ஐ.நா.,வின் நீர், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பல்கலைக்கழகம் ஓர் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மக்கள் தொகையில், உலகின் இரண்டாவது இடத்தில் உள்ள நம் நாட்டில், சுகாதாரமான கழிப்பறைகளை பயன்படுத்துபவர்களை காட்டிலும், மொபைல் போனை பயன்படுத்துபவர்கள் அதிகமாக உள்ளனராம்.. நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் இந்தியாவில், 54 கோடியே 50 லட்சம் பேர் மொபைல் போன்களை பயன்படுத்தி வருகின்றனராம். இது மொத்த மக்கள் தொகையில் 45 சதவீதம்.அதே நேரத்தில், 31 சதவீதமான 36 கோடியே 60 லட்சம் மக்கள் மட்டுமே நவீன கழிப்பறையை பெற்றுள்ளனர். ஒரு கழிப்பறைக்கு 13 ஆயிரத்து 500 ரூபாய் வீதம் இந்தியாவில் உள்ளவர்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் கழிப்பறைகள் கட்ட 16 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது சரி இந்த ஆய்வு முடிவை நம்ம ஆட்சியாளர்கள் பார்த்தால் போதும் உடனே உலக வங்கியிடம் இந்த புள்ளி விவரத்தை காட்டி கடன் பெற்று பங்கு பிரித்து உலகில் இந்த கொடுமையெல்லாம் வேறு எங்கும் நடக்காது.
3 comments:
உங்க ஆதங்கம் முழுக்க முழுக்க உண்மை..இன்னும் கிராமங்களில் புறம்போக்கு நிலம்,வயக்காடு தான் அவங்களுக்கு கழிவறை..என்னத்தை சொல்ல ஆயிரத்தில் ஒருவன்?/
நீங்க கமெண்ட்ஸ் பக்கம் வரும் wordverification ஐ settings போயி எடுத்து விட்டுருங்களேன் பா..கமெண்ட்ஸ் போடும்போது a,b,c,d எல்லாம் டைப் பண்ண சொல்லி உயிரவாங்குது..ஏற்கனவே நான் அதில் வீக்..நீங்க அதை மட்டும் remove பண்ணிட்டால் கமெண்ட்ஸ் போட இன்னும் ஈசி யா இருக்கும்...ஓகே வா ??
தளத்தை பார்வையிட்டு கருத்திட்டமைக்கு நன்றி ஆனந்தி வேர்டு வெரிஃபிகேஷன் தடையை நீக்கப்பட்டது
Post a Comment