்கம் வெல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையே காரணம் காட்டி, இந்திய அரசு, இந்த ஆட்சியில் விளையாட்டுத் துறை முன்னேறி உள்ளது என பக்கம் பக்கமாய் விளம்பரம் செய்து புளகாங்கிதம் அடையும்
காமன் வெல்த் போட்டிகளில் முறைகேடுகள் நடைபெறுவதாக ஆரம்பத்திலிருந்தே ஊடகங்கள் தெரிவித்து கொண்டுதான் இருக்கிறது எத்தனை பேர் எத்தனை முறை குற்றம் சாட்டினாலும் கூறினாலும் அதை எல்லாம் பிரதமர் கண்டு கொள்வதாய் இல்லை, அடிக்கும் கொள்ளையில் பங்கு வைத்து பகிர்வதால் அது பற்றி எல்லாம் கேள்வி எழும்போது ஊழல் நடைபெறவில்லை என்று ஒரே பதிலை தயாராக வைத்திருக்கிறார் பிரதமர். ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆகட்டும், மருத்துவ கவுன்சில் முறைகேடாகட்டும், காமன்வெல்த் முறைகேடாகட்டும், தொடர்ந்து நடக்கும் ரயில்வே விபத்துகாளாகட்டும், அனைத்திற்கும் ஒரே பதில். 15000 கோடி ருபாய் பெறுமானமுள்ள உணவு தானியங்களை கிட்டங்கிகளில் வீணடித்த சரத்ப்வார் கூட வெட்கமில்லாமல் காமன்வெல்த் முறைகேடுகளை கிண்டலடித்திருக்கிறார். எல்லாம் நீ பாதி நான் பாதி என்ற கொள்கையில் அரசும், ஊழல் வாதிகளும் இணைந்திருப்பதால் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது. இளைஞர்களுக்கு இந்த கிழட்டு சிங்கங்கள் வழி விட்டால் தான் இதற்கு ஒரு முடிவு ஏற்படும் என்பதே உண்மை.
3 comments:
உண்மை நண்பரே....
சமூக சிந்தனை சார்ந்த பதிவு.நண்பா,கமெண்ட் போட தடை ஏன்?இது அவசர உலகம்.வோர்டு வெரிஃபிகேசன் எடுக்கவும்.
நண்பர் சி.பி.செந்தில்குமார் அவர்களுக்கு... வோர்டு வெரிஃபிகேசன் ஒரு தடையில்லை... பதிவர்களின் பாதுகாப்புக்கு தான். அது இல்லை என்றால் ஹேக்கர்ஸ்(hackers) நினைத்தால் ஒரு நிமிடத்தில் உங்கள் ப்ளாக்கையே(blog) இல்லாமல் செய்துவிடலாம்...
Post a Comment